திங்கள், 29 அக்டோபர், 2012

நான் பதிவரானது எப்படி?


நான் பதிவரானது எப்படி?

இன்டர்நெட் இணைப்பு பெற்ற
இரண்டு ஆண்டுகளுக்கு பின்தான்
வலைபதிவுகளை பார்க்க நேரிட்டது.

அந்த இணைப்பை பெறுவது எளிது
என்று அறிந்ததும் செப்டம்பர் 2008 ல் கண்காட்சி
என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு துவங்கிவிட்டேன்

அதில் என் மனதில் பூட்டி வைக்கப்பட்ட
 எண்ணங்களையும், கருத்துக்களையும்
 படங்களுடன் வெளியிட ஆரம்பித்தேன்.

 நான் படித்த ஏராளமான ஆன்மீக புத்தகங்களின்
 தாக்கம் என் மனதில்
 பல கருத்துக்களை தோற்றுவித்திருந்தது .
அவற்றை வெளியிட DIVINEBLISS என்னும்
ஒரு வலைப்பதிவை அக்டோபர் 2008 ல் துவக்கினேன் .

நவம்பர் 2008 ல் ஆத்திகமும் நாத்திகமும்
என்ற பெயரில் மற்றொரு வலைப்பதிவை துவக்கினேன்

வலைத்தளத்தில் சினிமா,அரசியல்,சாதீயம்,
பெண்ணீயம்,ஈழப்ப்ரசினை
எழுத்தாளர்களின் பனிப்போர் போன்ற
விஷயங்கள்தான் அதிகம் வாசகர்களை பெறுகின்றன
நான் அதில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை

எனவே என் வலைபதிவிற்கு
வாசகர்களும் பின்னூட்டம் இடுபவர்களும்
மிக மிக குறைவு.

நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
எனக்கு இந்த உலகத்திற்கு பயனுள்ள
கருத்துக்களை வெளியிடுவதோடு
என் கடமைகளை முடித்த திருப்திபோதும்
என்ற மனநிலையில் நான் இருந்தேன்.

இன்றைய நாள் வரை அவ்வப்போது
என்னுடைய கருத்துக்களை
பதிவு செய்து கொண்டு இருக்கிறேன்.

கண்காட்சி-இடுகைகள் 123 வருகைகள்-1040 .

DIVINEBLISS-இடுகைகள்-165 வருகைகள் -20

ஆத்திகமும் நாத்திகமும் -இடுகைகள்-13     வருகைகள்-235 

ஆனால் இத்தோடு நான் நிற்கவில்லை
மீண்டும் கூடுதலாக பதிவுகளை
துவக்க நினைத்தேன் (இன்னும் வரும்)

4 கருத்துகள்:

  1. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி DD
      தொடர் இன்னும்
      முடியவில்லை

      நீக்கு

  2. நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
    எனக்கு இந்த உலகத்திற்கு பயனுள்ள
    கருத்துக்களை வெளியிடுவதோடு
    என் கடமைகளை முடித்த திருப்திபோதும்
    என்ற மனநிலையில் நான் இருந்தேன்.//

    என்னுடைய மன நிலையும் அதுவே
    அருமையாக சொல்லிப் போகிறீர்கள்
    எண்ணிக்கை எப்போதும் ஒரு மாய வலையே
    அதில் சிக்காதவரை பிரச்சனையில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சிந்தனைக்கு
      அடிப்படை காரணம்
      பகவான் கீதையில் முழங்கியுள்ள
      அறிவுரைகளே என்று நான் நம்புகிறேன்.

      கடமையை செய்.
      பலனை எதிர்பாராதே என்ற
      வரிகள்தான் அவை.

      அதுதான் நம்மை ஏமாற்றங்களிலிருந்தும்,
      அவமானங்களிலிருந்தும்
      இழப்புகளின் துன்பங்களிலிருந்தும்
      நம்மை அழிந்து போகாமல் காத்து
      நம்மை மீண்டும் எழுந்து
      நிற்க வைக்கும் ரகசியம்.

      வருகைக்கும்
      கருத்துகளுக்கும் நன்றி .

      நீக்கு