திங்கள், 1 அக்டோபர், 2012

தீவிரவாதிகளும் மதவாதிகளும் (பகுதி-2)


தீவிரவாதிகளும் மதவாதிகளும் (பகுதி-2)
அண்ணே அது  சரி
 மதவாதிங்கன்னா யாரு?

ஒருவர் தான் சார்ந்துள்ள மதம்தான் கடவுளை காட்டும் என்றும்
மற்ற மதங்களின் கோட்பாடுகள் சரியற்றவை என்றும் 
மற்ற மதத்தினரோடு வாதம் செய்பவர்களை மதவாதி என்று சொல்லலாம்

மதவாதிகளில் மந்திரவாதிகளும் உண்டு,தந்திரவாதிகளும் உண்டு 
எந்திரவாதிகளும் உண்டு .சுயநலவாதிகளும் உண்டு 
எல்லோரும் மனித குலத்திற்கு எதிராக செயல்படும் தீய சக்திகள்தான் 
அதில் மட்டும் அனைவரும் ஒன்று.  

அந்த காலத்தில் நம் நாட்டில்நிலவி வந்த  மதங்களில் 
 மதத்தில் உள்ள பல்வேறுபிரிவுகளை 
சேர்ந்தவர்களின் தலைவர்கள் தங்கள் கொள்கைகளை 
வலியுறுத்தி வாதம் செய்வார்கள். 
வாதத்தில் வெற்றி பெற்றவர்களின் 
தோல்வியுற்றவர்களை தண்டித்ததும்  உண்டு. 
அவர்களின் வழிபாட்டு தலங்களை அழித்ததும் உண்டு.

சில மதத்தினர் ஆளும் அரசர்களின் துணையுடன்
மக்களை மத மாற்றம் செய்ததும் முண்டு. 

காலபோக்கில் தாங்களாகவே 
மனமுவந்து மதம் மாறியவர்களும் உண்டு.

மக்கள் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக 
இருந்தாலும் அவரவர் கொள்கைகளில் மற்றவர் 
தலையிடாதவரைக்கும் நாட்டில் அமைதி நிலவி வந்தது. 

ஆனால் மத வெறியர்கள் ஒவ்வொரு மதத்திலும்
ஒவ்வொரு கால கட்டத்திலும் தோன்றி 
ஒருவருக்கிடையே மோதலை தூண்டியும், 
வெறுப்பை வளர்த்தும் மக்களின்  
அமைதியை குலைத்து வருவது இன்று மட்டுமல்ல
 உலகில் மதங்கள் தோன்றிய நாள் 
முதல்  இதே நிலைமைதான்.

அன்று தொலை தொடர்பு சாதனங்கள் கிடையாது 
அதனால் குழப்பம் விளைவிக்க பல ஆண்டுகள் பிடித்தன 
மக்கள் அதுவரைக்கும் சில காலமாவது 
நிம்மதியாய் வாழ்ந்து வந்தனர் 

இப்போது கண் இமைக்கும் 
நேரத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு
கண்ணெதிரே வன்முறைகள் அரங்கேறிவிடுகின்றன
யாரும் ஒன்றும் செய்ய முடிவதில்லை  

உலகம் சுருங்கியதுபோல் 
மனிதனின் மனமும் சுருங்கிவிட்டது 
அவன் அழியும் நேரமும் நெருங்கிவிட்டது 
அதனால்தான் உலகில் சிலர் உலகம் அழியபோகிறது
என்று புரளிகளை கிளப்பிவிட்டு
மக்கள் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருக்கின்றனர் 

இதனால் உலகம் தொடர்ந்து போரை சந்தித்து வருகிறது.
கோடிக்கணக்கான மக்கள் மாண்டு விட்டார்கள். 
இன்னும் மாண்டு வருகிறார்கள்.
இதை தடுக்க அந்த இறைவனே வந்தாலும் 
ஒன்றும் செய்ய முடியாத நிலைமை உருவாகிவிட்டது. 

அதனால்தான் இந்த தீமையை பொறுக்க இயலாமையால்தான்
இறைவன், பூகம்பம், சுனாமி, பெருவெள்ளம் , ,தீ விபத்துக்கள் 
என மக்களினத்தை  கொத்து கொத்தாக  அழிக்கிறான். 
அப்படியும் இந்த மனித இனம் திருந்தவில்லை
அன்றும் திருந்தவில்லை இன்றும் திருந்தாது என்றும் திருந்தாது.

மருந்துகள் சாப்பிட்டும் நோய் குணமாகவில்லை 
என்றால் அறுவை சிகிச்சைதான்
அதை இறைவன் அவ்வப்போது செய்துகொண்டிருக்கிறான்.
அது சரி நாம் என்ன செய்வது?

நாம் இறைவனை நம்பிக்கொண்டு 
வாயை மூடிக்கொண்டு
நம் கடமைகளை ஆற்றி வந்தால்  போதும் 
அவன் நம்புவர்களை நிச்சயம் காப்பாற்றுவான்
மற்றவைகளை அவன் பார்த்து கொள்ளுவான்.

படைத்த அவனுக்கு தெரியும் 
எதை எப்போது போட்டு உடைக்கவேண்டும் என்று

நீ உன்னை சுற்றி நடப்பவைகளை 
கண்டு மனம் உடைந்து போகாதே.  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக