திங்கள், 8 அக்டோபர், 2012

அந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி-18)(தொடர்ச்சி )

அந்த நாள் நினைவிலே 
வந்ததே (பகுதி-18)(தொடர்ச்சி )

கண்மாய்களின்   பராமரிப்பை அந்தந்த
கிராம  விவசாயிகளே  செய்து  கொள்ள  
அனுமதிக்க  வேண்டும் 

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் 
இந்த பணியை கண்டிப்பாக செய்தல் வேண்டும்

ஆனால் இன்று அனைத்தும்
 நின்று போய் விட்டது 
பல ஆண்டுகள் இந்த பணிசெய்யாமல் 
தொடர்ச்சியாக முடங்கிபோய் விட்டது

பல கிராமங்களில் பெயருக்குத்தான் 
ஏரிகள் இருக்கின்றன ஏரிகளின் 
உட்புறத்திலும் ஆக்கிரமிப்பு
ஏரியின்வெளிப்புறத்திலும்  ஆக்கிரமிப்பு

ஏரிகள் இரு சாராருக்கும் குப்பை 
கொட்டும் தளங்கலாகிவிட்டன

சாக்கடைகளை தேக்கி வைக்கும் 
தொட்டிகளாகி விட்டன  

இந்த கொடுமையிலிருந்து தப்பிய
ஊர்களில் உள்ள ஏரிகளின் 
பராமரிப்பு வேலைகளை 
அரசு  அமைப்புக்கள்  செய்கின்றன 

அந்த பணிகளை   அரசு ஒப்பந்தகாரர்களிடம் 
ஓப்படைக்கின்றது அவர்கள் அந்த பணியை 
முறையாக செய்து ஒப்படைக்கவேண்டும் 
அவர்கள் அதை சரியாக செய்கிறார்களா
 என்பதை கண்காணிக்க அதிகாரிகள் 
 இருக்கின்றனர் எல்லாம் இருந்தும் 
அந்த பணிகளின் தரம் என்ன என்று 
அனைவருக்கும் தெரியும். 

ஒப்பந்தக்காரர்களுக்கு  
எந்த  தகுதிகளும்  கிடையாது 
அவர்கள் ஆளும்  கட்சியை சேர்ந்தவர்களாக 
மட்டும் இருக்கவேண்டும்   என்பதை  தவிர .

அரசு ஒரு  பணியை  செய்ய  ஒதுக்கப்படும் 
பணம்பாதிக்குமேல்  லஞ்சமாக  போய்விடுகிறது 
அந்த  பணி  எப்படி  விளங்கும்?

மன்னர்கள் கட்டி  வைத்த  அணைகள் 
ஆயிரம்  ஆண்டுகள்  ஆனாலும்  
அப்படியே  இருக்கிறது 

எல்லோரும்  இந்நாட்டு  மன்னர்கள்  ஆன  பின்  
எல்லாம் தங்களுக்கே என்று நினைத்து 
கொள்ளைஅடித்து கொண்டிருக்கின்றனர்

கொள்ளையடிக்கும் தொகை லட்சக்கணக்கில்
,கோடிகணக்கில் போகும்போது எதிர்ப்பவர்களை கொலை கூட செய்கின்றனர்.அவர்களின் குடும்பங்களை சிதைக்கின்றனர் 

அதனால்தான் இன்று நீதிபதிகளும் 
நேர்மையான அதிகாரிகளும் 
தவறான பாதைகளுக்கு செல்லவேண்டிய
நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டனர் 

காவல் துறை பாதுகாப்பு 
என்பது ஒரு கண்துடைப்பே. 

மக்களுக்கு எல்லாம் தெரியும் 
ஆனால் அவர்கள்யாரும்
தியாகம் செய்ய தயாரில்லை 
ஏனென்றால் நாட்டிற்காக தியாகம் செய்து 
நாசமாய் போன அனைத்து  தியாகிகளின் 
கதைகளும் அனைவருக்கும் அத்துப்படி.

எதிர்கட்சிகள் ஆளும் கட்சியாகும்வரை 
ஊழல் ஊழல் என்று கூச்சல். போடுவதோடு சரி. 

இந்த நாடு இனி உருப்படுவதற்கான 
சாத்திய கூறுகளே இல்லை

நாளுக்குநாள்  ஊழல் அன்று ஆயிரக்கணக்கில்
தொடங்கி .லட்சம் கோடி என்ற 
லட்சணத்தில் போய்கொண்டிருக்கிறது

யாரும் தவறு செய்வதை 
ஒப்புக்கொள்வதில்லை
எதிர்த்து போராடுபவர்களுக்கு
மக்கள் ஆதரவு இல்லை

ஏனென்றால் அவர்களை பலவிதங்களில் 
வரிகளை விதித்து, விலைவாசிகளை 
வானளவிர்க்கு உயர்த்தியும், அடக்குமுறைகளை
கையாண்டுமக்கள் முதுகெலும்பை முறித்துவிட்டனர்.
நாட்டை தொடர்ந்து ஆளும் கூட்டம் 

சாக்கடையாகிவிட்ட நதிகளை 
ஆண்டுக்கொரு முறை பெய்யும் மழை 
சுத்தப்படுத்துவதுபோல போல யாராவது நேர்மையான,
கண்டிப்புடன் கூடிய ஒரு மனிதர் நம் நாட்டில்
 பிறந்தால்தான் மக்களுக்கு விமோசனம். 

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 
தேர்தல் திரைப்படங்களில் விடப்படும் 
இடைவேளை போன்றதாகிவிட்டது 

மக்கள் இடைவேளைக்கு பிறகு கதையில் 
ஏதாவது புதிய திருப்பங்கள் வரும் என்று
நம்பி ஏமாந்ததுதான் மிச்சம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக