புதன், 24 அக்டோபர், 2012

வள்ளலாரின் சிந்தனைகள்


வள்ளலாரின் சிந்தனைகள்  

















இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
என்ற திரைப்பட பாடல் வரிகள் அந்தக்கால
சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்

நாட்டிற்காக தங்கள்
உயிரை அர்ப்பணிப்பதை
தியாகம் என்றும்
சில நோக்கங்களுக்காக தீயில் உயிரை
பலிஇடுவது யாகம் என்று மக்கள் நம்புகின்றனர்

ஆனாலும் உயிர் எப்படி இந்த
உடலை விட்டு போனாலும்
அந்த உயிருக்கும், அந்த உயிர் மீது பாசம்
வைத்திருப்பவர்களுக்கும் வலியை
தரும் என்பதில் ஐயமில்லை

ஒரு சில மனிதர்கள் ஒரு பிராணியை
உணவாக கொள்வதும்
ஒரு சிலர் அதை விரும்பாததும் என்ன காரணம்
என்றால் அவரவர் மனோபாவம்தான் காரணம்

மீனையோ அல்லது மற்ற உயிரினங்களை
உண்பவர்கள் அவைகளை
உணவாகத்தான் பார்க்கிறார்கள்
.அவைகளை உயிராக பார்ப்பதில்லை

உணவாக பார்க்கும்போது
அவைகளை கொல்லும்போது
அந்த செயல் எந்த சலனத்தையும்
அவர்கள் மனதில் ஏற்படுத்துவதில்லை

அதுவே அவர்கள் அன்போடு,ஆசையோடு ,
பாசத்தோடு வளர்த்த நாயை தெருவில்
வேகமாக போகும் ஒரு கார் மோதி
அதை கொன்றுவிட்டால்
அந்த மனிதரையும் அவர் ஒட்டி
வந்த காரையும் அடித்து
நொறுக்கிவிடுகின்றனர்.

பொதுவாக நாம் பாம்பை
கண்டால் பயப்படுகிறோம்.
அது நம்மை ஒன்றும் செய்யாவிட்டாலும்
அதை கண்டால் கொன்று விடுவது
என்ற கொள்கை அனைவருக்கும் உண்டு.

ஏனென்றால் அது நம்மை கடித்துவிடும்.
கடித்தால் நாம் இறந்துவிடுவோம் என்று
நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது .

அது விஷப்பாம்பாக இல்லாதிருந்தும்
பாம்பென்று மனிதன் எதிரில் வந்தால்
அதற்க்கு மரண தண்டனை நிச்சயம்.

ஆனால் அந்த பாம்புபுற்றிற்கு
கோயில் கட்டி வழிபடுகிறோம்.
உண்மையில் அது கரையான் புற்று
பாம்புகளுக்கு ஒருதலையிலிருந்து தொடங்கி
ஆயிரம் தலை வரை உள்ள
சிலை வைத்து வழிபடுகிறோம்

உண்மை என்னவென்றால்கல்லால் செய்யப்பட்ட
பாம்பு நம்மை கடிக்காது என்ற தைரியம் .
அதற்க்கு குங்குமம்,மஞ்சள் பூசி
படையலிட்டு வழிபடுகிறோம்.

சீனர்கள்,மற்றும் பல நாட்டினர்.
பாம்பை உணவாக சுவைக்கிறார்கள்
அவர்களுக்கு பாம்பிடம் பயம் என்பதே கிடையாது.

எனவே மனம்தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்

ஒரு பிராணியை ,அது தங்கள் உணவென்று
மனம் நினைத்தால் அது வயிற்றுக்குள்   போகும்

அதுவே அது தன்னை போல ஒரு உயிர்
அதை நாம் நேசிக்கவேண்டும் என்று நினைத்தால்
அது அவர்கள் வீட்டில் வளர்ப்பு பிராணியாக
மகிழ்ச்சியாக உலா வரும்.

எனவே சைவ உணவு உண்பவர்கள்
அசைவ உணவு உண்பவர்களை
விமரிசிப்பது தேவையற்றது

சைவ உணவு உண்பவர்கள் செய்யும்
கொலைகள் கணக்கில் அடங்கா
கொசுக்கள்.எலிகள், கரப்பான் பூச்சிகள்
,புழுக்கள் , எறும்புகள்,
இன்னும் பலவிதமான பூச்சிகள்
என்று பட்டியல் நீண்டுகொண்டேபோகும்

இந்த உலகில் ஒரு உயிரை மற்றொரு
உயிர் உண்டுதான் வாழ வேண்டும்
என்பது இறைவன் வகுத்த விதி

போரின்போது மனிதர்கள்
மற்றொரு மனிதர்களை கொன்று அழிப்பதும்
இந்த விதியின் கீழ்தான் நடைபெறுகிறது.

எல்லாம்மனிதர்களின் மனதில் உள்ள
எண்ணங்களில்தான் அனைத்தும் உள்ளது.

வள்ளலாரின் சிந்தனைகளை
இந்த மனித குலம் மனதில் கொண்டால்
அந்த மாற்றம் நிகழும்.

அந்த மாற்றம் நிகழ பிரார்த்திப்போம்.

2 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றாக சொல்லி அழகாக அருமையாக விளக்கி உள்ளீர்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி

      ஒருவனின் மனதில் உள்ள
      எண்ணங்கள்தான் அவன்
      காணும் உலகமாக
      தோற்றமளிக்கிறது
      மற்றபடிஉலகம் அதன்
      போக்கில்போய்க்கொண்டிருக்கிறது

      நீக்கு