செவ்வாய், 28 அக்டோபர், 2014

வெட்டியாய் பொழுது போக்க நேரம் உண்டு .ஆனால் ?

வெட்டியாய் பொழுது போக்கநேரம் உண்டு .ஆனால் ?



கானகத்தில் வழி தவறி வந்தவரை
வழிப்பறி செய்து அவர்கள் வாழ்வை
அழித்து வாழ்ந்துவந்த கொள்ளையனை
ஏற்றுக்கொண்டாய் .

கலியுகத்தில் எப்போதும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கும் என்
போன்றவர்களை மட்டும்  ஏற்றுக்கொள்ள
உனக்கு இன்னும் மனம் வரவில்லை

கண் முன்னே எப்போதும் இருக்கின்றாய்
ஆனால் கண்ணுக்கு புலப்படாமல்
அங்கும் இங்கும் திரிகின்றாய்

புலால் உண்ணும் கண்ணப்பனுக்கு
காட்சி தந்தாய் புலன்களின் பின்னால்
சென்றுகொண்டிருக்கும் இவனுக்கு
காட்சி தரும் நாள் எப்போது ?

உலக மாயையில் சிக்கிகொண்ட
இவனுக்கு உன் மாயாஜாலங்கள்
எவ்வாறு புரியும்?

மரிக்கவே படைக்கப்பட்ட அழியும் உடலைப்
பராமரிக்கவே வீணாகிறது உழைப்பும்
செல்வமும்

பொய்யான உறவுகளுக்காகவே
ஏங்கி வாடி வதங்கி அல்லல்பட்டு
அலைபாய்கிறது பந்தப்பட்ட மனம்

ஓசைப்படாமல் தன்  பக்கம் இழுத்து
என்னை அடிமைப்படுத்தி தன் வசம்
வைத்திருக்கிறது ஆசைகள் என்னும் பேய்கள்

அவம் பேச பொழுது இருக்கிறது ஆனால்தவம் செய்ய நேரமில்லை.

வெட்டியாய் பொழுது போக்க
நேரம் உண்டு .ஆனால் வெட்ட வெளியாய்
எங்கும் பரந்து  கிடக்கும் உன்னை அறிய
நேரம் இல்லை


என்னுள்ளே இருக்கின்றாய்.எந்நேரமும்
என்னருகில். ஆனால் உன்னை எங்கெங்கோ
எதிலெதிலோ தேடுகிறேன் ஆயுள் முழுதும்.


மதம் சார்ந்து தேடினாலும் நீ கிடைப்பதில்லை
மதம் பிடித்து யானையைப்போல்
அலைவதைத் தவிர


உன்னை இல்லை என்றாலும் உனக்கு
ஒன்றும் ஆவதில்லை நீ இருக்கிறாய் என்றாலும்
எனக்கும் ஒன்றும் கிடைப்பதில்லை

நான் பட்ட துன்பங்கள் போதும் என்று
நீதான் இவன்மீது இரக்கம் கொள்ளவேண்டும்
எல்லா இடர்களினின்றும் விடுபட வேண்டி

இல்லையேல் காலன் என்னை கொன்றுவிடுவான்
மீண்டும் பிறவி பெற எவ்வளவு காலம்
காத்திருக்கவேண்டும் என்பதை யாரறிவார் ?


சனி, 25 அக்டோபர், 2014

நன்றி கெட்ட மானிடனே !

நன்றி கெட்ட  மானிடனே !

மானிடனே நன்றி மறந்து வாழ்வதுதான் உன்
பிறவிக் குணமோ?


ஒரு நாய்க்கு இருக்கும் நன்றி கூட உனக்கு
அணுவளவும் கிடையாது என்பதை
அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்.
உன் அன்றாட செயல்கள் மூலம்.



உன் சுயனலதிர்க்காக நீ எதை வேண்டுமானாலும்
செய்வாய் என்பது அனைவருக்கும் தெரியும்.

என் பல உயிர்களையே ஈவிரக்கமின்றி கொல்வாய்
கொன்றதை தின்னவும் செய்வாய்.

நீ என் காலில் இட்ட கழிவு நீரை சுவையான
சுத்தமான, சுகாதாரமான தாகம் தீர்க்கும்
இளநீராக மாற்றிக் கொடுத்தேன் அதை
குடித்தும், காய்களை  விற்றுக் காசாக்கியும்
பல ஆண்டுகள் நான் வழங்கிய சுகங்களை
அனுபவித்தாய்.





ஆனால் இன்று அடுக்கு மாடி கட்டவேண்டும் அதற்கு நான்
இடையூறாய் இருக்கிறேன் என்று என் தலையை
மொட்டை அடித்தாய். அடுத்த நாளே என் கதையையே
முடித்து விட்டாய்.

உன் தலையை மொட்டை அடித்தால், மீண்டும் முடி வளரும்
ஆனால் என் தலையை மொட்டை அடித்தால். என்ன ஆகும்
என்று உனக்கு தெரியும்.

மாறும் மனம் கொண்ட  குணம் கொண்ட உனக்கு நன்றி மறத்தல்
இயல்பாக இருக்கலாம். ஆனால் நான் மீண்டும் வேறொரு
இடத்தில் முளைப்பேன்  தழைப்பேன். என்னிடம் உள்ள
அனைத்தையும் அனைவருக்கும் வழங்குவேன்.




அதுதான் எனக்கு இறைவன் இட்ட   கட்டளை.

வியாழன், 16 அக்டோபர், 2014

படைத்தவனை சரணடைவோம்

படைத்தவனை சரணடைவோம்  


வானில் உயரே
பறக்க வழியிருந்தும் நல்ல உணவை
உண்ணாது பூமியில்




அழுகிய பிணத்தை தேடி வயிறு
வளர்க்கும் கழுகு ,பருந்து  போன்ற பறவைகள்


அதுபோல் இவ்வுலகில் மனிதர்கள் பலர்
வாழ்வில் நல்ல உயர்ந்த
நிலையை அடைந்த பின்னும்
அழியும் அற்ப பொருட்களையே நாடி தேடி ஓடி
அழிந்து போகின்றனர்

பூலோகனாதனை நினைந்து ,பணிந்து
உய்யும் வழியை நாடாது



தீயில் உருகி
காணாமல் போகும் உலோகங்களை
உடலில் அணிந்து உலா வருகின்றனர்.



நம் கண் முன்னே தோன்றி நாம் போடும்
உணவை உண்டு கொழுத்து நோயுற்று
நம் கண்முன்னே மண்ணுக்கு போகும்
உடலை நம்பி மோசம் போகின்றனர்



நம்மைப் படைத்தது மட்டுமல்லாமல்
நம் உடலுக்குள்ளே கோயில் கொண்டு
நம்மை இயக்கும்  உத்தமனை அறிய
முயலாது ஏதேதோ பிதற்றி திரிகின்றனர்
இவ்வுலக மாந்தர்.

ஓராயிரம் நாமங்கள் கொண்ட   அவன்தான்
இறைவன் என்று  உண்மையை
அவனை உணர்ந்தோர் உரக்கக் கூறிடினும்
தான் வணங்கும் வடிவமே உண்மையான
தெய்வம் என்று  உரிமை கொண்டாடி
உலகத்தில் குழப்பம் விளைவிக்கிறது
உண்மையை உணராக் கூட்டம்


படித்தவருக்கும் பாமரனுக்கும்
பரமனை அடையும் வழி ஒன்றே



அவன் பாதங்களைச் சரணடைந்து
அவன் நாமம் சொல்லி அனைத்து
உயிர்களுடன் அன்போடு இணைந்து
வாழ்வதே அவனை அடையும்
எளிதான  வழி என்பதை அவனைக்
கண்டவர்கள் காட்டிய வழி.

படங்கள்-நன்றி-கூகுள்

புதன், 1 அக்டோபர், 2014

லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி

எனக்கும் இன்று பிறந்த நாள் (2.10.2014)


ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 


இவர்தான் லால் பகதூர் சாஸ்திரி 

உருவத்தால் சிறியவர்
உழைப்பால்  உயர்ந்தவர்
ஊர் சொத்துக்கு ஆசைப்படாதவர் 

உயர்ந்த பதவிகள் பல வகித்தும் 
ஊழல் செய்ய தெரியாதவர் 

பாகிஸ்தான் படையெடுப்பின்போது
நம் நாட்டின் வீரர்களையும் 
மக்களையும் தட்டிஎழுப்பி 
நாட்டை காத்தவர் 

ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 



சமாதானத்தின் தூதுவராய்
தாஷ்கண்ட் சென்றவரை 
இறைவனின் தூதர்கள் 
தங்கள் நாட்டிற்கு அழைத்து 
சென்று விட்டனர் 

சுயனலமற்றவர்
என்றும் மற்றவர்
நலம் விரும்பியவர் 

லால் பகதூர் சாஸ்த்ரியின் 
வாழ்க்கை மிகவும் துன்பமயமானது
அவரின் அப்பழுக்கற்ற நேர்மையும்,
எளிமையும்,தியாகமும் 
இக்கால மக்களுக்கு போய் சேரவில்லை.
என்ன செய்வது ?

இங்கு இருப்பவர்களுக்கு 
உள் நாட்டில் இருக்கும் 
வைரங்களின் மதிப்பு தெரிவதில்லை 


கூழாங் கற்களை வைரம் என்று நம்பி 
தலைமேல் வைத்துகொண்டு 
கொண்டாடி திண்டாடுகிறார்கள்  

வாழ்க என்றும் உன் புகழ் 
நாட்டிற்காக நீ  செய்த தியாகங்கள் 
வீண் போய்விட்டது. லஞ்சமும் 
பஞ்சமும் வஞ்சமும் நிறைந்துவிட்ட இந்த 
நாட்டை யார் காப்பாற்றுவார்கள்?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும் 

கால வெள்ளத்தில் காணாமல் போனவர்களை கண் முன் கொண்டு நிறுத்தியவர்.

கால வெள்ளத்தில் காணாமல் போனவர்களை 
கண் முன் கொண்டு நிறுத்தியவர்.

இன்று அக்டோபர் முதல் நாள்

நானும்தான் பிறந்தேன் எதற்காக ?
எனக்கே தெரியவில்லை

ஆனால் நடிப்பிற்கே இலக்கணம்
வகுத்தவன் ,தலைக்கனம் இல்லாதவன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்
பிறந்த நாள் குறித்து ஒரு பதிவையும் காணோம்



போடாத வேடமில்லை
போற்றாத நாடில்லை
மொழி தெரியாதவனும் போற்றினான்
அவர் நடிப்பை.

காலத்தால் மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி
கப்பலோட்டிய தமிழன் .வ.உ சிதம்பரத்தை கண்முன்
கொண்டு நிறுத்தி நம் கண்களிலிருந்து அருவிபோல்
நீரை கொட்டச் செய்தவன்

கொள்ளையர்களான வெள்ளையர்களை  வெளியேற்ற
தூக்கில் தொங்கிய வீர பாண்டிய கட்டபொம்மனை
மறந்துபோன இந்த தலைமுறைக்கு உயிரோடு
நம் கண் முன்  கொண்டு வந்தவன்

இன்னும் எத்தனையோ பாத்திரங்கள்
அவரால் உயிர் பெற்று திரையில் நடமாடின

வாழ்க  அவர் புகழ்