திங்கள், 1 அக்டோபர், 2012

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்


நடிகர்  திலகம் சிவாஜி கணேசன்
பிறந்த நாள் 

நடிகர்  திலகம் 
நடிப்பில் இமயம்
சிவாஜி கணேசனின் பிறந்த நாள்

எழுத்தாளர்களின் எழுத்துக்களில் 
மட்டும் வலம் வந்த பாத்திரங்களை 
உலகில் உயிரோடு நடமாட வைத்தவர்
 
குரல் வளம்படைத்தவர் 
சிம்மக்குரலுக்கு சொந்தக்காரர் 

கற்பனை பாத்திரங்களை 
நிஜமாக்கியவர் 

நடிப்பை உயிராக நேசித்தவர் 
அதனால் கோடிக்கணக்கான ரசிகர்களின் 
மனதில் இடம் பிடித்தவர் 

அவர் பூத உடல்  மறைந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன 
அவரால் படைத்து உலகில் நடமாட விடப்பட்ட
பாத்திரங்கள் இன்னும் உலகமெங்கும் வெள்ளி திரைகளில்
தொலைகாட்சிகளில் கைபேசிகளில் ஓய்வில்லாமல் 
ஓடிக்கொண்டு இருக்கின்றன 

இவ்வுலகம் உள்ளவரை அவர் புகழ் 
என்றும் எங்கும் நிலைத்து மக்களை 
மகிழ்வித்துக்கொண்டிருக்கும்.
மனதை பாதித்துக்கொண்டிருக்கும்  

2 கருத்துகள்:

 1. அவர் உணர்ச்சிகளின் எரிமலை
  சில நேரங்களில் தீகுழம்பை கக்கும்

  சில நேரங்களில் தென்றல் காற்று
  மனதை இதமாக வருடும்

  சில நேரங்களில் உணர்ச்சிகள் கொப்பளித்து
  பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கும்

  நினைத்தவுடன் உயிர் பெற்று உலாவும்
  அவர் நடித்த பல பாத்திரங்கள்
  நம் மனம் என்னும் திரையில்

  சிரிக்கவும் வைத்தவர்
  சிந்திக்கவும் வைத்தவர்

  நிலையில்லா இவ்வுலகில்
  நிலைத்து விட்ட
  அவர் நடிப்பு,கோடானகோடி
  ரசிகர்களின் நெஞ்ச துடிப்பு.

  பதிலளிநீக்கு