வெள்ளி, 5 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-7)

நான் கவிஞனுமில்லை 
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-7)

என் கடந்த கால வாழ்க்கையில்
 நான் இந்த உலகத்தை புரிந்துகொள்ளாது,
என்னை சுற்றியுள்ள மனிதர்களை
 புரிந்து கொள்ளாது வெளுத்ததெல்லாம்
பால் என்று வாழ்ந்து வந்த காலம்

புத்தகங்கள்தான் என் நண்பர்கள்,
என் ஆசான்,என் குரு,
என்னுயிர் தோழன்,ஆக விளங்கின

யார் நல்லவர்கள் ,
நம் நன்மையை எண்ணுபவர்கள் என்று
எனக்கு அடையாளம் காணத் தெரியாது

எல்லோரையும்நம்புவேன்.
அவர்கள் பேச்சில் உண்மையில்லை
அது வெளி வேஷம் என்று எனக்கு தெரியாது
அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவேன்

என் உள்ளத்தில் உள்ளே ஓயாமல்
ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு குரல்
அது என்ன தெரியுமா?

அவனன்றி ஓரணுவும் அசையாது

ஒருவன் எனக்கு நன்மையை செய்கின்றான்
அல்லது கெடுதலை செய்கின்றான் என்றாலும்
அவனுள் இருக்கும் இறைவனின் அனுமதியின்றி
எதுவும் நடவாது என்பதை என்
உள்  மனம் புரிந்து கொண்டு விட்டது

சர்வம் பிரம்ம மயம்  என்ற சதாசிவ
பிரம்மேந்திர சுவாமிகளின் பாடல் வரிகள்
மிகவும் பிடிக்கும் 

எல்லா உயிருக்குள்ளும் நான்தான்
இருந்து கொண்டு அவர்களை இயக்குகின்றேன்
என்ற பகவான் கண்ணனின் கீதை வரிகள்

என்னை சரணடைந்தவனை நான் எந்த
நிலையிலும் கைவிடமாட்டேன் என்ற
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின்  சரணாகதி தத்துவம்

அந்த கால கட்டத்தில் எனக்கு நண்பர்கள் கிடையாது.
ஏனென்றால் நண்பர்கள்  என்ற போர்வையில்
எனக்கு தொல்லை தந்தவர்கள்தான்  அதிகம்
பாரதத்தில் கண்ணனை நண்பனாக
கொண்ட அர்ஜுனனைபோல் இறைவனையே என் நண்பனாககொண்டுவிட்டேன் 

எனவே திக்கற்றவனுக்கு தெய்வமே துணை
என்று மனப்பூர்வமாக நம்பினேன்

எந்த சூழ்நிலையிலும் நான்
என் நம்பிக்கையை இழந்ததில்லை.

எத்தனை துன்பங்கள் வந்தபோதும்
அவமானங்கள், ஏமாற்றங்கள் ,
துரோகங்கள்  அநீதிகள் எனக்கு
இழைக்கப்பட்டபோதும் பொறுமை காத்தேன்
எல்லாம் அவன் செயல் என்று.
அது வீண்போகவில்லை

என்னை அன்றும் இன்றும்  கண் இமை போல்
காக்கின்றான் இறைவன்.

ஏனென்றால் எனக்கு நன்றாக தெரியும் அவன்
எனக்கு செய்த எதுவும் என் நன்மைக்கே ,
என்பதை நான் உறுதியாக நம்பியதுதான்.

அது உலகினரின் கண்களுக்கு தீமையாக தோன்றலாம்
.நான் மிகவும் கஷ்டப்படுவது போன்ற தோற்றத்தை அளித்திருக்கலாம்.
ஆனால் என் உள்ளத்தின் ஆழத்தில்  அமைதியாய் இருக்கும் கடல்போல் நான் அமைதி காத்தேன்  என்பது உண்மை. (இன்னும் வரும்) 

1 கருத்து:

  1. சில கருத்துக்கள் ...ம்ஹீம்... பல கருத்துக்கள் எனக்கும் ஒத்துப் போகின்றன...

    தொடர்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு