செவ்வாய், 2 அக்டோபர், 2012

அந்த நாள் நினைவிலே வந்ததேபகுதி-(20௦)


அந்த நாள் நினைவிலே 
வந்ததேபகுதி-(20௦)

இந்த காலத்தில் மக்களை 
மனசோர்வும் உடற்சோர்வும் 
ஆட்டி படைக்கின்றன 

உடற்சோர்வு அதன் எல்லையை
தாண்டுகையில் உடலில் 
நோய்களாக பரிணமிக்கின்றன.

முதலில் தலைவலி,பிறகு உடல்வலி, 
பிறகு வயிற்றுவலி என்று பொதுவாக 
தங்களை வெளியே அடையாளம் காட்டுகின்றன

வெளியே காட்டும் அடையாளங்களை வைத்து 
மனிதர்கள் அவர்களே தங்களுக்கு தாங்களே 
விளம்பரங்களில் கூறும் தகவல்களை வைத்து 
வைத்தியம் செய்து கொள்ளுகிறார்கள்

உடலின் வெளிப்புறத்தில் 
ஒரு வலி தோன்றுகிறதென்றால் 
அது உடலின் உட்புறத்தின்   உள்ள கருவிகளில்  
பல பாதிப்பு அடைந்து அதன் செயல்பாடுகள் 
குறைந்து கொண்டு வருவதே  
என்பதை பலரும் உணருவதேயில்லை 
 
சிலர்  எல்லாம் தெரிந்தும் அலட்சிய மாக 
இருப்பதால் அவர்கள் பெரும் 
சிக்கலில் மாட்டிகொள்கிறார்கள் 

உடலின் உள்ள பல  கருவிகளின் செயல்பாடு  
தடைப்பட துவங்கும்போதுதான்
மனிதர்கள் விழித்து கொள்கிறார்கள் 
மருத்துவர்களிடம்  செல்கிறார்கள்

அப்போதுதான் அவர்களுக்கு பரிசோதனைகள்  
என்ற பெயரில் சோதனைகள் ஆரம்பமாகிறது 

முதலில் ஒவ்வொரு கூடமாக சோதனைகளை 
துவங்கி நோயை பற்றிய சரியான நிலைமை புரிந்து கொள்ள 
இயலாமல்  பெரிய மருத்துவமனைகளை நாடும்போது
உடலில் உள்ள கருவிகளில் பல முழுவதுமாக
 செயலிழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும்.

 மீண்டும் முதலிலிருந்து பரிசோதனைகள் 
லட்சகணக்கில் மருத்துவ செலவுகள். 
மீண்டால் மருந்துகள்தான் சாப்பாடு
,மருத்துவ பரிசோதனைகள்தான் 
,மருத்துவருடன் சந்திப்பு என்றுதான்  
வாழ்வை நடத்தவேண்டும்.

மீளாவிடில் கையில் உள்ளா காசுகள் கரைந்து 
குடும்பம் நடுதெருவுக்கு  வந்துவிடும்

ஆயுள் காப்பீடோ,மருத்துவக்காப்பீடோ செய்தவர்கள்
அதனால் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு 
அவர்களை சார்ந்தவர்கள் தங்கள்வாழ்க்கை
 பயணத்தை தொடரவேண்டும்.

இதுதான் இன்றைய வேகமாக ஓடிகொண்டிருக்கும் 
நம்மில் பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை 
இவ்வுலகில் இன்பமாக வாழத்தான் இறைவன் நமக்கு 
அனைத்தையும் அளித்திருக்கின்றான் 

உண்மையில் நாம் படும்
துன்பங்களைதிர்க்கும் நாம் காரணம் 
என்பது சிந்திப்பர்ர்க்கு விளங்கும்

தன் தவறுகளை பிறர் மீது சுமத்தி
நிந்திப்பார்க்கு எதுவும் என்றும் விளங்காது.
அவர்களும் விளங்கமாட்டார்கள் 
(இன்னும் வரும்) 

2 கருத்துகள்:

 1. இன்று இந்த தொல்லைகள்
  அனைத்து மக்களையும்
  பற்றிக்கொண்டு விட்டது.

  பணமிருப்போருக்கு corporate multi speciality
  ஏழைகளுக்கு Government casuality

  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அன்று
  தேடி வைத்த செல்வமெல்லாம்
  நோயினால் அழிகிறது இன்று

  அன்று உயிர் காத்தது மருத்துவம்
  இன்றோ பணம் காய்க்கும்
  பயிராகிவிட்டது மருத்துவம்

  கண்ணை விற்று
  சித்திரம் வாங்குவதுபோல் இன்று
  மனிதர்கள் தங்கள் உடலை
  விற்று நோய்களை வாங்குகின்றனர்

  சுற்றுப்புறத்தை நஞ்சாக்கிவிட்டு
  சுகமாக வாழ்வதாக எண்ணிக்கொண்டு
  சுற்று சுவருக்குள் தங்களை அடைத்துக்கொண்டு
  கொசு விரட்டிகளின்
  நச்சுக்காற்றால்
  தங்கள் உடல் முழுவதையும் நஞ்சாக்கிகொண்டு
  மெல்ல மெல்ல நோயில் சாகின்றனர்.

  வெட்ட வெட்ட மீண்டும்
  துளிர்த்த ராவணன் தலை போல்
  கொசுக்கள் அழிக்க அழிக்க மீண்டும்
  கோடிக்கணக்கில் தோன்றி
  இன்று மக்களை தூங்க விடுவதிலை
  அவனை சுகமாக வாழ விடுவதில்லை

  கொல்லும்( கொ) சுகத்தை (சு)என்ற
  எண்ணமுடைய கொசுக்கள்
  மனிதர்களை நிம்மதியாக
  வாழ விடுவதில்லை

  பதிலளிநீக்கு