அந்த நாள் நினைவிலே
வந்ததே(பகுதி-22)
தூக்கம் என்பது உயிர்களுக்கு
இறைவன் அளித்த வரப்பிரசாதம்
உயிரோடு இருக்கும்வரை தினம்
இரவில் உறங்கி காலையில்
புத்துணர்ச்சியோடு எழுந்து
அன்றைய தின வேலைகளை
மகிழ்ச்சியாக செய்து கொண்டு
வாழ்ந்து வந்தனர் அக்கால மக்கள்
நன்றாக உறங்கி எழுந்தோமானால்
முகத்திலே நல்ல மலர்ச்சியும்,
உள்ளத்திலே தெளிவும்
உடலிலே ஒரு சுறுசுறுப்பும் இருக்கும்
ஒருவரின் உண்மைக்குணம்
அவர்கள் தூங்கும்போதுதான் தெரியும்
என்கிறான் கவி சக்ரவர்த்தி கம்பன்
அவன் தன் காப்பியத்தில் பல பாத்திரங்களை
தூங்கும்போதுதான் அறிமுகப்படுத்தியிருக்கிறான்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் தூங்கும்போது
அவர்களின் முகத்தை கவனிப்பவர்களுக்கு
அந்த உண்மை தெரியும்.
அதுவும் குழந்தைகள் தூங்கும்போது
பார்த்தால் நம் மனதில் பலவிதமான
சிந்தனைகள் கொப்பளிக்கும்
பாவம் இந்த குழந்தை கள்ளம்
கபடமற்று உறங்குகிறது
வடிவேலு பாஷையில் முள்ள மாரிகளும்
முடிச்சவுக்கிகளும் நிறைந்த
இந்த உலகில் இது எப்படி வாழ்ப்போகிறதோ
என்ற கவலை நம் மனதில் பிறக்கும்
போட்டியும் பொறாமையும் நிறைந்த
இந்த உலகில் இந்த குழந்தை எப்படி
சமாளிக்கப்போகிறதோ என்ற எண்ணம்
பெற்றோரின் மனதில் எழும்
குழந்தை தூங்கி விழிக்கும்போது
அதை பார்ப்பதே அழகு.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்.
அதனால்தான் இறைவனை தினமும்
காலையில் அவன் விழிப்பதாகக் கருதி அவனுக்கு
திருப்பள்ளி எழுச்சி பாடி அவனை துயிலெழுப்பும்
தரிசனம் செய்யும் வழக்கம் வழக்கம் வந்ததோ என்னவோ ?
இரவில் நன்றாக தூங்கி எழுவதை போல்
பகலிலே உணவு உண்ட பின்உட்கார்ந்த படியே
ஒரு குட்டி தூக்கம் போடுவது எத்தனை சுகம்
அது நமக்கு எவ்வளவு சக்தியையும் தெளிவையும்
தரும் என்பதை அந்த தூக்கம் போட்டவர்களுக்கு தெரியும்
.ரயிலில்,பேருந்தில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்துகொண்டு.
ஜில்லென்ற காற்று முகத்தில் வீச தூக்கம் நம்மையறியாது
நம்மை தழுவிகொண்டுவிடும்.
இன்று பலர் தூக்கம் வராமல் மாத்திரைகளை முழுங்கி
அதுவே ஒரு வியாதியாக மாறி
அது அவன் உடலில் பல
வியாதிகளை தோற்றுவிக்கிறது . (இன்னும் வரும்)
//சின்ன சின்ன கண்ணணுக்கு... பாடல் வரிகள் ஞாபகம் வந்தன். பால்மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நான் இருந்தேன்..பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லை.. பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும்.. பொல்லாத கண்களடா புன்னகையில் துவேஷம்..
பதிலளிநீக்குஅற்புதமான வரிகள்//
சிந்தனையைத் தூண்டும் பகிர்விற்கு நன்றி!
வருகைக்கும் கருத்துக்கும்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
பிள்ளையாய் இருந்துவிட்டால்
இல்லை ஒரு துன்பமடா
என்ற வரிகளும்
ஆயிரம் கதை சொல்லும்
பிள்ளையாய் இருந்துவிட்டால்
பிள்ளைகளின் மழலையை ரசிக்க முடியுமா?
இல்லை அவர்களோடு கொஞ்சித்தான் மகிழமுடியுமா?
ஒரு பெண் தாயாகி பிள்ளை பெறும்போது
அடையும் துன்பத்தை நினைத்தால்
ஒரு பிள்ளையை பெற்று
அது தரும் இன்பத்தை நுகரமுடியுமா?
பிள்ளை பெறாமல் மலடி என்று பெயர் வாங்கி
வாழ்நாள் முழுவதும் பெண்கள் துன்பத்தை
அனுபவிக்காமல் இருக்கமுடியுமா?
இன்பமும் தேவை இன்பத்தை
உணர துன்பமும் தேவை இவ்வுலகில்
இரண்டிலுமிருந்து விடுபட்டு
இணையில்லா ஆனந்தத்தை
அடைய ஞானமும் தேவை.
உண்மை தான்... 'நிம்மதியான' தூக்கம் - சுறுசுறுப்பின் ஆணி வேர்...
பதிலளிநீக்குதங்களின் கீழ் உள்ள கருத்தும் அருமை ஐயா...
வருகைக்கும் கருத்துக்கும்
பதிலளிநீக்குநன்றி திரு RN
அவர்களே