நான் கவிஞனுமில்லை
நல்ல ரசிகனுமில்லை
கவிதை எழுத
ஆசை இல்லா மனிதனும் இல்லை
நான் எழுத்துக்கூட்டி படிக்க தெரிந்த நாளிலிருந்தே
புத்தகங்களை படித்துகொண்டிருக்கிறேன்.
நான் படித்த புத்தகங்கள் ஏராளம்.
அவைகளை அப்படியே
அனைத்தையும் நினைவில் கொள்ள முடியாவிட்டாலும்
அந்த புத்தகத்தை எழுதியவரின் எண்ணக்கிடக்கையை
நோக்கத்தை, சொல்ல வந்த கருத்தை
என் நினைவில் சேமித்து வைத்து கொள்ளுவேன்.
நான் ஒரு கிராமத்து ஆளு
நகரத்தில் உள்ளவர்களுக்கு கிடைத்த வாய்ப்புக்கள்
போல் எந்த வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை
அதனால் என் உள்ளே எவ்வளவோ ஆசைகள்
தோன்றியும் ஊக்குவிப்பார் இல்லாமையால்
மக்கி மண்ணாகி பொய் விட்டது.
ஆனால் அவைகள் பிற்காலத்தில்
என் வாழ்வின் அனுபவங்களாக வெளிவர ஆரம்பித்தன
சிறு வயதில் எல்லோரையும் விட்டு ஒதுங்கியே இருப்பேன்.
யாராவது என்னை ஏதாவது கேள்வி கேட்டால் என் அறியாமை வெளிப்பட்டுவிடும் என்ற பயம்
ஆனால் கேள்விகள் கேட்கப்பட்டால்தான்,
கேள்விகள் கேட்டால்தான்
நம் அறிவு வளரும் என்பதை உணர
என் வாழ்வில் பெரும்பகுதி காலியாகப்போன
பின்தான் தெரிந்துகொண்டேன்
என் கருத்துக்களை அது உண்மையாக இருந்தாலும்
வெளியிட ஒரு தயக்கம்.
வாய் மூடி மெளனமாக இருந்துவிடுவேன்
அதனால் என் வாய்ப்புக்களை எத்தனையோ இழந்திருக்கிறேன்
என் கருத்துக்கள் எல்லாம் என் கனவில்தான்
ஒளி /ஒலி பரப்பாகும்
அதை கண்டு ரசிக்க அங்கு
நான் மட்டும்தான் இருப்பேன்.
அங்கும் என்னை பாராட்டவோ
ஊக்குவிக்கவோ யாரும் இருக்கமாட்டார்கள்
என்ன செய்வது ?
சுதந்திரமான அடக்கு முறையில்
வளர்ந்ததால் என் எண்ணங்கள்
எனக்குள்ளேயே அழுந்தி போய்விட்டது .
ஆனால் எண்ணங்கள் என்றும் அழிவதில்லை
அவைகள் எப்போதும் முளைக்காத விதைகள்.
அதே நேரத்தில் எந்த சூழ்நிலையிலும்
கெட்டு போகாத நிலையிலும் இருக்கும்
என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது.
அதனால் அதற்க்கான வாய்ப்புக்கள் வரும்போது
அவைகள் வெளிவரும் என்பது உண்மை.
அதைபோல்தான் என் நிலைமையும் (இன்னும் வரும்) .

என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க... எதற்கும் அடுத்த பதிவைப் படிக்கிறேன்...
பதிலளிநீக்கு