நான் கவிஞனுமில்லை
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-8)
இந்த உலகத்தில்
எதுவுமே நிலையில்லை
எல்லாம் ஒவ்வொரு கணமும்
மாறிக்கொண்டே இருக்கின்றன
ஏன் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கின்றது
மழைபெய்தால் பசுமையாக காட்சி தருகிறது
இந்த உலகம் மழையில்லாமல்
காய்ந்து போனால் நிலம் வரண்டுபோய்
வெடிப்புகள் ஏற்பட்டு
பசுமைக்காட்சிகள் மறைந்து போய்
நிலம் கரம்பாக காட்சியளிக்கிறது
வெள்ளம் வந்தால் எல்லாவற்றையும்
அடித்துக்கொண்டு போய்
நீர் தான் எங்கிருந்து வந்ததோ
அனைத்தையும் அங்கேயே
கொண்டு போய் எல்லாவற்றையும்
கொண்டு சேர்த்துவிடுகிறது.
நீர் ஆவியாகிறது, மழையாய் பெருகி
நதியாய் ஓடி முடிவில் தான் பிறந்த
வீடான கடலுக்கே சென்று விடுகிறது
மனிதர்களை எடுத்துகொண்டால்
நேற்று வரை ஏழையாக இருந்தவன்
ஏதோ ஒரு விதத்தில்
திடீரென்று செல்வந்தனாகிறான்
செல்வந்தனாக இருப்பவன்
தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான்
ஒரு வதந்தி பல தலைமுறைகளாக
ஒன்றாக வாழும் சமூகத்தையே
ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு
மாண்டு போகும்நிலைக்கு தள்ளிவிடுகிறது
நட்பு நாடுகள் பகை நாடுகளாகி விடுகின்றன
இயற்கை சீற்றங்கள் ஒரு நொடியில்
அனைத்தையும் அழித்து
தரை மட்டமாக்கி விடுகின்றன
ஞானமுள்ளவன் மனித சக்திக்கு
அப்பாற்பட்டு ஒன்று உள்ளது
என்பதை உணர்கின்றான்
அதற்கு நாம் தலைவணங்க வேண்டும்
என்பதை புரிந்துகொள்கின்றான் .
உணர்ந்துகொண்டு மாறுவதும்,
மாற்றிகொள்வதும்தான்
அறிவுடையோர் செய்யும் செயல்
இன்பங்களும் துன்பங்களும் நாம்
வாழும் வாழ்க்கையில் ஒரு அங்கம்
அது இந்த உலக வாழ்க்கையில்
நாம் வாழும் காலத்தில்
இடையிடையே வந்து சூரியனை
மறைக்கும் போகும் மேகம் போல
அது நிரந்தரமில்லாது என்பதை
உணர்ந்துகொள்கின்றான்
இந்த மாற்றத்தை புரிந்துகொண்டவன்.
மாற்றத்தை ஏற்றுக்கொண்டு
மனம் அமைதி யடைகின்றான்
இந்த தத்துவத்தை புரிந்து கொள்ளாதவர்கள்தான்
மாற்றங்களை கண்டு அஞ்சுகிறார்கள்
ஏமாற்றங்களை கண்டுமனம்தடுமாறுகிறார்கள்
இன்பத்தில் ஆட்டம் போடுபவன்
துன்பம் வந்தால் துவண்டு போகின்றான்
இன்னும் பல பேர் இயற்கையை எதிர்த்து போராடுவேன்
நீங்களும் போராடுங்கள் என்று பலரையும்
தங்கள் வலையில் விழ வைத்து முடிவில்
குழப்பமடைந்து பெரும் அறியாமைகுழியில்
சிக்கி மாண்டுபோகின்றனர்.
இயற்கையை எதிர்த்து போராடுவதை விட அதனுடன் இயைந்து போகும் படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால். இயற்க்கை கேட்டதைஎல்லாம் தரும். ஏன் கேட்காததை எல்லாமும் கூட அது தரும்.
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-8)
இந்த உலகத்தில்
எதுவுமே நிலையில்லை
எல்லாம் ஒவ்வொரு கணமும்
மாறிக்கொண்டே இருக்கின்றன
ஏன் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கின்றது
மழைபெய்தால் பசுமையாக காட்சி தருகிறது
இந்த உலகம் மழையில்லாமல்
காய்ந்து போனால் நிலம் வரண்டுபோய்
வெடிப்புகள் ஏற்பட்டு
பசுமைக்காட்சிகள் மறைந்து போய்
நிலம் கரம்பாக காட்சியளிக்கிறது
வெள்ளம் வந்தால் எல்லாவற்றையும்
அடித்துக்கொண்டு போய்
நீர் தான் எங்கிருந்து வந்ததோ
அனைத்தையும் அங்கேயே
கொண்டு போய் எல்லாவற்றையும்
கொண்டு சேர்த்துவிடுகிறது.
நீர் ஆவியாகிறது, மழையாய் பெருகி
நதியாய் ஓடி முடிவில் தான் பிறந்த
வீடான கடலுக்கே சென்று விடுகிறது
மனிதர்களை எடுத்துகொண்டால்
நேற்று வரை ஏழையாக இருந்தவன்
ஏதோ ஒரு விதத்தில்
திடீரென்று செல்வந்தனாகிறான்
செல்வந்தனாக இருப்பவன்
தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான்
ஒரு வதந்தி பல தலைமுறைகளாக
ஒன்றாக வாழும் சமூகத்தையே
ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு
மாண்டு போகும்நிலைக்கு தள்ளிவிடுகிறது
நட்பு நாடுகள் பகை நாடுகளாகி விடுகின்றன
இயற்கை சீற்றங்கள் ஒரு நொடியில்
அனைத்தையும் அழித்து
தரை மட்டமாக்கி விடுகின்றன
ஞானமுள்ளவன் மனித சக்திக்கு
அப்பாற்பட்டு ஒன்று உள்ளது
என்பதை உணர்கின்றான்
அதற்கு நாம் தலைவணங்க வேண்டும்
என்பதை புரிந்துகொள்கின்றான் .
உணர்ந்துகொண்டு மாறுவதும்,
மாற்றிகொள்வதும்தான்
அறிவுடையோர் செய்யும் செயல்
இன்பங்களும் துன்பங்களும் நாம்
வாழும் வாழ்க்கையில் ஒரு அங்கம்
அது இந்த உலக வாழ்க்கையில்
நாம் வாழும் காலத்தில்
இடையிடையே வந்து சூரியனை
மறைக்கும் போகும் மேகம் போல
அது நிரந்தரமில்லாது என்பதை
உணர்ந்துகொள்கின்றான்
இந்த மாற்றத்தை புரிந்துகொண்டவன்.
மாற்றத்தை ஏற்றுக்கொண்டு
மனம் அமைதி யடைகின்றான்
இந்த தத்துவத்தை புரிந்து கொள்ளாதவர்கள்தான்
மாற்றங்களை கண்டு அஞ்சுகிறார்கள்
ஏமாற்றங்களை கண்டுமனம்தடுமாறுகிறார்கள்
இன்பத்தில் ஆட்டம் போடுபவன்
துன்பம் வந்தால் துவண்டு போகின்றான்
இன்னும் பல பேர் இயற்கையை எதிர்த்து போராடுவேன்
நீங்களும் போராடுங்கள் என்று பலரையும்
தங்கள் வலையில் விழ வைத்து முடிவில்
குழப்பமடைந்து பெரும் அறியாமைகுழியில்
சிக்கி மாண்டுபோகின்றனர்.
இயற்கையை எதிர்த்து போராடுவதை விட அதனுடன் இயைந்து போகும் படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால். இயற்க்கை கேட்டதைஎல்லாம் தரும். ஏன் கேட்காததை எல்லாமும் கூட அது தரும்.
உண்மை... எந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ள மனம் வேண்டும்... ஆரம்பத்தில் சிறிது சிரமங்கள் வரலாம்... / இருக்கலாம்... பழக்கமானால் வழக்கமாகி விடும்...
பதிலளிநீக்குபழக்கமும் வழக்கமும்
பதிலளிநீக்குநல்லதாக இருக்கவேண்டும்
உதாரணத்திற்கு சித்திரமும் கைபழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம்,ஒழுக்கம், உண்மை, பொறுமை
போன்றவற்றை கடைபிடித்தால் வாழ்வில் முன்னேறலாம்
அன்பும் ,விட்டு கொடுத்து வாழும் பாங்கும்
நல்லதை பாராட்டும் குணமும்,
தீயவற்றை இனம் கண்டு ஒதுக்குதலும் ,
ஒதுங்குதலும் அதனோடு சேர்ந்தால்
வாழ்வில் வெற்றிதான்
ஆனால் குடி பழக்கம், போதைபழக்கம்,
சூது, வாது போன்றவைகளை
பழக்கமாக கொண்டால் பயிரில் களைகள்
பயிரை அழிப்பதுபோல் போல்
வாழ்வு என்னும் பயிரை நாசம் செய்துவிடும்.