தீவிரவாதிகளும்
மதவாதிகளும்
அய்யா எனக்கு
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்?
சொல்லப்பா
என்ன உண்மை தெரியணும்?
தீவிரவாதிங்கன்னா யாரு?
மதவாதிங்கன்னா யாரு?
ரொம்ப சிக்கலான கேள்வி இருந்தாலும்
எனக்கு தெரிந்தவரையில்
பதில் சொல்லறேன்
யார் ஏதோ ஒரு கொள்கையிலே மிகவும் மூர்க்கத்தனமாக
இருக்கிறார்களோ அவர்கள் தீவிரவாதிகள்.
அது மதமாகவும் இருக்கலாம்.
மதங்களை எதிர்க்கும் கொள்கையாகவும் இருக்கலாம்
இல்லை எந்த காரணமுமே இல்லாமலும் கூட இருக்கலாம்
அவர்கள் சொல்லுவதை மற்றவர்கள் ஆராயாமல்
அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இல்லையேல் மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள்.
இப்படிதான் இன்று உலகம் முழுவதும்
வன்முறை பரவிக்கொண்டு வருகிறது.
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த பிரச்சினை உள்ளது .
ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு மாண்டு போகிறார்கள்.
ஒருவொருக்கொருவர் விட்டு கொடுத்து வாழும்
மன பக்குவம் போய்விட்டது.
நாட்டிற்குள்ளே அடித்துக்கொண்டு
மாண்டு போகும் இந்த கூட்டம் இன்று
எல்லா நாடுகளிலும் பல்கி பெருகிவிட்டார்கள்.
சில நாடுகளில் ஆளும் அரசுகளே அவர்களுக்கு
ஆக்கமும் ஊக்கமும் தந்து மற்ற
நாடுகளில் குழப்பத்தை விளைவிக்கின்றன
பாவம் யாராவது இப்படியெல்லாம் செய்யக்கூடாது
உலக மக்கள் அனைவரும் அன்போடு,
அமைதியாக வாழ வேண்டும்
என்று என்று சொல்ல வந்தால்
அடித்து கொள்ளும் இரண்டு கூட்டமும் சேர்ந்து கொண்டு
சொல்பவர்களை எமனுலகிர்க்கு அனுப்பிவிடும்.
அதனால்தான் தீவிரவாதிகளை
எதிர்க்க அரசுகளும் பயப்படுகின்றன.
வெறும் வெத்து வேட்டு அறிக்கைகளை
மட்டும் விட்டுவிட்டு கொஞ்சம் நிவாரணம்
வழங்கிவிட்டு ஒதுங்கிவிடுகின்றன
வழங்கிவிட்டு ஒதுங்கிவிடுகின்றன
ஆனால் உண்மையில் பாதிப்புக்கு
ஆளாகி உயிரை விடுவதும்,
சொத்துக்களையும்,சுற்றங்களையும்
தங்கள் எதிர்காலத்தையும்
இழப்பது அப்பாவி மக்களே.
இவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்.
அது சரி ஒரு சின்ன கேள்விக்கு
இவ்வளவு பெரிய விளக்கமா.?
தலை சுற்றுகிறது.
தலை சுற்றினால் ஒன்று பசியாயிருக்கும்
அல்லது உயர் ரத்த அழுத்தமாக இருக்கும்
போய் மாத்திரை போட்டுவிட்டு
ஏதாவது குடித்துவிட்டுவா
குடி என்றவுடன் குவார்ட்டர் வாங்க
கடைக்கு போய்விடாதே .அது
தலை சுற்றலை விட மோசமானது
போதையேற்றிக்கொண்டு ஏதாவது உளறி வைத்தால்
தலையே இல்லாமல் போய்விடும்.
.உன்னுடைய இன்னுடைய கேள்விக்கு
பதில் சொல்ல வேண்டும் (இன்னும் வரும்)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக