செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா அல்லது மக்களுக்கா?

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா 
அல்லது மக்களுக்கா?

ஆனால் உண்மையில் நடப்பதென்ன ?

இலவசங்களைக் கொடுத்துதான் 
ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற 
நிலை உருவாகிவிட்டது 

இது சரியா? இது முறையா? 

கட்சிகள் ஏராளம். பலர் 
 கையில் காசில்லாமல் 
தலைவர்கள் ஆகிறார்கள். 
பதவிக்கு வந்தபின் 
பொது சொத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். 

அரசின் பணத்தை இலவசங்கள் என்ற பெயரில் 
வாரி  இறைத்துவிட்டு அவர்கள்தாங்கள் நன்மை செய்ததுபோல்   விளம்பரம் தேடிக்கொள்ளுகிறார்கள். 

மக்களின்உணர்ச்சிகளை   தூண்டிவிட்டு 
தூண்டிலில் சிக்கிய மீன்களைப் போல் மக்களை  பலியிடுகிறார்கள். 

அவர்களின் வாழ்வாதாரத்தை, வேலை வாய்ப்பை, அவர்களின், அறிவை, சுகாதாரத்தை முன்னேற்ற என்ற உருப்படியான 
நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. 

கட்சி தலைவர்களுக்காக கண்மூடித்தனமாக 
தொண்டர்கள் தேவையின்றி மோதிக்கொள்கிறார்கள். 

உண்மையாக வரி செலுத்துபவர்களின் பணம் 
அவர்களுக்காக செலவிடப்படுவதில்லை.

தரமான சாலைகள் இல்லை, தடையில்லா மின்சாரம் இல்லை., 
லஞ்ச லாவண்யமற்ற ,துரித கதியில் செயப்படும் நிர்வாகம் இல்லை. 

எங்கு பார்த்தாலும், ஏதாவது ஒரு காரணத்திற்க்காக, சாலை மறியல், கடை அடைப்பு , பொது மக்கள் மீதும், பொது சொத்துக்கள் மீது வன்முறை .பொதுக்கூட்டங்கள் இதுதான் இன்றைய தமிழகத்தின் சாபக்கேடு. 
 .
அரசு ஏழைகளுக்காகசெலவிடப்படும்  தொகை அவர்களைப் போய் சேருவதே கிடையாது. செல்லும் வழியில் உள்ள சுரண்டல் பேர்வழிகளால் உறிஞ்சப்பட்டு வருகிறது. 

இயற்கை வளங்கள் தனி நபர்களால் அரசு ஆதரவோடு 
கொள்ளை அடிக்கப்படுகின்றன 

தவறுகளை தட்டி கேட்பவர்கள் செல்லாக் காசாக்கப்படுகின்றனர்
இல்லை அழிக்கப்படுகின்றனர் . 

நீதி துறை நீதி வழங்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும், மேல் முறையீடுகளால் தீர்ப்புகள் பயனின்றிப் போகின்றன. 

அரசின் சலுகைகளை அனுபவிக்கும் அடிமட்டத்தில் உள்ள சில பிரிவினர்கள்,குடிக்கு அடிமையாகி தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றனர். 

வீட்டிலும் சரி, கல்விக்கூடங்களிலும், பொது வாழ்க்கையிலும் ஒழுக்கம் இல்லை. அதனால் சமூகம் சீர்கெட்டு விட்டது. 

ஊடகங்கள் மக்களுக்கு தவறான தகவல்களை தந்து 
குழப்புகின்றன. 

எதற்கெடுத்தாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிப்பதிலுமே 
அரசியல் கட்சிகளும் அதன் தொண்டர்களும் குறியாக உள்ளனர். 

பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக ஆகின்றனர். ஏழை ஏழையாகவே இருக்கிறான், கோழையாகவே இருக்கிறான். 

வேலை தேடுபவனுக்கு வேலை கிடைக்கவில்லை. உழைப்பவனுக்கு உரிய கூலி கிடைக்கவில்லை. இவைகளை அரசு கண்டு கொள்வது கிடையாது 

உழைக்கின்ற கூட்டம்உழைத்துக் கொண்டிருக்கிறது. ஏமாற்றி பிழைக்கிற கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது 

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம்
நம் நாட்டை விட்டு விரட்டப்படவேண்டும். 






இன்று முதியோர் தினம்

இன்று முதியோர் தினம் 

இன்று முதியோர் தினம்
கொண்டாடுகின்றனர்

முதியவ்ர்களுக்கென்று  ஓர் தினம்
அக்டோபர் முதல் தினம் என்று
முத்தாய்ப்பாக உலகம் கொண்டாடுகிறது

இந்நாள் இவன் பிறந்த தினமாக
அமைந்துவிட்டது ரெட்டிப்பு மகிழ்ச்சி.

எனக்கென்ன குறைச்சல் (நீ) நான்
ஒரு ராஜா ,வந்தால் வரட்டும்
முதுமை என்று வரவேற்கிறேன்.

இளமையில் சாதித்தவர்களை விட
முதுமையில் சாதித்தவர்களின்
எண்ணிக்கைதான் அதிகம் இவ்வுலகில்

கடமைகளை முடித்தவனுக்கும்
கட்டுப்பாடோடு இயங்குபவர்க்கும்
முதுமை ஒரு வரப்ரசாதம்

கடமைகள் முடியாவிடில் அதற்க்கு
கவலைப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு
உண்டு என்று நம்பி ஒவ்வொரு நாளையும்
இறைவன் அளித்த பரிசாகக் கருதி
மகிழ்ச்சியுடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

நல்லதோர் நட்பு வட்டத்தில் இருப்பவர்க்கும்
நலம் நாடும் சுற்றங்கள் அமைந்தவர்க்கும்
அன்பு மனையாளும் உறவுகளும்
அமைந்தவ்ர்க்கும் முதுமை அருமை

ஒழுக்கத்தை தொலைத்தவர்க்கும்
ஓரவஞ்சனை செய்து வாழ்ந்தவ்ர்க்கும்
முதுமை கொடுமை ,கடுமை
மற்றும் வெறுமைதான்

கடந்தகால இன்பதுன்பங்களும் ,கசப்பான
நினைவுகளும் ,பிறருக்கு இழைத்த துன்பங்களும்
நெஞ்சில் இருந்தாலும் இனியாவது அவைகளை
மறந்து தன்னை திருத்திக்கொள்ள முத்தான
வாய்ப்பு முதுமை .அப்படி செய்தால்  அருமை

பொறுமை வேண்டும் முதுமையில்
கடுமை கூடாது வாக்கினில் பதட்டம் கூடாது 
செயலில் ,குறைகள் காணாது நிறைகளையே
காணும் சூத்திரம் அறிந்து செயல்பட்டால்
இந்த உடல் என்னும் பாத்திரம் பத்திரமாக
இருக்கும். இல்லையேல் நோய்கள்தான்
பற்றும்.படுக்கையில்  தள்ளிவிடும்.

சுயநலம் கூடாது, சுறுசுறுப்பாய் இருக்கவேண்டும்
சூடான பேச்சு கூடாது கூடினால் குருதியின்
அழுத்தம் கூடிடும். கூற்றுவனின் கவனத்திற்கு
சென்றுவிடும்.வாழ்வு முடிந்துவிடும்

ஆசைகளை குறைத்துக்கொண்டால்
ஆனந்தமாக  வாழலாம் .பூஜைகள் செய்தால்
பொங்கும் கடல் போன்ற மனமும் பூப்போல்
லேசாகிவிடும். .

உழைப்பும் ஓய்வும்,உதவும் எண்ணமும்
இருந்தால் முதுமைகாலம்  இளமைக்காலத்தை விட
இன்பமாக இருக்கும். இதுதான் உண்மை.

முக்தியைத் தரும் முகுந்தனை, முருகனை,
முக்கண்ணனை, முப்பெரும் தேவியை ,
வணங்கி மகிழ இந்த பருவத்தை விட
தகுதியான பருவம் உண்டோ?



புதன், 24 செப்டம்பர், 2014

பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள் உம்மை பற்றாது

பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள்  
உம்மை பற்றாது 

எங்கும் நிறைந்தவனே எழில் 
வடிவம் கொண்டவனே

அண்டத்து உயிர்களைக் காக்கும்
ஆதவனின் ஒளியாய் இருக்கின்றாய்

ஆணவம் கொண்டு அலைபவர்களை 
அழிக்கும் தீயாய் திகழ்கின்றாய் 

மாதவம் செய்த நல்லோர்களின் 
வேண்டுகோளை ஏற்று  பாரினில் 
யாதவனாய் அவதரித்து 
பாதகம் செய்பவர்களை அழித்தாய் 




எங்கும் நிறைந்தவனே எழில் 
வடிவம் கொண்டவனே கண்ணின் 
ஒளியாய் திகழும் கண்ணனே 





சொல்ல சொல்ல திகட்டாது உன் நாமம் 
சொல்லிக்கொண்டே இருந்தால் போதும் 
என்றும் எமை அண்டாது காமம் 

கர்ம வலையில் சிக்கித் தவித்த 
எமக்கு எளிதில் விடுபடும் 
வழியைக் காட்டினாய் 

பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள்  
உம்மை பற்றாது என்று பார்த்தன் மூலம்
பாரதப் போர் தொடங்கு முன்பு பறை சாற்றினாய்

உன் திருவடியைப் பற்றியவர்க்கு
இகத்திலும் பரத்திலும் பயமில்லை ,
நிலையான இன்பமுண்டு 
என்றுரைத்தாய். 

நினைவுள்ள வரை என் நெஞ்சில் 
இருக்கட்டும் உன் நாமம்

.உந்தன்  கவின் வடிவினைக் கண்டு ஆனந்தம் 
அடையட்டும் என் கண்கள் .கண்ணில் 
ஒளியிழந்தாலும் இதயத்தில் ஒளியாய் 
நிலைத்து நீங்காஇன்பம்  தந்திடுவாய் 

வியாழன், 18 செப்டம்பர், 2014

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ் இல்லாவிடில் உன் வாழ்வு பாழ்


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ் 
இல்லாவிடில் உன் வாழ்வு பாழ் 



ஒரு காட்டில்  ஒரு காகம் வசித்து வந்தது 
அது சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து 
வந்தது .ஒரு அன்னத்தை சந்திக்கும் வரை 

காகத்தின் நிறமோ கருப்பு. 
அன்னமோ வெண்மை நிறம் .அதைப் பார்த்தவுடன் 
தன் நிறமோ கருப்பு .அன்னத்தின் நிறமோ வெளுப்பு 
எனவே அது தன்னை விட மகிழ்க்சியாக இருக்கும் என்று 
தனக்குள் எண்ணிக்கொண்டது.

Image result for swan

அதன் மனது சமாதானம் அடையவில்லை. தன் 
கருத்தை அந்த அன்னத்திடம் நேரடியாகவே 
கேட்டு விட்டது. 

அதற்கு அன்னம் பதில் கூறியது. நீ  கருதுவதுபோல்தான் 
நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் ஒரு பச்சைக் கிளியைக் காணும் வரை. 
அதன் உடம்பில் பச்சை மற்றும் அதன் மூக்கு சிவந்த வண்ணத்தில் அழகாக இருப்பதைக் கண்ட பின் அதுதான் தன்னைவிட மகிழ்ச்சியான பறவை என்று எண்ணினேன். 


உடனே காகம் கிளியிடம் சென்று நீதான் எல்லாப் பறவைகளை விட மகிழ்ச்சியான பறவை என்றது. 

உடனே கிளி சொன்னது, நானும்  அப்படிதான் நினைத்துகொண்டிருந்தேன் பல வண்ணங்களுடைய தோகையை  விரித்து ஆடும் மயிலைக்  கண்டு அதுதான் நம்மை விட மகிழ்ச்சியான பறவை என்று நினைத்தேன் என்றது.

உடனே காகம்  மிருக காட்சி சாலைக்கு சென்று அங்குள்ள மயிலை காணச் சென்றது. அந்த மயிலைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான மக்கள் வந்து சென்றார்கள். அவர்கள் எல்லோரும் சென்றபின் காகம் மயிலிடம் சென்றது. 

அன்பான மயிலே நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உன்னைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகிறார்கள் .ஆனால் என்னை மக்கள் கண்டால் துரத்துகிறார்கள். சிலர் துன்புறுத்தவும் செய்கிறார்கள். இதைப் பார்க்கும்போது உலகிலேயே நீதான் மகிழ்ச்சியான பறவைபோல தெரிகிறது என்றது. 

மயில் தன் மனதில் உள்ள சோகத்தை காக்கையிடம் கொட்டியது.
நீ நினைப்பதுபோல் நான் அழகான வண்ணப் பறவை என கர்வம் கொண்டு  மகிழ்சியாக ஆடித் திரிந்தேன் இந்தக் கூட்டில் அடைபடும் வரை




இந்த மிருக காட்சி சாலையில் இருப்பவர்கள் அனைவரும்என்னைப் போல் பலரும் தங்கள் அழகை நினைத்து கர்வப்பட்டு திரிந்தவர்கள்தான் .தங்கள் சுதந்திரத்தை இழந்து கூட்டில் அடைபட்டு இவர்கள் போடும் சத்தற்ற உணவை தின்றுகொண்டு எங்கள் விதியை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம் என்றது மயில்  


எனக்கு இருக்கும் இந்த அழகுதான் என்னை இங்கு கூட்டில்  சிறைப்படுத்திவிட்டது.என்பதை இப்போதுதான் உணர்கிறேன். இருந்தும் என்ன செய்ய? என்னால்ஒன்றும்  செய்ய இயலாது. இந்த கூட்டிலேயே வாழ்ந்து மடிவதை தவிர வேறு வழியில்லை .


உன்னைத்தான் யாரும் சிறை பிடிப்பதில்லை .கூண்டில் அடைப்பதில்லை 
நீ சுதந்திரமாக மகிழ்ச்சியாக பறந்து திரிகிறாய். எனவே நீதான் உலகிலேயே மகிழ்ச்சியான  பறவை என்பதைப்  புரிந்துகொள் என்றது மயில்
 . 
காகத்திற்கு இப்போதுதான் புத்தி வந்தது. 

மனிதர்களும் இந்த காகத்தைப் போல்தான் நடந்துகொள்கிறார்கள்.
தேவையில்லாமல் தன்னை ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தன்னிடம் உள்ள தனித் திறமையை அடையாளம் கண்டுகொள்ளாமல் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ளுவது போல் தங்கள் வாழ்வை நரகமாக்கி கொள்கிறார்கள் 


இதனால் வாழ்வு முழுவதும் எல்லாம் இருந்தும் அவர்கள் மன நிறைவற்ற வாழ்க்கை வாழ்வதுடன், தன்னை சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சியையும் கெடுக்கிறார்கள்

இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனித் திறமையைக் கொடுத்துள்ளான் அதைக் கண்டறிந்து அதில் ஈடுபாடு கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டால்  வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும், சாதனைகளையும் செய்ய முடியும்,

இனிமேலாவது அனைவரும் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை விடுத்து தன்னிடம் உள்ள திறமைகளை மெருகேற்றி வாழ்வில் முன்னேறி மகிழ்ச்சிக்  கனியைப் பறிக்க முயல வேண்டும். 

மூலம் ;bhaskaran19@gmail.com

படங்கள் நன்றி.-googleimages 










கவிஞர்களின் வாழ்வு அன்றும் இன்றும்

கவிஞர்களின் வாழ்வு அன்றும் இன்றும் 


முன்னாளில் சென்ற நூற்றாண்டு வரை
கவிஞர்கள் வறுமையில் தான் வாடி
வதங்கினார்கள்

அன்று அரசர்களையும் பின்னாளில்
செல்வந்தர்களையும் போற்றிப் பாடி
பிழைப்பை நடத்தினார்கள்.

அழியும் மனிதர்களைப் பற்றி பாட மறுத்து
அழியா பரம்பொருள் மீது பாடியவர்களும் உண்டு

இன்றோ ஒரு பாடலை இயற்றிவிட்டாலே அதுவும்
புகழ்பெற்றுவிட்டால் அவர்கள் செல்வச் செழுப்பிலே
மிதக்கிறார்கள்.

ஆனால் அன்று நிலைமை அவ்வாறு இல்லை.

தமிழுக்கு வாழ்வு கொடுத்த பாரதிக்கு
தமிழ் சமூகம் வாழ்வு கொடுக்கவில்லை ,அவனை
வறுமையில் தள்ளி இளமையிலேயே இந்த உலகத்தை
விட்டு விரட்டிவிட்டது.

அன்றைய பாரதியின் நிலை.





இந்த ஓவியத்தை வரைந்தபோது மனதில்
சோகம்  நிறைந்தது .என்ன செய்ய ?

திருவிளையாடல்-சேர்ந்தே இருப்பது?
வறுமையும் புலமையும் -அன்று. இன்றல்ல

இன்று எழுதுபவர்களின் தலையெழுத்தே
மாறிவிடுகிறது.-அதிர்ஷ்டம் இருந்தால்.

இன்றைய கவிஞர்களின் வாழ்வு..
வாய்ப்பு, வசதி.என்ன என்பது
அனைவருக்கும் தெரியும் ...






செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்..


அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்..

Image result for dog and dolphin friendship

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்
என்றார்கள் ஆன்றோர்.

ஒரே இனத்தை சேர்ந்த இரு உயிரினங்கள்
அன்பு பாராட்டுவதில் வியப்பு ஒன்றுமில்லை.

ஆனால் நிலத்தில் வாழும் நாயும் நீரில் வாழும் டால்பின்னும்
கட்டும் அபரிமிதமான அன்பு வியக்க வைக்கிறது.

இணைப்பில்  கண்டுள்ள காணொளியைக்  காணுங்கள்.
அப்போது புரியும்.

அன்பின் வலிமை எத்தகையது என்று


https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CB0Q3ywwAA&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DWT69H5ZEoto&ei=DVsYVMCLKMziuQSHvIGYDQ&usg=AFQjCNGMF4mpjswtdBSMj06nGoPloIdWDQ&sig2=H0dVnnVPXgT1j3_HmFtEcQ&bvm=bv.75097201,d.c2E



பஞ்சு மிட்டாய் -இப்படியும் செய்யலாம்.


பஞ்சு மிட்டாய் -இப்படியும் செய்யலாம்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை
அனைவரையும் கவர்ந்து இழுப்பது
பஞ்சு மிட்டாய்.

சக்கரை பாகில் வண்ணம் சேர்த்து
கவர்ச்சியாக செய்யப்படுவது.

ஆனால் அதில் புதுமைகளைப் புகுத்தி
மலர்கள் வடிவத்தில் வண்ணம் சேர்த்து
செய்வது நன்றாக உள்ளது.

எதுவாக இருந்தாலும் அதில் புதுமைகளைப்
புகுத்துவது சில நாட்டில் உள்ளது.

நாம்தாம் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறோம்.

கீழே காணும் காணொளியை கண்டு
ரசித்து கற்பனையில் பஞ்சு மிட்டாய்களை   உள்ளே தள்ளுங்கள். 

நன்றி;

https://www.facebook.com/video.php?v=268147910023464&set=vb.100004847714200&type=2&theater

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

எங்கெங்கும் காணினும் சக்தியடா

பாரதி அன்று பாடினான் 

எங்கெங்கும் காணினும் சக்தியடா 

இன்றுஎங்கெங்கும் காணினும் குப்பையடா

என்றுதான் பாடவேண்டும்.



இன்று தமிழ்நாட்டில்
குப்பைகள் இல்லாத இடமேயில்லை 

மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தனி தனியே பிரித்து போட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டும் அதை காற்றில் பறக்கவிட்டு விட்டு கண்ட இடங்களில் குப்பைகளை வீசி எறிவதில் நம் நாட்டு மக்களுக்கு இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும்  இல்லை 

மக்கும் குப்பை எது மக்காத குப்பை எது என்று 
தமிழ் நாட்டு மக்களுக்கு என்று 
புரியபோகிறதோ தெரியவில்லை 

எம்மதமும் சம்மதம் என்பதுபோல் எல்லா 
குப்பைகளும் ஒன்று என்று எண்ணுகிறார்கள் போலும். 

முக்கியமாக அவர்கள் குப்பைகளை போட தேர்ந்தெடுக்கும் இடம் கழிவுநீர் கால்வாய்கள், குப்பை தொட்டிகளின் வெளிப்புறத்தில், பேருந்து மற்றும், ரயில் வண்டி பாதைகள், நிலையங்கள், ,என எல்லா இடங்களிலும் குப்பைகளை போடுவது அவர்கள் இயல்பு. 


படித்தவன், பாமரன் என அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்றாக செயல்படுவது பாராட்டத்தக்கது

இதனால் எல்லாஇடங்களிலும் கழிவு நீர்தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை எல்லா நேரங்களிலும் பதம் பார்க்கின்றன

மக்களை வீடுகளிலேயே முடக்கி வைக்கின்றன

ஜன்னல் கதவுகளை திறந்து இயற்கை காற்றை 
சுவாசிக்க வழியில்லை

கதவை திறந்தால் துர்நாற்றம்தான்  வீசுகிறது

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசு விரட்டிகளுக்காக
பல நூறு ரூபாய்களை மாதம்தோறும் அழவேண்டி உள்ளது




அப்போதும்  நம்மை கொசுக்கள் விடுவதில்லை. தில்லை நாடராஜன்போல் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் நம் உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி கோடிகணக்கில் கொழுத்து உடலில் பச்சை குத்துவதுபோல் எல்லாவற்றின்மீதும் மஞ்சள் நிறத்தில் முட்டையிட்டு ஆட்டம் போடுகின்றன. 

மனிதர்களில் பல வகைகள் இருப்பதுபோல நோய்களை  பரப்பும்
கொசுக்கள் மக்களுக்கு இலவசமாக நோய்கிருமிகளை நம்மிடமிருந்து ரத்தம்
பெற்றுக்கொண்டதற்காக அன்போடு பரிசு அளிக்கின்றன

அதை தவிர நோய்களில் மாட்டிகொண்டு மருத்துவ செலவு 
பல ஆயிரங்கள் அழுதும் இந்த மனித ஜன்மங்கள் 
கொஞ்சம் கூட பாடம் கற்றுகொள்வதாக தெரியவில்லை

ஆனால் என்ன துன்பபட்டாலும் 
குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறிந்து 
மகிழும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை
என்பது தமிழ் நாட்டு மக்களின் ஏகோபித்த  கருத்து 

சனி, 13 செப்டம்பர், 2014

என்று ஒழியும் இந்த மூடத்தனம்?


என்று ஒழியும் இந்த மூடத்தனம்?

கீழே காணும் படத்திற்கு விளக்கம் தேவையில்லை.

ஆனால் மேனாட்டு மோகத்தில் மூழ்கி கிடக்கும்
நம் நாட்டு மக்கள் என்றுதான் பெறுவார் விழிப்புணர்வு?

இதுபோல் பல சாக்கடை கழிவுகளையும், விலங்குகளுக்கு போடும்
கழிவுபொருட்களையும் நம் தலையில் சத்துள்ள  உணவு என நம்மை நம்ப வைத்து  அதிக விலை வைத்து நம் தலையில் நம் நாட்டை சுரண்டும் மேலை நாட்டு அயோக்கியர்களிடமிருந்தும்  அதற்க்கு துணைபோகும் நடிகர்களிடமிருந்தும் உள்நாட்டு வியாபாரிகளிடமிருந்தும்
நம் மக்கள் மீளவே முடியாதா?



நன்றி-https://www.facebook.com/photo.php?fbid=928760450474447&set=a.613544981995997.1073741826.100000215019640&type=1&theater

அந்த நாளும் வந்திடாதோ?

அந்த நாளும் வந்திடாதோ?

ஒரு கல்விசாலை திறக்கப்பட்டால்
பல சிறைச்சாலைகள் மூடப்படும்
என்று அன்று சொன்னார்கள்.

ஆனால் இன்று படித்தவன், படித்து வேலையில்லாதவன்,.படித்துக்கொண்டிருப்பவன்
அனைவரும் கொள்ளையடிப்பதை பகுதி நேர
பணியாக வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

மெத்தப் படித்தவன் விஞ்ஞான முன்னேற்றங்களை
பயன்படுத்தி பல லட்சம் மக்களை எளிதாக
ஏமாற்றி கொழுக்கிறான்.

எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம்.
வாழ்க்கைக்கு தேவையான நல்ல
பண்புகள் வீட்டிலும் போதிக்கப்படுவதில்லை.
கல்விக்கூடங்களிலும் போதிக்கப்படுவதில்லை.

நாட்டை ஆள்பவர்களிடமும்
அந்த பண்புகள் இல்லை.


நம் நாட்டிலும் மற்ற அனைத்து  நாடுகளிலும்
சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன.

பல நாடுகளில் சிறைச்சாலைகள் 5 நட்சத்திர விடுதிபோல் எல்லா வசதிகளையும் கைதிகளுக்கு அளிக்கின்றன. பல நாடுகளில் விலங்குகள்போல் சிறையில் உள்ளோர் கொடுமைப்படுத்தப்படுகிரார்கள்.

நம்நாட்டில் லட்சக்கணக்கானோர் சிறையில் காரணமின்றி
அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.சிறைக்கு சென்றவர்கள் கொடும் குற்றவாளிகளாகத்தான்  வெளியே  வருகின்றனர்.

ஆண்டுதோறும் சிறைச்சாலை பராமரிப்புக்காகவும், காவலர்களுக்காகவும், சிறைக் கைதிகளுக்காகவும், நீதி துறைக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய் வீணாகிறது. அதில் ஒரு பகுதி ஒழுக்க கல்விக்கு செலவு செய்யப்படுமானால்
இந்த உலகம் உருப்படும்,சீர்படும்

சமூகத்தில் ஒழுக்கம் குன்றியமையால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஒழுக்க கல்வி போதிக்கப்படுவதுடன், அதை வாழ்வில் கடைபிடிக்கவும் செய்தால்தான் இந்த பிரச்சினை தீரும். 

நிலைமை இவ்வாறிருக்கையில் நார்வே நாட்டில் போதிய குற்றவாளிகள் இல்லாமையால் 19 சிறைச்சாலைகள்  மூடப்படுவதாக ஒரு செய்தி கண்டேன்/

அந்த நாள் நம் நாட்டில் என்று வருமோ?




நன்றி-https://www.facebook.com/photo.php?fbid=928772110473281&set=a.613544981995997.1073741826.100000215019640&type=1&theater

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

புச்சுக்குட்டியும் நானும் (7)

புச்சுக்குட்டியும் நானும் (7)

இப்படி பாசமுடன் பழகிய புச்சுக்   குட்டிகளை 
அப்படியே விட்டுவிட்டு பிரியும் நேரம் ஒரு நாள் வந்தது 



அவைகளின் ஒவ்வொரு அசைவையும் படமாக்கினேன் 
இன்று அவை நினைவு சின்னங்கள் அவைகள் என் மீது காட்டிய அன்பும் பாசமும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களிடம்  நிச்சயம் எதிர்பார்க்கமுடியாது. 












கண்ணீருடன் எங்களை வழியனுப்பி வைத்தது இந்த ரோஸ் நிறப் பூனை. 
ஆண்டுகள் 6 ஓடிவிட்டன .ஆனால் அவைகளுடன் பழகிய நாட்கள் நெஞ்சில் இன்றும்  பசுமையாக இன்ப நினைவுகளை நினைவூட்டுகின்றன  


ஏக்கத்துடன் பார்த்தது பிரவுன் நிற பூனை. 



என்ன செய்வது ? இந்த உலகில் எந்த உறவுகளும் நிரந்தரமில்லையே!

புச்சுக் குட்டியும் நானும் (6)

புச்சுக் குட்டியும் நானும் (6)


பூனைக் குட்டிகள் அழகு தேவதைகள்

அந்த மூன்று பூனைக்குட்டிகளும்
நான் எப்போது பார்த்தாலும்
ஒன்றாகத்தான் இருக்கும்.

நான் படம் பிடிக்கும்போது அழகாக
போஸ் கொடுக்கும்

அப்படி பிடித்த ஒரு அழகான படம்.  ஒன்று
அதற்க்கு ஒரு தலைப்பு கொடுத்தேன்

"நாங்கள் எப்போதும் ஒற்றுமையாய் இருப்போம்.நீங்கள்?





எனக்கு உன் மீது கோபம்..ஏன் என்னை 
உன் மடியில் உட்கார வைக்க மறுக்கிறாய்?


ஒரு நாள் இரவு கதவைத் திறந்து பார்க்கும்போது மூன்று குட்டிகளும் கிணற்றின் மேல் போடப்பட்டுள்ள  வலையின்மீது இரண்டு முன்னங்கால்களையும் கைகளை கூப்பிக்கொண்டு உறங்கியதை கண்டவுடன் என் மனதில் ஒரு கருத்து  தோன்றியது. 

இறைவனை வணங்கிய  கையோடு   உறங்க செல்ல வேண்டும். என்ற கருத்துதான் அது. அணைத்து சிந்தனைகளையும் ஒதுக்கிவிட்டு நாமும் அவ்வாறு செய்தால் நிம்மதியான  உறக்கம் வரும் 




புச்சுக் குட்டியும் நானும்(5)

புச்சுக் குட்டியும் நானும்(5)

இறைவன் படைப்பில் எல்லாமே
அழகோவியங்கள் தான்
நாம்தான் அவைகளை
அழகானவை,அழகற்றவை
என நம் மனதில் தோன்றும்
எண்ண பேதங்களினால்
பிரிவுபடுத்தி . வெறுப்பை விதைத்து
வேதனையை அறுவடை செய்கிறோம்.

பூனைகள் தூங்கும்போது  காண்பதற்கு
அழகாக இருக்கும். அதன்  கள்ளம்
கபடமற்ற முகத்தை நான் வெகுவாக ரசிப்பேன்.
அப்படியே கட்டி முத்தமிட நினைக்கத் தோன்றும்.
ஆனால் அது எப்போதும் நாக்கினால் உடல் முழுவதையும்
நக்கிகொண்டே இருப்பதை கண்டதும் அந்த எண்ணத்தை
அடக்கிக் கொள்வேன் .அவற்றில் சில படங்களை எடுத்தேன்.

ஒவ்வொன்றும் காமிரா கவிதைகள்


இன்னும் தூக்கம் தெளியவில்லை. சூரிய ஒளியின் இதமான சூட்டில் குளிர் காய்கின்றன 



இருட்டில் ஒளிரும் கண்கள் 




தன் இரண்டு தம்பிகளும் உறங்கையிலே அண்ணன் 
காவல் காக்கின்றான். 





புச்சுக் குட்டியும் நானும்(4)

புச்சுக் குட்டியும் நானும்(4)

 இப்படியாக எங்களுக்குள் ஒரு 
பந்தம் தொடர ஆரம்பித்துவிட்டது 

காலையில் முதலில்புச்சுக் குட்டிகளை 
பார்த்து குசலம் விசாரித்தபின்தான் 
நான் என் வேலைகளை கவனிக்க செல்வேன். 

அதோடு இரவு வீடு திரும்பியதும் அவைகளைப் பார்த்து ஏதாவது சாப்பிடப் போடுவேன் அவைகளும் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போய்விடும் 

ஒருநாள் இருட்டில் பார்த்தேன் அவைகள் தூங்கி கொண்டிருந்தன. 

தன்   தம்பி பூனையை அண்ணா பூனை  பாந்தமுடன் அணைத்துக்கொண்டு 
தூங்கும் காட்சி என் மனத்தைக் கவர்ந்தது. அப்படி ஓர் அழகு .பார்த்துக்கொண்டே இருக்கலாம் 

உடனே படம்பிடித்தேன். 
அந்த படம் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று 
7 ஆண்டுகளாக என்னுடைய கணினியில் பத்திரமாக உள்ளது. 

அதை எப்போது பார்த்தாலும் என்னுள்ளத்திலும் பாசம் ஊற்றெடுக்கும் . ஆனால் 
அதை யாரும் புரிந்துகொள்வதில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம். 

அந்த படம் உங்கள் பார்வைக்கு. 




மனித சகோதரர்களும் அவைகள்போல் 
பாசமுடன் இருந்தால் எவ்வளவு  நன்றாக இருக்கும்? . 

சனி, 6 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும்(3)


புச்சுக் குட்டியும் நானும்(3)

காலையில் எழுந்தவுடன்
சமையலறைக் கதவை  நான் திறக்க
தாழ்ப்பாளை நீக்கும் ஓசை  கேட்டவுடன்
மூன்று  பூனைக் குட்டிகளும்
ஒரே  நேரத்தில் "மியாவ் " என்று   கத்திக்கொண்டு
அழகாக  நிற்பது பார்க்க பரவசமாக இருக்கும்.

ஒரு குச்சியை எடுத்து   விரட்டினால் சற்று  தள்ளிப் போய்
நின்று கொண்டு   ஏக்கமாய் ஒரு பார்வை பார்க்கும்

உடனே ஒரு  தட்டில் பாலை ஊற்றி வைத்தவுடன்
பார்க்கும் . திரும்பவும் விரட்டுவேனோ என்று பயம்.

நான் உள்ளே சென்றவுடன்  பாலைக்  குடித்துவிட்டு
விளையாட  செல்லும்

ஒருநாள் மூன்றும்  மதிய உணவை  
உண்டுவிட்டு நிழலில் இளைப்பாறிகொண்டிருந்தன.

எடுத்தேன் காமிராவை.
உடனே போஸ் கொடுத்தன .

அந்த  படம்   இதோ