செவ்வாய், 2 அக்டோபர், 2012

லால் பகதூர் சாஸ்திரி

எனக்கும் இன்று பிறந்த நாள் 


யார் அந்த குரலுக்கு சொந்தக்காரர்?


இவர்தான் லால் பகதூர் சாஸ்திரி 

உருவத்தால் சிறியவர்
உள்ளத்தால் உயர்ந்தவர்

பாகிஸ்தான் படையெடுப்பின்போது
நம் நாட்டின் வீரர்களையும் 
மக்களையும் தட்டிஎழுப்பி 
நாட்டை காத்தவர் 

ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 

உயர் பதவி வகித்தாலும் 
எளிமையின் சின்னமாய் 
வாழ்ந்தவர் 

சமாதானத்தின் தூதுவராய்
தாஷ்கண்ட் சென்றவரை 
இறைவனின் தூதர்கள் 
தங்கள் நாட்டிற்கு அழைத்து 
சென்று விட்டனர் 

சுயனலமற்றவர்
என்றும் மற்றவர் 
நலம் விரும்பியவர் 

வாழ்க என்றும் உன் புகழ் 


2 கருத்துகள்:

 1. எனக்குத் தெரிந்து நீங்கள் ஒருவர் தான் ஐயா, நம்ம லால் பகதூர் சாஸ்திரி அவர்களைப் பற்றி பகிர்ந்துள்ளீர்கள்... மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 2. லால் பகதூர் சாஸ்த்ரியின்
  வாழ்க்கை மிகவும் துன்பமயமானது
  அவரின் அப்பழுக்கற்ற நேர்மையும்,
  எளிமையும்,தியாகமும்
  இக்கால மக்களுக்கு போய் சேரவில்லை.
  என்ன செய்வது ?

  இங்கு இருப்பவர்களுக்கு
  உள் நாட்டில் இருக்கும்
  வைரங்களின் மதிப்பு தெரிவதில்லை

  வெள்ளை தோலைக் கொண்ட
  மேலை நாட்டு
  கூழாங் கற்களை வைரம் என்று நம்பி
  தலைமேல் வைத்துகொண்டு கூத்தடிக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு