புதன், 3 அக்டோபர், 2012

அந்த நாள் நினைவிலே வந்ததேபகுதி-(21)


அந்த நாள் நினைவிலே வந்ததேபகுதி-(21)

அந்த காலத்தில் மக்களுக்கு 
மனசோர்வும் கிடையாது
உடல் சோர்வும் கிடையாது 

அவர்கள் குடலை கெடுக்கும் 
எதையும் காலையில் எழுந்தவுடன் 
உள்ளே தள்ளியது கிடையாது

தூங்கி எழுந்தவுடன் வாயை சுத்தம் செய்யாமல் 
எதுவும் உண்பது கிடையாது 

வாயை சுத்தம் செய்ய இக்காலத்தில் உள்ளதுபோல்
எந்த நன்மையையும் அளிக்காத சுண்ணாம்பு 
பசைகள் அக்காலத்தில் கிடையாது

சுற்று சூழலை நாசமாக்கும் டூத் பேஸ்டுகள்
அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் , 
பிளாஸ்டிக் பிரஷ்கள் வாயை  சுத்தம் செய்யும்
ஏராளமான ஜெல்கள் என காலை கடனை தொடங்க 
கடனுக்கு பல ஆயிரம் அழவேண்டிருக்கிறது இந்நாளில் 

அன்று பயன்படுத்தியது எல்லாம்  இயற்கையான பொருட்கள்.
சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாதவை  

தீயிட்டு கருக்கிய உமி,மாவிலைகள், நாரத்தை மர இலைகள் 
வேப்பமர குச்சிகள்  ஆலம் விழுதுகள் ஆகியவற்றை பயன்படுத்தி 
பற்களை  சுத்தம் செய்வார்கள். 
பற்கள் முதுமை வரை உறுதியாக இருக்கும்.

பற்களை கெடுக்கும் சாகலட்டுகளோ,இனிப்புகளோ, 
ரசாயனம் கலந்த பொருட்களோ  ஐஸ் கிரீமோ  
அந்த காலத்தில் கிடையாது. 

பல் மருத்துவர்களுக்கு வேலையே கிடையாது. 

குளிக்காமல்,குளித்துவிட்டு இறைவனை வணங்காமல் 
கூழை கூட குடிக்கமாட்டார்கள் 

இன்று இருப்பதுபோல் மாதம் பல ஆயிரம் ரூபாய்க்கும் 
கண்ட கண்ட பானங்களைஎல்லாம் குடித்தது வயிற்றையும்,
பற்களையும் பாழ் பண்ணிக்கொண்டு
இளம் வயதிலேயே நோயாளிகளாகவும், 
சொத்தை பற்களுடன் நாற்றமடித்துக் கொண்டு 
குண்டு பூசணிகலாக வலம் வருவது 
அக்காலத்தில் கிடையாது.

கண்ட எண்ணைகளில், கொழுப்பில் பொறித்த 
உணவுகளை தின்று விட்டு அது ஜீரணிக்க 
மாத்திரைகளையும் ஜெல்களையும் 
உணவுண்ட பின்னும், முன்னும் முழுங்கும் 
அவலம் அக்காலத்தில் கிடையாது

காலையில் அவர்கள் உண்பது பழைய
 சோறும் தண்ணீரும் மட்டுமே

கைகுத்தல் அரிசியால்  வடிக்கப்பட்ட சாதத்திலிருந்து
பெறப்பட்ட கஞ்சி அருமையான சத்தான உணவு. 
அதில் மோர் ,சிறிது உப்பு சேர்த்து குடித்தால் 
பலமணி நேரம்  பசிஎடுக்காது
நன்றாக உழைக்கலாம். 

கேழ்வரகு,கம்பு , கூழ் 
உழைப்பவர்களுக்கு நல்ல சத்தான உணவாக அக்காலத்தில் இருந்தது. 
அது உடலுக்கு குளிர்ச்சியும் உரமும் புத்துணர்ச்சியும் அளிக்கும்

அந்த காலத்தில் இயற்க்கை உரங்களை மட்டும் 
பயன்படுத்தி பயிர்கள் விளைவித்ததால் 
உணவுகள் சுவையாக இருக்கும்,
மணமாக இருக்கும், சத்துள்ளதாக இருக்கும்.

பின் விளைவை தரும் பூச்சி கொல்லிகளை 
பயன்படுத்தாமையால்
உணவு உடனே கெட்டுபோகாமல் இருந்தது

இக்கால உணவுகள் சமைத்த சில மணி  நேரத்தில்
கெட்டுபோகின்றன,அல்லது புளித்து போகின்றன. [இன்னும் வரும்)
.  

2 கருத்துகள்:

 1. நீங்கள் குறிப்பிட்ட பொருட்கள் எல்லாம் (சிலவற்றை தவிர) சிறு வயதில் உபயோகித்ததுண்டு...

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. அந்த காலத்தில் நம்மை சுற்றியுள்ள
  தாவரம், மரங்களிலிருந்தே
  வாய் மற்றும்பற்களை அன்று சுத்தம் செய்தனர்
  அதற்க்கென்று தனியாக காசு செலவு
  செய்ய தேவைப்படவில்லை

  பற்களும் வெண்மையாகவும்
  உறுதியாகவும் இருந்தன

  பன்னாட்டு பன்னாடை நிறுவனங்கள்
  நம்நாட்டு மக்களை
  பல பொய்களை விளம்பரபடுத்தி
  தேவையற்ற பொருட்களை
  நம் தலையில் கட்டி கொழுக்கின்றன

  அவர்கள் சொல்லும் எந்த பொருட்களை பயன்படுத்தியும்
  இன்று பல் சுத்தம் கிடைப்பதில்லை
  பல் நோயும் வராமளிருப்பதில்லை
  இன்று பல் மருத்துவர்களிடம் சென்றால்
  சில ஆயிரங்களையாவது நம்மிடமிருந்து
  கறந்துவிட்டுதான் வெளியே
  அனுப்பும் நிலை வந்துவிட்டது

  கொய்யா மர இலைகளை
  வாயில் கடித்து சுவைத்தால்
  வாயில் உள்ள கொழகொழப்பு தன்மை நீங்கும்.
  பற்கள் உறுதிபெறும் .

  இன்று எத்தனை ஜெல்கள் ,
  மௌத் வாஷ்கள் ,மெல்லும் மாத்திரைகள்
  எதை போட்டு கொப்பளித்தாலும் சிறிது நேரத்தில்
  வாயில் நாற்றம் தொடங்கிவிடும்

  எல்லாம் ரசாயன கலவைகள்.
  வயிற்றின் உள்ளே சென்றால்
  பல விளைவுகளை தோற்றுவிக்கும்

  பதிலளிநீக்கு