திங்கள், 24 ஜூலை, 2017

பேராசை என்னும் புதைகுழி

பேராசை  என்னும் புதைகுழி 

ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன 
அருமையான கதை.


ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு,
பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு 
டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். 

வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 
100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. 
அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். 
(அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)

கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட 
அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் 
விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. 

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த 
வழியில் ஒருவன் வருகிறான். 
இந்த நோட்டைக் கண்டு, 
,இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து,  
மிகவும் சந்தோஷமடைகிறான். 

அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான்.
இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், 
அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த 
ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். 
சந்தோஷமாக வீடு திரும்பினான்.

மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு 
அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. 
அந்த வழியாக ஒருவன் வந்தான். 
இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான். 

பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள். 
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான். 
99 நோட்டுகள்தான். 

வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் 
எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்............... 

அந்த ஒற்றை பத்துரூபாயைத் 
தேடினான்....  தேடினான்....  தேடினான்....  
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் --------

--என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.

பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.

990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.

கருத்து நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்

நன்றி-தகவல்-KN Ramesh 

சனி, 22 ஜூலை, 2017

இசையும் நானும் (205) திரைப்படம் -(கலங்கரை விளக்கம் ) பாடல்:காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்இசையும் நானும் (205) திரைப்படம் -(கலங்கரை விளக்கம் ) 

பாடல்:காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்


Movie Name:

கலங்கரை விளக்கம்

Song Name:

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்

Singers:T.M.Soundhar rajan
Music Director:M.S.Viswanathan

MOUTHORGAN
kaatru vaanga ponen tamil lyrics માટે છબી પરિણામ
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்ன ஆனாள் 
(நான் காற்று )
என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக்கேட்டு வாங்கி போனாள் அந்தக்கன்னி என்ன ஆனாள்
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கி போனாள்  அந்தக்கன்னி என்ன ஆனாள் 
(நான் காற்று )
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்தக்கன்னி என்ன ஆனாள் 
(நான் காற்று )


வெள்ளி, 21 ஜூலை, 2017

இசையும் நானும் (204) திரைப்படம் -(ஆலயமணி(1962) ) பாடல்:பொன்னை விரும்பும் பூமியிலே

இசையும் நானும் (204) திரைப்படம் -(ஆலயமணி(1962) ) 

பாடல்:பொன்னை விரும்பும் பூமியிலேMovie Name:Aalayamani
Song Name:Ponnai virumbum
Singers:T.M.Soundhar rajan
Music Director:M.S.Viswanathan

MOUTHORGAN


ponnai virumbum bhoomiyile song માટે છબી પરિણામபொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே (2)

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

பொன்னை விரும்பும் ....

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

பொன்னை விரும்பும் ....

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

பொன்னை விரும்பும் ....


திங்கள், 17 ஜூலை, 2017

இசையும் நானும் (203) திரைப்படம் -(கற்பகம் ) பாடல்:பக்கத்து வீட்டு பருவ மச்சான்..


இசையும் நானும் (203) திரைப்படம் -(கற்பகம்  ) 

பாடல்:பக்கத்து வீட்டு பருவ மச்சான்.. Song : Pakkathu Veetu Paruva Machaan
Movie : Karpagam (1963)
Singers : P. Susheela
Music : MSV, TKR

பாடல் வரிகள் 
பக்கத்து  வீட்டு பருவ மச்சான் 
பார்வையிலே படம் பிடிச்சான்
பார்வையிலே படம் பிடிச்சு 
பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான் (பக்கத்து)

மனதுக்குள்ளே தேரோட்ட 
மை விழியில் அடம் பிடிச்சான் 
மரிக்கொழுந்து வாசத்திலே 
மாந்தோப்பில் வழி மறித்தான் 
மாந்தோப்பில் வழி மறித்து 
மயக்கத்தையே வரவழைத்தான் (பக்கத்து)

தை  மாசம் தாலி கட்ட மார்கழியில் கை  பிடிச்சான்
யமுனையில் வெள்ளமில்லை 
விடியும் வரை கதை படிச்சான் 
விடியும்  வரை கதை படிச்சு 
முடியாமல் முடிச்சு வச்சான்  (பக்கத்து)

ஊரெல்லாம் உறங்கிவிடும் 
உள்ளம் மட்டும் உறங்காது 
ஓசையெல்லாம் அடங்கிவிடும் 
ஆசை  மட்டும் அடங்காது 
ஆசை மட்டும் அடங்காமல் 
அவனை மட்டும் , நினைத்திருப்பேன் (பக்கத்து)https://youtu.be/NE1ehyNGiUs

புதன், 12 ஜூலை, 2017

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் (பகுதி-3)

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் (பகுதி-3)

மனதை அடக்கவும் வேண்டாம்
அதன் செயல்பாடுகளில்
தலையிடவும் வேண்டாம்

அது இறைவனிடமிருந்து வெளிப்பட்டுள்ளது
வெளிப்பட்ட பிறகு அவனை நோக்கியே
ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்க்கு ஓய்வும்  இல்லை.
ஓய்ச்சலும் இல்லை.

அதுபோலத்தான் ஒவ்வொரு ஜீவனும்

இறைவனிடமிருந்து புறப்பட்ட ஒவ்வொரு ஜீவனும்
ஓர் உயிரிலிருந்து  தொடங்கி நாம் சாதாரணமாக
அறிந்த ஆறறிவு படைத்த மனிதன்(?) வரை
பல்வேறு உடல்களில் புகுந்து அதில் பல அனுபவங்களை அடைந்து
அதன் பதிவுகளை எல்லாம் மனதில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது.

நாம் மனிதனாக பிறவி எடுத்ததும் நம் கண் முன்னே
அவைகள் இடைவிடாமல் வந்து போய்க்  கொண்டிருக்கின்றன.

எப்படி என்றால் நாம் வீடு மாடியில் உட்கார்ந்துகொண்டு சாலையில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகளையும், மனிதர்களையும், பிராணிகளையும் இன்னும்  எத்தனையோ  சமாச்சாரங்களையும் வெறுமனே
பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதை போல

வெறுமனே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் நமக்கு எந்த
பாதிப்பும் ஏற்படுவதில்லை.

அவைகள் நம் மனதில் சலனத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நம்மை அவைகள் பாதிக்கும்.


நாம் நம்மை போக்குவரத்து போலீஸ்காரனாக நினைத்துக் கொண்டு தெருவில் இறங்கினால்தான் பிரச்சினை ஆரம்பிக்கும்.

மனமும் அதுபோலத்தான். அதன் செயல்பாடுகளை எல்லாவற்றையும் மூடிக்கொண்டு வேடிக்கை பாருங்கள்.

அப்போது அது நம்மை ஒன்றும் செய்யாது. அது பாட்டிற்கு அது அதன் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும். நாம் அதை அடக்க வேண்டி எந்த முயற்சியும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. (தொடரும்)


அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்(பகுதி -2)

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்(பகுதி -2)

மனம் என்பது என்றும் வற்றாத ஜீவ நதி.

அது எங்கோ புறப்படுகிறது

புறப்பட்ட இடத்திலிருந்து கடலை நோக்கி ஓயாமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது.

அது யாருக்காகவும் தன் போக்கை
மாற்றிக்கொள்வதில்லை.

அது சில நேரம் இந்த மூட மனிதர்கள் அதற்க்கு
செய்யும் துரோகத்தை பொறுமையுடன்
கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால்  எல்லாவற்றையும் சேர்த்து வட்டியும் முதலுமாக
அவனுக்கு பாடம் கற்பிக்கிறது. 

இருந்தாலும் அவன் திருந்துவது கிடையாது

ஒரு ஜீவ  நதி பல கோடிக்கணக்கான உயிர்களுக்கும் அதன் கரையில்
வாழும் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் தொடர்ந்து
நன்மைகளை செய்து அனைவரின்  வாழ்வில் நன்மை சேர்க்கிறது.

ஒரு நதியில் அதை சுத்தப் படுத்தும் மீன்களும்  இருக்கும். அதை தின்று வாழும் திமிங்கிலங்களும்   சுறாக்களும், பாம்புகளும் இருக்கும்.

அது நன்மை செய்வதையே குறிக்கோளாக கொண்டு காலம்காலமாக
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதை யாரும்கட்டுப்படுத்த இயலாது.அதை படைத்த இறைவன் ஒருவனால்தான் முடியும். அவனும் அதன் ஓட்டத்தை என்றும் தடை செய்வது கிடையாது.

அதுபோல்தான் நம்முடைய மனமும்.

அது  நிற்காமல்   ஓடிக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வற்றாத மாபெரும் சக்தியை நாம் பயன்படுத்திக்கொள்வதில்தான்.நம்
வாழ்க்கையின் குறிக்கோளும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.(தொடரும்) .  

செவ்வாய், 11 ஜூலை, 2017

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் -திருமூலர்

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் -திருமூலர் 

இன்று யாரை பார்த்தாலும்
மனதை அடக்க வேண்டும்.
மனதை அடக்க வேண்டும் என்று
ஓலமிடுகிறார்கள்.

மனது என்றால் . என்னவென்று
புரிந்துகொள்ளாமல் பலர் பலவிதமாக
அவர்கள் மனதிற்கு தோன்றியவைகளை
வாந்தியெடுத்து வெளியிட்ட புத்தகங்களை
படித்துவிட்டு அவர்கள் புத்தகங்களை வெளியிட்டு
காசு பார்க்கின்றனர்.

சிலர் யோகா கலை  மூலம் மனதை
அடக்கலாம் என்றும் மக்களை ஏமாற்றி உலகம்
முழுவதும் மக்களை ஏமாற்றி பிழைப்பு
நடத்துகின்றனர்.

அப்பாவிகள் அவர்களை நம்பி மோசம் போய்
இருக்கின்ற மன  அமைதியையும் இழந்து தவிக்கின்றனர்,

அதனால்தான் திருமூலரும் மனதை அடக்கு அடக்கு என்பார்
அறிவில்லாதவர்கள் என்று உறுதியாக  சொல்லுகிறார்.

அப்படியானால். மனம் என்றால் என்ன?
அதை என் அடக்க வேண்டும்?
எதற்க்காக அடக்க வேண்டும் ?
ஒரு அலசல். (தொடரும்)