ஞாயிறு, 7 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-14)

நான் கவிஞனுமில்லை 
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-14)


நெஞ்சினில் நஞ்சு வைத்து 
நாவினில் அன்பு வைத்து 
நல்லவர் போல் நடிப்பார் ஞான தங்கமே
என்ற பாடல் வரிகள் என்னை 
பொறுத்த மட்டில் உண்மையானதே 

அலுவலகத்தில் என்னை சுற்றியுள்ள
பல பேரில் ஒருசிலர் மேல கண்ட வரிகளுக்கு
முழு பாத்திரமானவர்கள். 
அவர்களில் ஒருவர் என்ன செய்வார் தெரியுமா?

நான் வேலையில் 
மூழ்கி கிடக்கும்போதுமெதுவாக
என்  பக்கத்தில் அமர்ந்து கொள்வார்

என்ன பிசியா என்பார்?
நான் ஏதாவது உதவி செய்யட்டுமா என்பார் 
நன்றி. நான் பார்த்துக்கொள்கிறேன் என்பேன் 

அப்படியும் சிறிது நேரம் நான் என்ன செய்கிறேன்
என்று நோட்டம் பார்த்துவிட்டு 
கிளம்பி  வெளியே போய்விடுவார்.

அவர் நோட்டம் விடும்போது 
யாருடைய கோப்பை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்பதை அவர் எக்ஸ்ரே கண்கள் கவனித்துவிடும் 

அந்த பார்டி வெளியில் மரத்தடியில் 
நின்று கொண்டிருக்கும் 
உத்திரவை பெற்று செல்வதற்காக 

இந்த மனிதர் அவரிடம் சென்று நிதானமாக
பேச்சு கொடுத்து அவரிடம் 
விஷயங்களை கறந்து கொள்வார்.

அப்படியே அவர் பேச்சில் அவர்களை மயக்கி, 
வாங்க லைட்டா ஒரு பெட்ரோல் போட்டுவிட்டு வரலாம்
என்று உணவு விடுதிக்கு அழைத்து சென்று விடுவார். 

அங்கு சென்றவுடன், சார் என்ன சாப்பிடலாம் என்பார்.
எனக்கு ஒரு ஸ்ட்ராங் காப்பி சக்கரை கூட என்பார். 
சார் உங்களுக்கு என்ன என்பார்? 

அவர் கேட்பதற்குள் அங்கு வந்த சர்வர் சார், 
சூடாக கீற வடை ரெடி என்பார்
எதிரில் இருப்பவர் உடனே 
கீரை வடையை ஆர்டர் பண்ணுவார். 

சரக்கு உள்ளே போகும்போதே 
தன்  புளுகு சரக்கை
இவர்அவிழ்த்துவிடுவார்  இந்த மனிதர்.

நான் அந்த எழுத்தரை இப்போதுதான்
பார்த்துவிட்டு வந்தேன் 
உங்களை எனக்கு முன்னமேயே தெரியும். 
நீங்கள் இந்த அலுவலகத்திர்க்கு
தான் பலமுறை வந்திருக்கிறீர்களே
என்று ரீல் விடுவார். . 

இன்னும் சிறிது நேரத்தில் அதிகாரி 
முகாம் புறப்பட்டு சென்று விடுவார்.
உங்களுக்கோ பணம் ரொம்ப அவசரம்  
என்று எனக்கு தெரியும். 
நான் உடனே பட்டியலை அனுமதிக்க 
சொல்லி விட்டுதான் வந்திருக்கிறேன்

என்னங்க என் மீது உங்களுக்கு 
அக்கறை என்பார் வந்தவர் ?
என் வேலைகளை எல்லாம் வந்தவுடனேயே 
முடித்து விட்டேன் 
அதனால்தான் மற்றவர்களுக்கு 
உதவி செய்யலாம் என்று..இழுப்பார் 

.
அவரிடம் ஒரு தொகை 
சொல்லிவிட்டு வ்நதிருக்கிறேன் 
அதை என்னிடம் கொடுத்தால் 
நான் உடனே உங்கள் 
வேலையை முடித்து தருகிறேன்.
என்று பீலா விடுவார். 

அன்று அதிகாரி முகாமும் போகமாட்டார். 
அலுவலகத்தில்தான் இருப்பார். என்று அவருக்கு தெரியும்.

எப்படியோ எதை எதையோ
பேசி பணத்தை கறந்து விடுவார். 
அது மொத்தம் அவர் பைக்குள் போய்விடும்.

சிலநேரம் சில்லறை தேவதைகளுக்கு 
மட்டும் கொஞ்சம் அள்ளி விடுவார். 

ஒன்றும் பெயரவில்லை என்றால் 
வயிற்றையாவது தன்  
சாமர்த்தியத்தினால்   நிரப்பி கொள்வார்.

நான் பாட்டுக்கு என் வேலையை செய்துகொண்டிருந்தேன் 
கோப்பு அதன் பாட்டுக்கு போய்கொண்டிருந்தது,

நடுவில் இந்த நண்பர் புகுந்து தன சாமர்த்தியத்தை 
காட்டி பிழைப்பு நடத்தி கொண்டிருந்தார்.
இது எனக்கு தெரியாது. 

இந்த புண்ணியவான் மூலமாக வேறு  
என்  பெயர் ரிப்பெராகிகொண்டிருந்தது 

அவரின் நடிப்பை நான்
கடைசி வரை உணரவில்லை.(இன்னும் வரும்) 


1 கருத்து: