சிரித்தாலும் கண்ணீர் வரும்
அழுதாலும் கண்ணீர் வரும்
சிரித்தால் வரும் கண்ணீர்
உடலிலும் உள்ளத்திலும்
நீரின்றி வாடிய பயிர்களுக்கு
சக்தியை தரும் மழை போன்றது
அழுதால் வெளிவரும் கண்ணீர்
உள்ளத்தில் தேங்கியுள்ள மாசு
படிந்த நீரை வெளியேற்றுவது போன்றது
மாசு நீங்கியவுடன்
உள்ளம் லேசாகிவிடும்
இதயம் நலமாய் இயங்கிட
இரண்டுமே மனிதர்களுக்கு தேவை
பிறர் நம்மை ஏளனமாய் பார்த்து
சிரிக்கும் வகையில் வாழக்கூடாது
பிறர் துன்பப்படுவதை கண்டு
அவர்களை ஏளனம் செய்து
அவர்களை மேலும்
துன்பப்படுத்தும் வகையில்
சிரித்து மகிழ்வது மிருக குணம்
நல்ல கருத்துக்கள்...
பதிலளிநீக்குபல பாடல்கள் ஞாபகம் வந்தன...
கண்ட பொழுதில்
நீக்குஅனுபவிக்கும்
இன்ப துன்பங்களை
காணாத பொழுதிலும்
மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து
அனுபவிக்கும் சக்தி கொண்ட
ஒரே உயிரினம் மனித இனம்தான்
அதை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும்
இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்
இன்பங்கள் குதிரைக்கு லாடங்கல்போல்
நமக்கு துன்பம் வராமல் காக்கிறது
துன்பங்கள் நமக்கு பாடங்களை
கற்பித்து நம்மை தூய்மைபடுத்துகிறது