திங்கள், 8 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-16)

நான் கவிஞனுமில்லை 
நல்ல  ரசிகனுமில்லை(பகுதி-16)


நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு 
அவன் பேர் மனிதனல்ல 
என்ற திரைப்பட பாடல் வரிகள் 
வாழ்வில் வெற்றி பெற்றஅனைவராலும் 
கடைபிடிக்கப்படும் 
தலையான பண்பாகி விட்டது 

 இந்த உலகத்திற்கு
 நாம் தனியாகத்தான் வருகிறோம் 

அதைப்போல் தனியாக போகப்போகிறோம். 
ஆனால் நாம் இவ்வுலகில் விட்டு செல்லும் 
உடல் கூட மட்டும் அவரவர் இந்த 
உலகில் சேர்த்த செல்வம் 
அல்லது செல்வாக்கிற்கு ஏற்ப கூட்டங்களை 
சுடுகாடு மட்டும் இழுத்துக்கொண்டு வரும். 

சிலருக்குஅந்த பிணத்தை தூக்க கூட ஆட்கள்
இல்லாமல் வண்டியில் போட்டு தள்ளி கொண்டு 
வருவதையும் பார்த்திருக்கிறோம் 

சிலருடைய உடல் அநாதை பிணங்களாக 
யாரும் கேட்பாரற்று கிடக்கும். 

சிலர் வாழ்வு செல்வ செழிப்பில் தொடங்கும்
செல்வ செழுப்பில் வளரும் 
ஒருகால கட்டத்தில் அவர்களின் குடும்பம் 
நடு தெருவுக்கு வந்துவிடும். 

சிலர் ஏழ்மையான குடும்பத்தில் பிறப்பார்கள் 
ஒருகால கட்டத்தில் அவர்கள் 
ஏழ்மை பழங்கதையாகிவிடும்,
வளமை ஆட்சி செய்யும் 

நான் என் வாழ்வில் 
அனைத்தையும் கண்டிருக்கிறேன். 

ஒரு காலத்தில் பல பேருந்துகளை வைத்துகொண்டு 
லட்சாதிபதியாக வலம் வந்த ஒருவர் இறந்ததும் 
அவர் நடத்தி வந்த நிறுவனத்தை 
அவர் மகனால் திறம்பட நடத்த தெரியவில்லை 

ஏனென்றால் அவர் தந்தை அவர் மகனுக்கு 
எந்த நிர்வாக பயிற்சி எதையும் அளிக்க முடியவில்லை 
ஏனென்றால் அவன் அப்போதுதான் படித்து கொண்டிருந்தான் 
அவர் இறந்த பின் அந்த நிறுவனம் கடனில் மூழ்கிபோயிற்று 
கடன்களை அடைக்கவே அந்த சொத்துக்கள் 
அனைத்தும் காணாமல் போயிற்று 

அவர் பையன் கடைசியில் அவர் நண்பர் மூலம் 
ஆயுள் காப்பீட்டு கழக  முகவராக பணி  செய்ய தொடங்கினான் 
அவன் என்னிடம் ஓரு பாலிசி போடுமாறு 
பலமுறை நடந்திருக்கிறான்.

நான் ஏற்கெனவே நான் வாங்கும் 
ஓட்டாண்டி சம்பளத்தில் 
என்என் உறவினர் என்னை 
மூளை சலவை செய்து 
இரண்டு பாலிசி எடுக்க வைத்து விட்டதால் 
நான் அப்புறம் பார்க்கிறேன் என்று சொல்லி 
என்னை பார்க்கின்ற ஒவ்வொரு முறையும் 
அவனை திருப்பி அனுப்பிகொண்டிருந்தேன்
அப்போது அவன் முகத்தை பார்ப்பதற்கு 
பாவமாக இருக்கும். இருந்தாலும் என செய்வது?
என் பிழைப்பே இங்கு தடுமாற்றம்.  

அப்போதுதான் அவரிடம் கேட்டேன் 
இந்த பையனை பார்த்தல் 
பெரிய இடத்து   பையனை
போல் தெரிகிறதே என்று கேட்டதற்கு 
மேலே கண்ட கதையை  சொன்னார். 

ஒரு முகவர் என்றால் நன்றாக பேசி 
எதிராளியின் மனதை கவர்ந்து 
அவரிடம் எப்படியாவது 
ஒரு பாலிசியை  வாங்காமல்
திரும்பக்கூடாது 
என்ற முனைப்பு இருக்கவேண்டும் 
அவனிடம் அந்த சுறுசுறுப்பே இல்லை. 

பொது மக்கள் தொடர்பு என்பது 
ஒரு பெரிய கலை 
அதில் ஒருவன் வல்லவனாகவேண்டும்
இல்லையேல் அவன் வாழ்க்கை நான்கு 
சுவர்களுக்குள் முடங்கிவிடும் 

அது சிறு வயதிலேயே தொடங்க வேண்டும்
அந்த வாய்ப்பு எங்குமே எனக்கு கிட்டவில்லை 
உறவுகளை கண்டாலே ஓடி ஒளியும் நிலை எனக்கு 

அரசு பணியில் சேர்ந்து  பத்து  ஆண்டுகளாயினும் 
எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை 
நான் பத்து ஆண்டுகள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 
பணி புரிந்ததால் அங்கு அலுவலர்கள்  மட்டும்தான் வருவார்கள். 

நான் மாவட்ட அலுவலகத்தில் இருந்ததால் அவர்கள் வரும்போது 
சிரித்து பேசி கூழை   கும்பிடு போடுவதை உண்மை என்று நம்பினேன் 

அதுவும் அவர்கள் வரும் வரைக்கும் எந்த வேலையும் 
நிறுத்தி வைத்ததே கிடையாது.
அதனால் அவர்களுடன் கூட எனக்கு அதிகம் தொடர்பு இல்லாமல் போயிற்று 

பத்து ஆண்டுகள் கழித்து அடுத்த கீழ் மட்ட அலவலகத்திற்கு 
வந்த போது தான் மனிதர்களின் பொய் முகங்களை 
காணும் வாய்ப்பு எனக்கு  கிடைத்தது

 அப்போதுதான் எனக்கு இந்த உலகத்து மனிதர்களின் 
உண்மை முகங்கள் தோன்ற ஆரம்பித்தன 
அவர்கள் ஏற்கெனவே என்னை சந்தித்த போது 
 தோற்றம் அளித்தது,பேசியது அத்தனையும் 
 நடிப்பு என்றவுடன் எனக்கு முதலில் 
அதிர்ச்சியாக தான் இருந்தது. 

அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனதால்
ஆயிரக்கணக்கில்என் உள்ளத்திலிருந்து 
கிளம்பிய எண்ணங்கள் என் மனதிற்குள்ளேயே 
மீண்டும் விழுந்து மண்  மேடிட்டு போயின  

கிடைத்த பல வாய்ப்புக்கள் பறிபோயின 
என் மனதில் சிறு வயது முதலே என்னை 
அழுத்தி வைத்த தாழ்வு மனப்பான்மை
மீண்டும் என் உள்ளத்தில் துளிர் விட ஆரம்பித்தது 

என்னால் மற்றவர்களுடன் 
ஒத்து போக முடியவில்லை 
பொய்யும் பித்தலாட்டமும் 
வெட்டி பேச்சும் ,பொறாமை கொள்ளுதலும்
போலியாக நடித்தாலும் ,ஏமாற்றுவதும் 
என்னால் கடைபிடிக்க முடியவில்லை

அது என்னை அனைவரிடமும் பிரித்து 
ஒதுங்கி வைத்து விட்டது. (இன்னும் வரும்) .   

1 கருத்து: