வெள்ளி, 14 ஜூன், 2019

இசையும் நானும் (357 ) முருகன் பாடல்- நினைத்தபோது நீ வரவேண்டும்



இசையும் நானும் (357 ) முருகன் பாடல்- நினைத்தபோது நீ வரவேண்டும் 




50 நாட்களுக்கு  பிறகு ஒரு முருகன் பாடலை மவுத்தார்கனில் இசைத்து வெளியிட்டேன். அதன் இணைப்பு கீழே.

திங்கள், 22 ஏப்ரல், 2019

இசையும் நானும் (356 ) திரைப்படம்- மாயா பஜார் (1957)பாடல்- ஆஹா இன்ப நிலாவினிலே


இசையும் நானும் (356) திரைப்படம்- மாயா 

பஜார் (1957)பாடல்- ஆஹா இன்ப நிலாவினிலே





HeroGeminiganesan
Music DirectorGhandasala
LyricistThanjai Ramaiya Dass
SingersJikki,Gandasaala
Year1957

MOUTHORGAN VEDIO-358


ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே(G) ஆடிடுதே விளையாடிடுதே ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே(S) ஆடிடுதே விளையாடிடுதே  ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ(G/s) தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே  தவழும் நிலவின் அலை தனிலே (S)சுவை தனிலே(G தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே  தவழும் நிலவின் அலை தனிலே  தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை  தென்றல் பாடுது தாலேலோ(G) ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே(S) ஆடிடுதே விளையாடிடுதே (G) ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே(G) காலத்திலே(S) அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே கலை வான் மதி போல் காதல் படகிலே காணும் இன்ப அனுராகத்திலே(S) ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே  ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ
Show less

வியாழன், 11 ஏப்ரல், 2019

மரம் சாய்ந்து போனால் ?


மரம் சாய்ந்து போனால் ?






மரம் சாய்ந்து போனால் ?

மலை சாய்ந்து போனால்
சிலையாகலாம்
என்று ஒரு திரைப்பட பாடல்
ஒன்று உண்டு.

ஆனால் மரம் சாய்ந்து போனால்
அது என்ன ஆகும் ?

பொதுவாக மண்ணோடு
மக்கிமண்ணாகத்தான் போகும்.


ஆனால் ஒரு கலைஞன்
அதை சிற்பமாக வடித்துள்ளார்.

கண்டு மகிழுங்கள்.










Pic. courtesy from-https://dailylolpics.com/random-pictures-of-the-day-36-pics-23

புதன், 10 ஏப்ரல், 2019

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(3)

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(3)

மருத்துவ மனையில் கிடைத்த 
சிறிய துண்டு காகிதங்களில் 
பால் பாயிண்ட் பேனா மூலம் 
சில படங்களை வரைந்தேன். 

அவற்றில் சில. இதோ. 


மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)

பல ஆண்டுகளுக்கு முன்பு உணவு பொருட்கள் 
மந்தார இலை அல்லது வாழை இலைகளில் தான் 
வைத்து பொட்டலமாக கட்டி பயன்படுத்தப்பட்டது.அந்த உணவு அதை இலையின் நறுமணத்துடன் அமிர்தமாக இருந்தது. 

பிளாஸ்டிக் கலாச்சாரம் வந்தபிறகு டீ ,காப்பி முதற்கொண்டு 
பிளாட்டிக் பைகளில் வழங்கப்பட்டு மக்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று தெருக்கொரு புற்றுநோய் /நீரிழிவு/சிறுநீரக நோயாளிகள் /வயிறு உபாதைகள் நோயாளிகள் உருவாகிவிட்டனர் 
தற்போது பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு விட்டதால் எல்லா உணவுகளும் அலுமினிய தாள்கள் ஒட்டப்பட்ட காகிதங்களில், அலுமினிய டப்பாக்களில் வைத்து வழங்கப்படுகிறது. அலுமினியம் கூட உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் என்ன நோய்  வரும் என்று தெரியவில்லை. 

இதனால் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான அலுமினியம் உலோகம் வீணாக குப்பை  தொட்டியில் போடப்படுகிறது .அதை பார்த்து வயிறு எரிகிறது. அதை என்ன செய்யப்போகிறார்களோ  தெரிய போவதில்லை அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். நம் தலையெழுத்து முட்டாள்களைநாம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நாசமாய் போய்க்கொண்டிருக்கிறோம். 

நான் 40 ஆண்டுகளாக டின்/அலுமினிய மெல்லிய தகடுகளைக் கொண்டு 
புடைப்பு சிற்பங்களை செய்து வருவதை என்னுடைய பொழுது போக்காக கொண்டுள்ளேன்.

மருத்துவ மனைகளில் கிடைத்த சிலதகடுகளை வைத்து சில உருவங்களை உருவாக்கினேன். அவற்றில் ஒன்று இதோ. வெள்ளை நிற தகடு கணினி உதவியுடன் தங்க நிறமாக மாற்றப்பட்டது. 


செவ்வாய், 9 ஏப்ரல், 2019

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(1)

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(1)

கடந்த 7 மாதங்களாக மனைவியின் உடல்நிலை
சரியில்லாமையால் காலம் மருத்துவ மனைகளில்
கழிந்து கொண்டிருக்கிறது.



தற்காலிக தீர்வுகள் மட்டுமே.

நிலையான தீர்விற்கு உத்தரவாதம் இல்லை
என்ற நிலையில்  வாழ்நாள் போய்க்கொண்டிருக்கிறது.

இடை இடையே கிடைத்த ஓய்வான நேரங்களில் அங்கிருக்கும்
பொருட்களைக் கொண்டே என்னோடு ஒன்றிவிட்ட கலை  படைப்புகளை
உருவாக்கினேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

அங்கு ஏராளமாக கிடைக்கும் அலுமினிய தகடுகளை வைத்து சில புடைப்பு சிற்பங்களை உருவாக்கினேன்.

அவற்றில் சில  இதோ.



ஞாயிறு, 17 மார்ச், 2019

இசை உலகில் ஒரு இளம் தமிழ் விடிவெள்ளி லிடியன் நாதஸ்வரம்


இசை உலகில் ஒரு இளம் தமிழ் விடிவெள்ளி லிடியன்  நாதஸ்வரம் 

உலக அளவிலே தமிழர்களுக்கு பெருமை 
சேர்த்த சென்னையை சேர்ந்த 
லிடியன் நாதஸ்வரம் என்ற
14 வயது சிறுவன் 

அகில உலக அளவில் இளைய வயதில் 
பியானோ இசைத்து மிக பெரிய பரிசு தொகையையும் பாராட்டுதல்களையும் பெற்று அனைவரையும் 
பிரமிக்க வைத்த அந்த கலைஞனை போற்றுவோம் 
வாழ்த்தி மகிழ்வோம். 

மேலும் இந்த சிறு வயதிலேயே 8 க்கு  மேல் இசைக்கருவிகளை 
கையாளும் திறமைகளை கண்டு இந்த உலகமே வியக்கிறது. 

இது தொடர்பான காணொளி உங்களுக்காக 




வெள்ளி, 8 மார்ச், 2019

இசையும் நானும் (355 ) திரைப்படம்- மயங்குகிறாள் ஒரு மாது (1975)பாடல்- சம்சாரம் என்பது வீணை


இசையும் நானும் (355 ) திரைப்படம்-  மயங்குகிறாள் ஒரு மாது (1975)பாடல்- சம்சாரம் என்பது வீணை


Movie :

மயங்குகிறாள் ஒரு மாது (1975)

Singers :எஸ்.பி பாலசுப்ரமணியம் 
Music : விஜயபாஸ்கர் 
Lyricist : கண்ணதாசன் 

MOUTHORGAN VEDIO-355


சம்சாரம் என்பது வீணை 
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை 
மனம் குணம் ஒன்றான முல்லை (சம்சாரம் )

என் வாழ்க்கை திறந்த ஏடு 
அது ஆசையின் கிளியின் கூடு (என்)

பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இதுபோன்ற ஜோடியில்லை( இது)
மனம் குணம் ஒன்றான முல்லை (சம்சாரம் )

என் மாடம் முழுதும் விளக்கு 
ஒரு நாளும் இல்லை இருட்டு(என்)

என் உள்ளம் போட்ட கணக்கு 
ஒரு போதும் இல்லை வழக்கு
இதுபோன்ற ஜோடி இல்லை( இது)
மனம் குணம் ஒன்றான முல்லை(சம்சாரம்)

தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம் (தை)

இந்த காதல் ராணி மனது 
அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை (இதில்)
மனம் குணம் ஒன்றான முல்லை (சம்சாரம் )



வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

இசையும் நானும் (354 ) திரைப்படம்- நிழல்கள் (1980)பாடல்- பொன் மாலை பொழுது


இசையும் நானும் (354 ) திரைப்படம்-    நிழல்கள்  (1980)பாடல்- பொன்  மாலை பொழுது 

Song : பொன்  மாலை பொழுது 
Movie :நிழல்கள்  (1980)
Singers :எஸ்.பி பாலசுப்ரமணியம் 
Music : இளையராஜா 
Lyricist : வைரமுத்து 

MOUTHORGAN VEDIO-354


Song Lyrics

Hey Ho Hmm Lalalaa.
பொன் மாலை பொழுது 
இது ஒரு பொன் மாலை பொழுது
வான மகள் நாணுகிறாள் 
வேறு உடை  பூணுகிறாள் 


இது ஒரு பொன் மாலை பொழுது
Hmm Hey Ha Ho Hmmhmm.

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் 
ராத்திரி வாசலில் கோலமிடும் 
வானம் நிலவுக்கு பாலமிடும் 
பாடும் பறவைகள் தாளமிடும்  

பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ..(இது)


வானம் எனக்கொரு போதிமரம் 
நாளும் எனக்கது  சேதி தரும் 
ஒருநாள் உலகம் நீதி பெறும் 
திருநாள் நிகழும் சேதி வரும் 
கேள்விகளால் வேள்விகளை நான் வெல்வேன் (இது)





திங்கள், 11 பிப்ரவரி, 2019

இசையும் நானும் (353)-திரைப்படம்- புதிய முகம் (1994) பாடல்- நேற்று இல்லாத மாற்றம் என்னது


இசையும் நானும் (353)-திரைப்படம்-    புதிய முகம் (1994) பாடல்- நேற்று இல்லாத மாற்றம் என்னது

Song : நேற்று இல்லாத மாற்றம் என்னது
Movie :புதிய முகம் (1994)
Singers :சுஜாதா 
Music : எ .ஆர் .ரெஹ்மான் 
Lyricist : வைரமுத்து 


MOUTHORGAN VEDIO-353

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
 இதுதான் காதல் என்பதா 
இளமை பொங்கி விட்டதா
 இதயம் சிந்தி விட்டதா
 சொல் மனமே(2)
பெண் : கடவுள் இல்லை
என்றேன் 
தாயை காணும்
வரை
கனவு இல்லை
என்றேன் ஆசை தோன்றும்
வரை
காதல் பொய் என்று
சொன்னேன் உன்னை
காணும் வரை
பெண் : கவிதை
வரியின் சுவை
அர்த்தம் புரியும்
வரை
 கங்கை நீரின்
சுவை கடலில் சேரும்
வரை
காதல் சுவை
ஒன்றுதானே காற்று
வீசும் வரை
பெண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது இதுதான் காதல்
என்பதா இளமை பொங்கி
விட்டதா இதயம் சிந்தி
விட்டதா சொல் மனமே
பெண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது
பெண் : வானம்
இல்லாமலே பூமி
உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே
பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால்
வாழ்க்கை உண்டாகுமா
பெண் : வாசம்
இல்லாமலே வண்ண
பூ பூக்கலாம்

வாசல்
இல்லாமலே காற்று
வந்தாடலாம் 
நேசம்
இல்லாத வாழ்வில்
பாசம் உண்டாகுமா
பெண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது
 காற்று
என் காதில் ஏதோ
சொன்னது
 இதுதான் காதல்
என்பதா
 இளமை பொங்கி
விட்டதா
 இதயம் சிந்தி
விட்டதா
 சொல் மனமே(2)

எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்?

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பொம்பெயி, கெர்குலானெயும், தொரே அன்னுசியாத்தாஎன்பவற்றின் தொல்பொருளியற் பகுதி
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
PompeiiStreet.jpg
பொம்பெயி நகரின் ஒரு அமைதியான தெரு

வகைCultural
ஒப்பளவுiii, iv, v
உசாத்துணை829
UNESCO regionஐரோப்பிய உலக பாரம்பரியக் களங்கள்
ஆள்கூற்று40.751000°N 14.487000°Eஆள்கூற்று40.751000°N 14.487000°E
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1997 (21st தொடர்)
எரிமலைச் சாம்பலில் அகப்பட்டு இறந்தோர்
எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்?
தெரிந்துகொள்ளுங்கள் .இந்த பதிவைப் பார்த்து. 




பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நேப்பிள்சு என்பதில் அமைந்துள்ளதும் பகுதியளவிற் புதையுண்டு போயுள்ளதுமான பண்டைய உரோம நகராகும். கிபி 79 ஆம் ஆண்டில் தொடரச்சியாக இரு நாட்கள் ஏற்பட்ட வெசுவியுசு எரிமலையின் காரணமாக அருகிலுள்ள கெர்குலானெயும் நகருடன் சேர்த்து பொம்பெயி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது. அந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியான எரிமலைச் சாம்பல் மற்றும் இறுகிய தீக்குழம்புகளினுள் அகப்பட்டு பொம்பெயி நகரம் 4 முதல் 6 மீற்றர் வரை புதையுண்டு போனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாடளவிலான காலப்பகுதி வரையில் அதாவது 1749 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டறியப்படும் வரையில் இந்நகரம் தொலைந்து போயிருந்தது. அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன. யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமான இது இப்போது ஆண்டு தோறும் கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு இத்தாலிய சுற்றுலாத் தலமாகக் காணப்படுகிறது




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

இசையும் நானும் (352)-திரைப்படம்- பணத்தோட்டம் – 1963 பாடல்-என்னதான் நடக்கும்

இசையும் நானும் (352)-திரைப்படம்- பணத்தோட்டம் – 1963

பாடல்-என்னதான் நடக்கும்


MOUTHORGAN VEDIO-352



Movie Name : பணத்தோட்டம் – 1963
Song Name :என்னதான் நடக்கும்
Music : விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
Singer: டி எம் .சவுந்தர்ராஜன் 
Lyricist : கண்ணதாசன் 




என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே  வெளி வரும் தயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே - ஹாஹ

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே  வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே  வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே