பாரதியின் கனவு
கனவாகவே போய்விட்டது?
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
என்று அன்று பாரதி எழுதி வைத்தான்
அவன் எழுத்தில் எழுதி வைத்தது
மட்டும் நடந்துவிட்டது
சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்டது
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றுவிட்டது
தமிழ் மொழி செம்மொழி
என்று தகுதி பெற்றுவிட்டது
யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டில்
தேனும் பாலும் ஓடப்போவதில்லை
இது சத்தியம்
சாராயமும்,மதுவும், சாக்கடையும்
கண்டிப்பாக ஓடும் ,ஓடிக்கொண்டிருக்கும்
இல்லை தேங்கி கொசுக்களை
உற்பத்தி செய்து கொண்டு
மக்களின் உயிரை
பலி வாங்கிக் கொண்டு இருக்கும்.
இது என்றும் மாறப்போவதில்லை
ஏனென்றால் மக்களுக்கும்
தங்கள் நல வாழ்வை பற்றியோ
சுற்றுப்புற சுகாதார கேடுகளை பற்றியோ
அக்கறை இல்லை
பாரதி அன்று சொன்னான்
தனி ஒருவனுக்கு
உணவில்லையெனில் இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்று.
அவன் நாம் வாழும் இந்த உலகை மட்டுமல்ல
அனைத்து உலகையும் சேர்த்துதான் சொன்னான்
முடிவில் அவன் பட்டினியால் வாடி வருந்தி
வறுமையில் மாண்டு போனான்
இந்த உலகத்தில் அவனை தத்தெடுத்து
அவன் வாழும் காலம் வரை அவனை ஆதரிக்க
வெள்ளையனின் கோபத்திற்கு பயந்து
அன்று இருந்த எட்டயபுர
சமஸ்தான மன்னர் மறுத்துவிட்டார்
இப்படிப்பட்ட எத்தனையோ
வள்ளல்களை கொண்ட நாடு தமிழ் நாடு .
இன்றும் அப்படிதான் உள்ளது
நம் நாட்டின் நிலைமை
இல்லாவிடில் இத்தனை பிச்சைக்காரர்கள்
ஒவ்வொரு நகரத்திலும் ஒரு வேளைக்கு
கூட உண்ண உணவின்றி உடையின்றி
இருக்க இடமின்றி திரிவார்களா?
வீடில்லா மக்களுக்கு இரவு நேரத்தில் தங்கி
அவர்கள் பகல் பொழுதில் உழைப்பதர்க்கோ
அல்லது பிழைப்பதர்க்கோ வசதிகள் செய்து தர
அரசுகளும் போதிய வசதிகள் செய்து தரவில்லை
நம் நாடு சுதந்திரம் பெற்று 65ஆண்டுகளாகியும்
நாட்டில் இருக்கும் மக்கள் தொகையை
விட கார்களும், கைபேசிகளும்,
அரசியல்கட்சிகளும்,
தான் இன்று அதிகம் இருக்கின்றன
வாழ்வில் வீழ்ந்தவர்களை தூக்கிவிட
கோடியில் புரளுபவ்ர்களுக்கு மனமில்லை
சுற்றுபுறத்தை மாசுபடுத்தும் தொழிற்சாலை
முதலைகளுக்கு எப்போதும் தங்கள்
போட்ட முதல் மேலேதான் கண்
மற்றவைகளைபற்றியோ அந்த பகுதியில்
வாழும் மக்களை பற்றியோ கவலை இல்லை
சொந்த சோதரர்கள் துன்பத்தில் சாதல்
கண்டும் சிந்தை இரங்காதகூட்டம்
தமிழ் மக்கள் கூட்டம்
கூட்டம் போட்டு மக்களின்
உணர்சிகளை தூண்டி
பிழைப்பு நடத்தும் கூட்டம்?
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி
இடத்தாற்செயின் என்ற வள்ளுவனின்
கூற்றை சரியாக புரிந்துகொள்ளாமல்
போர் தொடுத்து கூற்றுவனுக்கு இரையாகி
அழிந்து போன கூட்டம்.
குள்ளநரி தந்திரத்தை பயன்படுத்தவேண்டிய இடத்தில்
கூச்சல் போட்டு பொறியில் சிக்கி மாளும் கூட்டம்
உலகெங்கும் பரவி இருந்தும் உலக அனுபவம்
பெறாத கூட்டம் தமிழ் கூட்டம்
அறிவிருந்தும் ஆத்திரம் கொள்வதால்
அனுதினமும் துன்பம் அடையும்கூட்டம் உண்மை சுடும் என்ன செய்ய?
உண்மை உண்மைதான்
அதை யாராலும் மாற்றமுடியாது
மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளாதவரை
/// உண்மை உண்மைதான்
பதிலளிநீக்குஅதை யாராலும் மாற்ற முடியாது ///
உண்மை...
வருகைக்கும்
நீக்குகருத்துக்கும் நன்றி DD