திருவள்ளுவரின் புலம்பல்
வாமனனாய் அவதரித்து
மூவடியால் உலகை அளந்த
ஆழி சூழ் உலகில்
மக்கள் நலமாய் வாழ
ஈரடியாம் திருக்குறளை அளித்தேன்
அதை விரும்பாத மனிதர் சிலர்
எனக்கு கல்லால் சிலை செய்து
ஆழி பேரலையின் நடுவிலே
நிற்க வைத்ததேனோ?
மனிதனுக்கு நலமாக வாழ
நா நயமும் நாணயமும்
இருக்க வேண்டும் என்பதற்கு
பரிகாரமாக என்னை
நாணயத்தில் அச்சிட்டு
கைக்கு கை மாறி நாட்டை
சுற்றி அலையவிட்டு
அலைக்கழிப்பது
தர்மந்தானோ?
நியாயமான புலம்பல்தான்
பதிலளிநீக்குவித்தியாசமான அருமையான சிந்தனையுடன்
கூடிய கவிதை மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
கருத்திற்கும்
நீக்குவாழ்த்துக்கும் நன்றி
நல்ல கேள்வி ஐயா...
பதிலளிநீக்குகேள்வியிலேயே
பதிலளிநீக்குபதிலும் உள்ளது
வருகைக்கு நன்றி
அருமை.
பதிலளிநீக்குபேருந்திலும் ஓட விட்டு விட்டார்கள்.
நன்றி.
வருகைக்கும்,
நீக்குகருத்துக்கும் நன்றி.
கற்றதின் பயன்
இறைவனை உணர்ந்த நல்லோர்களின்
அடிகளை வணங்க வேண்டுமென்றார் வள்ளுவர்
ஆனால் இன்று கற்றவர்கள்
காசுக்காகவும் பதவிக்காகவும்
கண்டவர் கால்களில்
விழுவதைக்கண்டு வள்ளுவர்
சிலையாகிவிட்டார்
வள்ளுவனுக்கு ஊர்தோறும்
நிலத்திலும், நீரிலும்
சிலை வைத்து என்ன பயன்?
மக்களை சுமந்து செல்லும்
பேருந்துக்கு
வள்ளுவர் பெயர்
வைத்து என்ன பயன்?
பலர் இன்று திருக்குறளை
கசடற கற்கிறார்கள்
கற்றபடி நிற்கிறார்களா
என்பதுதான் கேள்விக்குறியே?