நான் கவிஞனுமில்லை
நல்ல ரசிகனுமில்லை (பகுதி-10)
அப்போது கண்ணன்
அர்ஜுனனை பார்த்துக் கேட்கிறான்
அர்ஜுனா, போர் வீரனான நீ ,
போர் செய்வதற்காக பல
பயிற்சிகளை எடுத்தவனும்,
தவம் வேறு செய்து பரமசிவனிடம்
பாசுபதாஸ்திரம் போன்ற
அஸ்திரங்களை பெற்றவனுமான நீ,
உன் வில்லின் வித்தையின் திறனைக்
கண்டு அனைவரும் அஞ்சி ஓடும்
நிலையில் உள்ள நீ
இப்படி பேடியைப் போல் பேசலாமா,
மற்றும் கோழையை போல்
போர்களத்தை விட்டு ஓடலாமா என்று
நினைக்கலாமா என்று கேட்கிறான்
அப்போது என் உள்மனம் பேசுகிறது.
அர்ஜுனனை கண்ணன் கேட்கும் கேள்வி
உனக்கும்தான் என்கிறது.
இந்த உலகில் பிழைக்க வேலை செய்தாக வேண்டும்.
வேலை செய்ய பயிற்சி பெற்றுள்ளாய்.
வேலை பளு இருக்கத்தான் செய்யும்
அதற்காக வேலையை விட்டுவிட்டு
குடும்பத்தை விட்டு ஓடிவிட விட
நினைப்பது பேடித்தனம் மற்றும்
கோழைகளின் செயலல்லவா?
கண்ணன் மேலும் அர்ஜுனனை கேட்கிறான்.
அர்ஜுனா நீ கடமைக்கும் துறவுக்கும்
உள்ள வேற்றுமை அறியாது ஏதேதோ பிதற்றுகிறாய்
ஒன்றைஒன்று தவறாக புரிந்து கொண்டு குழப்புகிறாய்
இப்போது நீ போர்களத்திலிருந்து துறவை கருதி
வெளியேறினால் சத்ரியன் என்ற
உன் குலத்தின் கடமையிலிருந்து தவறுகிறாய்.
மேலும் போர்களத்திலிருந்து
போர்புரியாமல் வெளியேறும் ஒருவனை
எல்லோரும் போருக்கு பயந்துதான்
புற முதுகிட்டு அர்ஜுனன் ஓடுகிறான்
என்று எல்லோரும் கேலி செய்வார்கள்
அந்த அவமானம் மிக கொடியது.
அதைவிட போர் செய்து வீர மரணம்
அடைந்தால் உனக்கு வீரர்கள் பெறும்
சுவர்க்கமும் புகழும் கிடைக்கும் . என்றான்
என் உள் மனம் சொல்லிற்று.
வேலைக்கு போவது புருஷ லட்சணம்
ஆகையால் வேலைக்கு போய்தான் ஆகவேண்டும்.
இந்த வேலை லட்சக்கணக்கான பேர் தேர்வு எழுதி
அவர்களில் ஒருவனாக தேர்ச்சி பெற்று
இந்த வேலை கிடைத்துள்ளது.
மேலும் இந்த வேளையில் பத்து ஆண்டுகள்
வேறு கடந்துவிட்டது.
இத்தனை ஆண்டுகள்உனக்கு
சோறு போட்டு கொண்டிருக்கிறது
இந்த வேலைதான்.
வேலைப்பளு இருக்கத்தான் செய்யும்.
அதற்காக கூடுதல் நேரம் வேலை
செய்துதான் வேண்டும்.
வேலை என்றால் பிரச்சினைகள் வரத்தான் செய்யும்
வேலைஇல்லா விட்டால் பிச்சைதான் எடுக்க நேரிடும்
அந்த நிலை உனக்கு வேண்டுமா?
வேலையில் இருப்பதை விட
வேலையில்லாமல் அவமானப்பட்டு
திரிவது மிக கொடியது
அதற்காக வேலைவிட்டு விட்டு ஓடமுடியுமா
என்று கண்ணன் என்னை கேட்கிறான்.
மேலும் கூறுகிறான் மணந்துகொண்ட மனைவியை
இறுதி வரை அவளுடன் அன்பாக, மகிழ்ச்சியோடு, குடும்பம் நடத்த வேண்டியது உன் கடமை. நம்பி வந்தவர்களை
நட்டாற்றில் விட்டு விட்டு ஓடுவது மகா பாவம்
அவள் மூலம் பெற்ற மூன்று குழந்தைகளையும்
வளர்த்து ஆளாக்குவது உன் கடமை.
கடமையிலிருந்து தவறி
அவர்களை விட்டு விட்டு ஓடுவது மடமை
என்றான் கண்ணன். (இன்னும் வரும்)
நல்ல ரசிகனுமில்லை (பகுதி-10)
அப்போது கண்ணன்
அர்ஜுனனை பார்த்துக் கேட்கிறான்
அர்ஜுனா, போர் வீரனான நீ ,
போர் செய்வதற்காக பல
பயிற்சிகளை எடுத்தவனும்,
தவம் வேறு செய்து பரமசிவனிடம்
பாசுபதாஸ்திரம் போன்ற
அஸ்திரங்களை பெற்றவனுமான நீ,
உன் வில்லின் வித்தையின் திறனைக்
கண்டு அனைவரும் அஞ்சி ஓடும்
நிலையில் உள்ள நீ
இப்படி பேடியைப் போல் பேசலாமா,
மற்றும் கோழையை போல்
போர்களத்தை விட்டு ஓடலாமா என்று
நினைக்கலாமா என்று கேட்கிறான்
அப்போது என் உள்மனம் பேசுகிறது.
அர்ஜுனனை கண்ணன் கேட்கும் கேள்வி
உனக்கும்தான் என்கிறது.
இந்த உலகில் பிழைக்க வேலை செய்தாக வேண்டும்.
வேலை செய்ய பயிற்சி பெற்றுள்ளாய்.
வேலை பளு இருக்கத்தான் செய்யும்
அதற்காக வேலையை விட்டுவிட்டு
குடும்பத்தை விட்டு ஓடிவிட விட
நினைப்பது பேடித்தனம் மற்றும்
கோழைகளின் செயலல்லவா?
கண்ணன் மேலும் அர்ஜுனனை கேட்கிறான்.
அர்ஜுனா நீ கடமைக்கும் துறவுக்கும்
உள்ள வேற்றுமை அறியாது ஏதேதோ பிதற்றுகிறாய்
ஒன்றைஒன்று தவறாக புரிந்து கொண்டு குழப்புகிறாய்
இப்போது நீ போர்களத்திலிருந்து துறவை கருதி
வெளியேறினால் சத்ரியன் என்ற
உன் குலத்தின் கடமையிலிருந்து தவறுகிறாய்.
மேலும் போர்களத்திலிருந்து
போர்புரியாமல் வெளியேறும் ஒருவனை
எல்லோரும் போருக்கு பயந்துதான்
புற முதுகிட்டு அர்ஜுனன் ஓடுகிறான்
என்று எல்லோரும் கேலி செய்வார்கள்
அந்த அவமானம் மிக கொடியது.
அதைவிட போர் செய்து வீர மரணம்
அடைந்தால் உனக்கு வீரர்கள் பெறும்
சுவர்க்கமும் புகழும் கிடைக்கும் . என்றான்
என் உள் மனம் சொல்லிற்று.
வேலைக்கு போவது புருஷ லட்சணம்
ஆகையால் வேலைக்கு போய்தான் ஆகவேண்டும்.
இந்த வேலை லட்சக்கணக்கான பேர் தேர்வு எழுதி
அவர்களில் ஒருவனாக தேர்ச்சி பெற்று
இந்த வேலை கிடைத்துள்ளது.
மேலும் இந்த வேளையில் பத்து ஆண்டுகள்
வேறு கடந்துவிட்டது.
இத்தனை ஆண்டுகள்உனக்கு
சோறு போட்டு கொண்டிருக்கிறது
இந்த வேலைதான்.
வேலைப்பளு இருக்கத்தான் செய்யும்.
அதற்காக கூடுதல் நேரம் வேலை
செய்துதான் வேண்டும்.
வேலை என்றால் பிரச்சினைகள் வரத்தான் செய்யும்
வேலைஇல்லா விட்டால் பிச்சைதான் எடுக்க நேரிடும்
அந்த நிலை உனக்கு வேண்டுமா?
வேலையில் இருப்பதை விட
வேலையில்லாமல் அவமானப்பட்டு
திரிவது மிக கொடியது
அதற்காக வேலைவிட்டு விட்டு ஓடமுடியுமா
என்று கண்ணன் என்னை கேட்கிறான்.
மேலும் கூறுகிறான் மணந்துகொண்ட மனைவியை
இறுதி வரை அவளுடன் அன்பாக, மகிழ்ச்சியோடு, குடும்பம் நடத்த வேண்டியது உன் கடமை. நம்பி வந்தவர்களை
நட்டாற்றில் விட்டு விட்டு ஓடுவது மகா பாவம்
அவள் மூலம் பெற்ற மூன்று குழந்தைகளையும்
வளர்த்து ஆளாக்குவது உன் கடமை.
கடமையிலிருந்து தவறி
அவர்களை விட்டு விட்டு ஓடுவது மடமை
என்றான் கண்ணன். (இன்னும் வரும்)
நன்றி ஐயா... தொடர்கிறேன்...
பதிலளிநீக்கு