வியாழன், 4 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-4)


நான் கவிஞனுமில்லை 
நல்ல  ரசிகனுமில்லை (பகுதி-4)

இந்நிலையில் கிராமத்திலிருந்து
நகரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் 
புகை வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். 
புகை வண்டி நிலையம் கிராமத்திலிருந்து 
மூன்று  கிலோமீட்டருக்கு மேல் தூரம் இருக்கும் 
புகை வண்டி நிலையமே அழகாக மரங்கள் சூழ்ந்து,
 ரம்மியமாக இருக்கும். 
வண்டி வந்தவுடன் ஒரு பரபரப்பு தொற்றிகொள்ளும் ,
வண்டி சென்றவுடன்  அமைதியடைந்து விடும்.
இக்காலத்தை போல் அவ்வளவாக கூட்ட நெரிசல் கிடையாது. 
மிகவும் சுத்தமாக இருக்கும்.  
அந்த காலத்தில் அமைதியை  விரும்புவோர் காலாற  நடந்து வந்து அங்கு அமைக்கபட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்து சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்  இயற்கையான சூழலில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்கலாம் , புத்தகங்களை படிக்கலாம். 

சாலை வழியே சென்றால் அரை மணிக்கு மேல் பிடிக்கும். 
குறுக்கு வழியில் ஓடித்தான் ஒவ்வொரு நாளும்
வண்டியை பிடிக்க வேண்டும். 
வழியில் இரண்டு கால்வாய்கள் இருக்கும் 
அதில் தண்ணீர் ஓடிகொண்டிருக்கும். 
பள்ளத்தில் நிதானமாக இறங்கி மீண்டும் ஏறி ஓடவேண்டும். 
சோத்து மூட்டையும்புத்தக  மூட்டையும் சுமந்து கொண்டு ஓடவேண்டும்.

அந்த காலத்தில் வண்டி வரும்போது சில கிலோமீட்டர்களுக்கு
 முன்பே ரயில்  எஞ்சினின்  விசில் சத்தம் கேட்கும் 
அதை கேட்டுவிட்டால் இன்னும் வேகமாக ஓடவேண்டும்.
.இல்லாவிடில் வண்டியை கோட்டை விட வேண்டியதுதான். 

அன்று பள்ளி செல்ல முடியாது
மறுநாள் கையை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும் 
எதற்காக பிரம்படி வாங்கத்தான். 

காலையில் தாமதமாக எழுந்திருப்பதால்
 உணவு உண்ணக்கூட நேரம் இருக்காது. 
உணவை உண்ணும்போது ரயில் என்கினின் விசில்  சத்தம் 
கேட்டுவிட்டால் போதும் அப்படியே உணவை போட்டுவிட்டு 
மூட்டையை தூக்கிக்கொண்டு ஓட வேண்டியதுதான்.

அது சரி இத்தோடு விட்டதா என்றால் இல்லை 
சில நாட்களில் வண்டி காலியாக இருக்கும். 
சௌகர்யமாக உட்கார்ந்து பயணம் செய்யலாம். 
சில நாட்களில் வண்டியில் கூட்டம் நிரம்பி வழியும்
 உள்ளேயே நுழைய முடியாது 
அந்த காலத்தில் வண்டி ஜன்னல்களுக்கு கம்பிகள் கிடையாது.
ஜன்னல் வழியாகத்தான் உள்ளே குதிக்கவேண்டும். 

நகரத்தில் போய் இறங்கினால்
அங்கிருந்து மீண்டும் மூட்டையை 
முதுகில் தூக்கிக்கொண்டு வெயிலில் . மீண்டும் 
பல கிலோமீட்டர்கள்  நடக்கவேண்டும்.

தாமதமாகிவிட்டால் பள்ளி கதவுகள் அடைக்கப்பட்டு விடும்
திறக்கமாட்டார்கள்.
 தலைமைஆசிரியர்  பிரார்த்தனை கூட்டத்தை முடித்துக்கொண்டு
 அவர் அறைக்கு வரும் வரை கதவிற்கு வெளியே நிற்கவேண்டும் 
அவர் வந்தவுடன்  காரணம் கேட்பார். வண்டி தாமதமாக வந்தது 
என்று சொல்லும்போது  என் கூட மற்றவர்கள் இருந்தால் பிழைத்தேன் 
இல்லையெனில் பிரம்படி விழும். 

பிறகு வகுப்பறைக்கு செல்லவேண்டும்
காலையில் எழுந்து நடந்து பள்ளிக்கு வருவதற்குள் 
மனமும் உடலும் களைத்து போயிருக்கும். 
தூக்கம் சொக்கும். அதேபோல்தான் வீட்டிற்கு திரும்பும்போதும்
உடலும் உள்ளமும் ஓய்ந்து போய்விடும் 
பலநாள் வீட்டை அடைவதற்குள் இருட்டிவிடும்
ஏதோ தின்றுவிட்டு படுத்துவிடுவேன்

இந்நிலையில் நான் என்ன பாடங்களை 
படித்து தெரிந்துகொண்டிருக்க முடியும். 
ஆசிரியர்கள்நடத்துவது  ஒன்றும் புரியாது 
நான் கிராமத்து மாணவன்  என்பதால் 
கடைசி பெஞ்சில்தான் இடம் அளிக்கப்படும் 
ஆசிரியர் பாடம் நடத்துவது ஒன்றும் காதில் கேட்காது. 

கடைசி பெஞ்சில் இருக்கும் அடங்காபிடாரி மாணவர்கள் 
ஏதாவது பேசிகொண்டிருப்பாகள். 
அவர்களுக்கு அடி விழும்போது எனக்கும் தர்ம அடி விழும். 

நகரத்தில் உள்ளவர்கள் நல்ல வசதி உள்ளவர்கள்.
தொடக்கத்திலிருந்தே நல்ல தரமான கல்வி பயின்றவர்கள். 
எனவே அவர்கள் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் பெறுவார்கள்
,நன்றாக படிப்பார்கள். 
நமக்கு அந்த பாக்கியம் இல்லாமையால்
ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு 
பாடம் நடத்த வரும்போது கிலி பிடித்து கொள்ளும்.
 என்ன கேள்வி கேட்க போகிராரோ 
எத்தனை முறை பெஞ்சின்மேல் எழுந்து நிற்க வேண்டுமோ
இல்லை வகுப்பறைக்கு வெளியே நிற்க  வேண்டுமோ 
அல்லது இம்போசிஷன்  எழுதவேண்டியிருக்குமோ 
என்று பயந்து சாகும் நிலைமை இருந்தது

அதுவும்  ஆங்கிலம், காம்போசிட் மாத்ஸ் போன்றவற்றை 
தலைமைஆசிரியரே நடத்துவார். 
அவர் அதை ஆங்கிலத்தில் நடத்துவார்.
நமக்குதான் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பதால் 
தமிழே காதில் சரியாக விழாது,
ஆங்கிலம் எங்கே விழும்? 
கேள்வி கேட்டால் பதில் சொல்ல 
தெரியாமல் அடிதான் விழும்

விஞ்ஞானம், சமூகவியல், தமிழ் ஆசிரியர்கள்தான் 
அமைதியாக கொஞ்சம் நகைச்சுவை கலந்து பாடம் நடத்துவார்கள் 
அவர்கள் வகுப்பில்தான் அடி விழாது. 

ஆனால் கணக்கு வாத்தியார் நடத்தும் 
வகுப்பில் நிச்சயம் பூசை கிடைக்கும்
அந்த புண்ணியவான். பெஞ்சின் மீது ஏறி நிற்க சொல்வார்
நின்றபிறகு ஏன் வீட்டு கணக்கை போடவில்லை என்று கேட்டுகொண்டே 
இந்தா நிமிண்டாம் பழம் என்று தொடையில் 
 தேள்  கொட்டியது போல் கிள்ளிவிடுவார்
உயிர் போகும்.

இப்படியாகத்தான் என் பள்ளி வாழ்க்கை கழிந்தது.
ஆனால் தற்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் 
அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் எல்லா நிலைகளிலும் கிடைக்கின்றன வாய்ப்புக்களும் வசதிகளும் பெற்றோரால் அளிக்கப்படுகின்றன
பள்ளியிலும் ஏராளமான வசதிகள் மாணவர்கள்  கல்விகற்க செய்து தரப்படுகின்றன. அரசுகளும் போட்டி போட்டுகொண்டு உதவிகள் செய்து தருகின்றது.  

அந்த காலத்தில் பள்ளியில் இறுதி தேர்வு பொது தேர்வு எழுதவேண்டும்
ஆனால்  அதற்க்கு முன்பாக ஒரு தேர்வு நடக்கும், 
அதில் பாதிக்குமேல் வடிகட்டிவிடுவார்கள் 
.மற்றவர்கள்தான் தேர்வு எழுதமுடியும். 
ஏதோ அந்த தேர்வில் கணக்கை தவிர மற்ற பாடங்களில் 
கொஞ்சம் நல்ல மதிப்பெண்கள்எடுத்ததால் 
எச்சரிக்கையோடு போத தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டேன்.(இன்னும் வரும்)  
 
 

1 கருத்து:

  1. /// இந்தா நிமிண்டாம் பழம் என்று தொடையில்
    தேள் கொட்டியது போல் கிள்ளிவிடுவார்
    உயிர் போகும். ///

    வலி உணர முடிகிறது... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு