மலங்களே ..மலங்களே இது என்ன நிஜமா ?
மலங்களே மலங்களே இது என்ன நிஜமா ?
அடங்கியதே என் அகந்தை
ஒழிந்ததே என் தற்பெருமை .
என்ன இது ஒரு பிரபல தமிழ்
திரைப்பட பாடலின் வரிகளின் சாயல் .
மலம் என்றால் அசிங்கமா ?
மலம் அள்ளுவது கேவலமா ?
மலம் அசிங்கம் இல்லை
மலம் அள்ளுவது கேவலம் இல்லை .
அசிங்கம் என்று நினைத்திருந்தால் தாய்
தன் குழந்தையின் மலத்தை அள்ளுவாளா ?
செவிலியர்கள் அசைய முடியாத நிலையில்
படுத்திருக்கும் நோயாளிகளின் மலத்தை
அப்புறப்படுத்துவார்களா?
இன்று குடலில் உள்ள நோய் கிருமிகளை
கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க
மலத்தை அல்லவோ ஆய்வு செய்து உலகம் முழுவதும்
தெருவுக்கு தெரு சோதனை கூடம் வைத்து
காசு வாங்கி பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள்
மலம் அள்ளுவது கேவலம் என்றால்
மகாத்மா காந்தி தானே
அந்த வேலையை செய்தது ஏன் ?
சேவா தளத்தில் சேர சென்ற மற்றவர்களுக்கும்
முதலில் அந்த பணியை
அளித்தது ஏன் ?
மலம் அசிங்கம் என்றால் அதை சேகரித்து
மாட்டு சாணத்துடன்
சேர்த்து சாண எரிவாயு உற்பத்தி செய்து
பெட்ரோலிய ஏறி வாயுவிற்கு பதிலாக
இன்று இந்தியா முழுவதும் செயல்பட்டு
கொண்டு வருகிறது உங்களுக்கு தெரியுமா !
மாடு வெளியே தள்ளுவதை சாணி என்கிறோம்
மனிதர்கள் சாணி போடுவதை மலம் என்கிறோம்
அவ்வளவுதான்
சாணத்தின் வாசனையை ஏற்றுகொள்ள மனம் பழகிவிட்டது .
ஆனால் நாம் போடும் சாணியின் வாசனையை ஏற்றுகொள்ள
மனம் மறுக்கிறது
அதுதான் இத்தனை விபரீதங்களுக்கும் காரணம்
இன்னும் உங்களுக்கு தெரியாது மலம் மண்ணோடு கலந்து
மக்கி விட்டால் அதிலிருந்து ஒன்றும் நாற்றம் வராது.
அதை நாம் முறைப்படி அழிக்காமையால் அது நாற்றம்
தரும் வாயுக்களை வெளிவிடுகிறது
ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்
உங்கள் உடலின் இரண்டு கால்கள் மீதுதான்
உங்களின் கழிவுகளையும் கெட்ட கழிவு
நீரையும் சேமித்து வைக்கும் தொட்டி
கட்டப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ?
நீங்கள் சுவைத்து சுவைத்து உள்ளே தள்ளும் உணவுகள்தான்
பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு பிறகு சத்துக்களை உறிஞ்சியபின்
மலமாக மாற்றப்படும் குடல் அதன் மேல்தான் உள்ளது .
மற்றொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் சாப்பிடும் உணவுகள் மலமாக மாற்றப்பட்டு
இரண்டு விழுக்காடுகள்தாம் வெளியேறுகிறது
மீதி 98 சதவிகித மலம் உங்கள் உடல் முழுவதும்
பரவியிருக்கிறது ,அதனால்தான் மனிதன் உடலில்
அவன் வெளியேற்றும் மலத்தில் தூர் நாற்றத்தை விட
உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்து வெளியேறும் நாற்றம்
மூக்கை துளைக்கிறது .அதை மறைக்க நீங்கள் மாதா மாதம்
ஆயிரகணக்கான ரூபாய்க்கு சோப்புகளையும் , சந்தனத்தைலமும் , வாசனை திரவியங்களையும் உடலுக்கு தனியாக ,மேலே அணிந்துகொள்ளும் ஆடைகளுக்கு தனியாக என ஒழித்து கொண்டிருகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்
இன்னொன்று சொல்கின்றேன் .
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது
டெல்லியில் ஒருநிறுவனம் , உலர்ந்து போன மலத்தினை தக்கைகளாக செய்து உறுதிபடுத்தி அதில் அறைகளில் தடுப்புகள் அமைக்க பயன்படுத்தும் அட்டைகள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கி அதற்க்கு தேவையான மலக்குவியலை ராஜஸ்தான் அரசிடம் கேட்டுள்ளது என்பதுதான்
எனவே மலம் என்பது அசிங்கமல்ல
மலம் அள்ளுவது கேவலமல்ல
மலத்திலே தோன்றி மலமாய் வாழ்ந்து
மலத்திலே புழுவாய் போகும்
இந்த உடல் படைத்த நாம்
நாம்தாம் உயர்ந்தவர்கள்
நம்முடைய மலத்தை மற்றவர்கள் அள்ள வேண்டும் என்று
நினைக்கும் மனிதர்களே கேவலமானவர்கள் .
இதை விட யாரும் எதுவும் சொல்ல முடியாது ஐயா... அத்தனை கருத்துக்கள்... (அறியாத சில தகவல்கள்)
பதிலளிநீக்குமனம் மலம் ஆகாமல் இருந்தாலே போதும்...
நம் மனதை ஏற்கெனவே
பதிலளிநீக்குமூன்று மலங்கள் ஆக்கிரமித்துள்ளன
அவைகள்தாம் நமக்கு மீண்டும்
மீண்டும் கணக்கற்ற
பிறவிகளை தருகின்றன
அவை ஆணவம்,
கன்மம், மாயை என்பர்
அதை அகற்றுவது மிகவும் கடினம்
ஏனென்றால் அது எந்த வடிவத்தில்
இருக்கிறது என்பது
யாருக்கும் புரியாது, தெரியாது
நமக்குள் மனதில் இருக்கும்
மலங்களை அறியாமல்
நம் உடல் முழுவதும் பரவிக்கிடக்கும்
மலங்களை அறியாமல்
சிறிதளவு மட்டும் வெளியேறும்
கழிவான மலத்தை கண்டு நாம்
அசிங்கம் என்று முகம்சுளிக்கிறோம்
ஒவ்வொருவர் மனதிலும்
எவ்வளவு வக்கிரமான ,
அசிங்கமான எண்ணங்கள் இருக்கின்றன
என்பதை அவர்களை பேசவிட்டு
நாம் ஆமாம் மட்டும்
போட்டு கொண்டிருந்தால் போதும்
எல்லாம் ஒவ்வொன்றாக
வெளியே வருவதை
கண்கூடாக பார்க்கலாம்
ஒருவர் மனதில் உள்ள தீய எண்ணங்களை
முகபாவமும்,பார்வையும்,பேச்சுமே
காட்டி கொடுத்துவிடும்.
அதை புரிந்து கொள்பவர்கள்
ஆபத்திலிருந்து தப்பித்து கொள்ளுகிறார்கள்
புரியாதவர்கள் ஆபத்தில் மாட்டிகொள்கிறார்கள்
முக்கியமாக குழந்தைகளும் பெண்களும்தான் பலியாபவர்கள்.அவர்களுக்கு இதை பற்றிய
அறிவையும் தெளிவையும்
சிறுவயதிலிருந்தே
சொல்லிகொடுக்கப்பட வேண்டும்
நாற்றமெடுக்கும் இறைச்சியை
மசாலாக்கள் சேர்த்து சுவைத்து
உள்ளே தள்ளும் மனிதர்கள்
அது வெளிவரும்போது
மட்டும் முகம் சுளிப்பதேன்?
இதையும் மனதில்,கொண்டால்
தெளிவு பிறக்கும்.