மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டுமம்மா
என்றான் ஒரு கவிஞன்
ஒருவனோ மங்கையராய் பிறந்துவிட்டால்.. என்று
அவர்கள் இந்த பூமியில் படும் துன்பங்களை
நினைத்து எழுதினான்
மங்கையும் மலரும் ஒரு ஜாதி
என்றான் ஒரு கவிஞன்
மங்கையர் திலகம் மங்காத செல்வம்
என்றான் ஒரு கவிஞன்
அது சரி இன்றைய
மங்கையர்களின் நிலை என்ன?
ஏதோ சிலரின் வாழ்க்கை
நன்றாக இருக்கலாம்
ஆனால் பலரின் வாழ்க்கை
துன்பமும் துயரமுமாய்தான் இருக்கிறது
என்பது மறுக்கவும்,மறைக்கவும்
முடியாத உண்மை
அவர்களின் தியாக வாழ்வு
பலருக்கு வாழ்வை தருகிறது
வாழ்வை பெற்றவர்கள்
அவர்களின் தாழ்வை போக்க
முன் வருவதில்லை
பெண்களை போற்றும் இந்த சமூகம்
அவர்களை தூற்றவும் தயங்குவதில்லை
என்ன இருந்தாலும் பெண்களே
பெண்களை இழிவு செய்வதும்,
அவர்களின் வாழ்வை நாசமாக்கி மகிழ்வதும்
சமீப காலங்களில் அதிகரித்துவிட்டன
தொலைகாட்சிகளில் வரும்
அத்தனை கதைகளும்
இதை போன்ற சம்பவங்களை
அடிப்படையாக கொண்டவைகளாகத்தான் இருக்கின்றன
திரைப்படங்களிலும் சரி,ஊடகங்களிலும் சரி
பெண்களை கவர்ச்சி பொருளாக
போக பொருளாக காட்டி
காசை அள்ளுகின்றனர்
மக்களும் அதை ரசிக்கின்றனர்
ஆனால் எவனாவது ஆர்வ மேலீட்டால் தவறாக
நடந்துகொண்டு விட்டால் மட்டும் அனைவரும்
பெண்கள் உட்பட பொங்கி எழுந்து அனைவரும்
உத்தமர்கள் போல கொஞ்ச நாள் சீன் காட்டிவிட்டு
அவரவர் வேலைகளை பார்க்க போய்விடுகின்றனர்
திரைப்படங்களில் இன்று கற்பழிப்பு காட்சிகளோ,
அங்கங்களை ஆபாசமாக அசைத்து ஆடும் குத்தாட்டமோ
இல்லாத படங்களே கிடையாது
இதை தொலைகாட்சிகளிலும் ஒரு நாளைக்கு
அனைத்து அலை வரிசைகளிலும் போட்டு மக்களின்
காம உணர்ச்சியை தூண்டி விடுகின்றனர்
எல்லோரும் மகாத்மா காந்தியை போல் போல்
புலனடக்கம் கொண்டவர்கள் அல்லர்.
இன்று அனைவரும் வாய்ப்பு கிடைத்தால்
தவறு செய்வதற்கு தயாரான மன நிலையில்தான் உள்ளனர்.
அதனால்தான் எங்கெல்லாம் அதற்க்கான சூழ்நிலைகள்
நிலவுகின்றதோ அங்கெல்லாம் பாலியல் குற்றங்கள்
சர்வ சாதாரணமாக நடக்க தொடங்கி விட்டன.
இதுபோன்ற பாலியல் கொடுமைகள்
வீட்டிலும் வெளியும் தினம் நடந்து கொண்டிருக்கின்றன
.மருத்துவ மனைகள், அலுவலகங்கள்,மாணவர் விடுதிகள்
,ஓடும் ரயிலில் ,காவல் துறை
என தினமும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
சமூக அவமானம் கருதி அனேக பெண்கள்
இதை வெளியில் சொல்லுவதுமில்லை
குற்றவாளிகளை காட்டி கொடுப்பதுமில்லை
ஏனெனில்புகார் அளித்தால் குற்றவாளிகளை விட
பாதிக்கபட்டவர்கள்தான் அதிக துன்பத்திற்கும்
மன உளைச்சலுக்கும் ஆளாக்கபடுகின்றனர் .
உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி
உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி
கடுமையான சட்டங்கள் நிறைவேற்றியும்
அவைகளை நிறைவேற்ற எந்த அரசுகளும்
நடவடிக்கை எடுப்பதில்லை.
பொதுமக்களும் அக்கறை காட்டுவதில்லை.
பத்திரிகை துறையும், திரைப்பட துறையினரும் ,
பத்திரிகை துறையும், திரைப்பட துறையினரும் ,
தொலைகாட்சி ஊடகங்களும் இந்த விஷயத்தை
தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொள்வதில் காட்டும்
அக்கறை பாதிக்கப்பட்டவர்களில் மறுவாழ்வுக்கோ
அல்லது குற்றவாளிகள் உரிய தண்டனை பெறுவதற்கோ
அக்கறை காட்டுவதில்லை
திரைபடங்களில் பெண்களின் உடலழகை மிகைபடுத்தி
திரைபடங்களில் பெண்களின் உடலழகை மிகைபடுத்தி
ஆபாசமாக சித்தரிப்பதில் அனைத்து தயாரிப்பாளர்களும்
ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். பாடலாசிரியர்களும்
அவர்கள் பங்குக்கு ஆபாச பாடல்களை எழுதி காசு பார்க்கின்றனர்.
சின்ன திரையும் அவர்களைவிட பல மடங்கு பெண்களை
சின்ன திரையும் அவர்களைவிட பல மடங்கு பெண்களை
இழிவு செய்யும் காட்சிகள் ஒவ்வொரு தொடரிலும்
இணைத்து மக்களின் ரசனையை கெடுத்து
அவர்கள் மனதில் எந்த குற்ற உணர்வும்
இல்லாமல் செய்துவிட்டனர்.
இதை எந்த மாதர் அமைப்புகளும்
இதை எந்த மாதர் அமைப்புகளும்
கண்டுகொள்வதில்லை
பெண்களை இழிவுபடுத்துவதில்
பெண்களை இழிவுபடுத்துவதில்
ஆண்களை விட பெண்களின் பங்கே
அதிக அளவு இருப்பதால்
அதிக அளவு இருப்பதால்
இந்த பிரச்சினையில் அவர்கள்தான்
முதலில் திருந்த வேண்டும்
முதலில் திருந்த வேண்டும்
பல உண்மை கருத்துக்கள் ஐயா...
பதிலளிநீக்கு