வெள்ளி, 5 அக்டோபர், 2012

கல்லிலே காணும் கலைவண்ணமும் கால வெள்ளத்தில் கரைந்து போய் காணாமல் போன கலைஞர்களும் (பகுதி-3)

கல்லிலே காணும் கலைவண்ணமும் 
கால வெள்ளத்தில் கரைந்து போய் 
காணாமல் போன கலைஞர்களும் (பகுதி-3)


பரம்பொருள் ஒன்றாயினும் 
அதுபலவாய் பிரிந்து 
விரிந்துள்ளது தெய்வங்களாய் நமக்கருள் செய்ய  

ஒரு பெரிய ஏரியின் நூற்றுக்கணக்கான கண்மாய்கள் 
மூலம் நீரை பெற்று நாம் பயன் பெறுவது போல 

நாம் வணங்கும் தெய்வங்கள் பல 
அவைகள் இன்றும் நம் கண்முன் உயிர்பெற்று 
சிலையாய் நின்று  நமக்கு அருள்பாலிக்க வைத்தவர்கள் 
அந்நாள் கலைஞர்கள். அவர்களை நன்றியுடன் 
நினைவு கூறுவது நம் கடமை 
அவ்வாறு செய்யாதிருப்பது மடமை

தெய்வங்களுள் முதலில் 
நாம் வணங்குவது முழுமுதல் கடவுளான 
விநாயகனை,யானை முகம் கொண்டவனை, 
கணங்களுக்கு தலைவனாக விளங்கும் கணபதியை 
மூஞ்சூறு வாகனத்தின் மேல் அமர்ந்து 
அருள் செய்யும் மூஷிக வாகனை 
தந்தத்தை உடைத்து அதைக்கொண்டு 
மகா பாரதம் படைத்த வக்ரதுண்டனை, 
மலைமேலம்ர்ந்திருந்தாலும்,
மரத்தடியில் அமர்ந்திருந்தாலும்
,மாபெரும் கோயிலில் வீற்றிருந்தாலும்
 மண்ணால் செய்தாலும்,
கல்லால் செய்தாலும், 
மஞ்சளில் பிடித்து வைத்தாலும்.
 மனதில் நினைப்போருக்கு நினைத்தவுடன் 
நன்மையை செய்யக்காத்திருக்கும்  
அந்த பரம்பொருளை வணங்கி மகிழ்வோம்.

கீழே காணும் யானை முகனின் அழகு எழுத்தில் வடிக்க இயலாது. 
அந்த சிலை வடித்த சிற்பியின் திறமையை நாம் பாராட்டுவோம்

.இந்த சிலை கர்நாடகாவில் உள்ளது எந்த இடம் என்ற விவரம் என்னிடம் இல்லை. என் நண்பர் ஒருவர் இந்த படத்தை எனக்கு அனுப்பியதை வலையன்பர்களுக்கு அளிக்கிறேன். இந்த சிலை தூணில் செதுக்கப்பட்டுள்ளது (இன்னும் வரும்).

5 கருத்துகள்: