வெள்ளி, 12 அக்டோபர், 2012
சிந்திக்க சில வரிகள்
சிந்திக்க சில வரிகள்
யாகாவாராயினும் நா காக்க
என்றான் வள்ளுவன்
தன்னை தான் காக்க சினம் காக்க
என்றான் அதே வள்ளுவன்
பிறிதோரிடத்தில்
அவன் கூறியதை கருத்தில்
கொள்ளாது கடவுளை நோக்கி
அனுதினமும்
காக்க காக்க என்று
கரடியாக கத்தினால் மட்டும்
காப்பாற்ற வருவானோ
அந்த இறைவன்.?
அன்பே சிவம் என்றார் திருமூலர்
அவன் படைப்புகளிடம்
அன்பாய் வாழ்வதை விடுத்து
இவர்கள் படைத்த சிலைகளிடம்
மட்டும் அன்பு செலுத்தி யாது பயன்?
பசித்தோர்க்கு உணவிடாமல்
உண்ட உணவு செரிக்காது
எந்நேரமும் மாத்திரைகளை
உணவாக கொள்ளும்
மாந்தர்களுக்கு விருந்து
படைத்து என்ன பயன்?
நம் உள்ளத்தில் அழுக்காறு
ஒடுவதனால்தான் என்னவோ
வெளியுலகில் பாலாறு
போன்ற ஆறுகள்
வற்றிவிட்டனவோ?
பிறரை நிந்திப்பதை விடுவோம்
சிந்திப்பதை செயல்படுத்தி
வாழ்வில் வெற்றி காண்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்திக்க... செயல்படுத்த... அருமையான வரிகள்...
பதிலளிநீக்குமுதலில் நாம் இருவரும்
பதிலளிநீக்குஅவ்வாறு நடக்க
தொடங்குவோம்
சிறிது காலத்திற்கு
பிறகு நம்பிக்கையோடு
திரும்பி பார்த்தால்
நம்மை பார்த்து பல பேர்கள்
நம்மை தொடர்ந்து
வந்துகொண்டிருப்பார்கள்.
நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டும்
செக்கு மாடு போல்
இருந்த இடத்திலேயே
ஆயுள் முழுவதும்
சுற்றி சுற்றியே
சுருண்டு படுத்துவிடுவார்கள்