செவ்வாய், 9 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-20)


நான் கவிஞனுமில்லை 
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-20)

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி 
மனிதன் எதையோ பேசட்டுமே 
உன் மனசை பாத்துக்க நல்லபடி 

என்ற பாடல் வரிகள் இந்த கால மக்களுக்கு தெரியாது
ஒருவேளை நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
பட ரசிகர்கள்அவர்  நடித்த இந்த படத்தை
பார்த்திருந்தால் இந்த பாடலை கேட்டிருக்கலாம்

இந்த பாடல் முழுவதும் முக்கியமான
பல உண்மைகளை
வெளிச்சம் போட்டுக்காட்டும்.

ஆனால் படத்தின் பெயர்
எனக்கு மறந்து போய்விட்டது.

மேலும் சில வரிகள் வரும்

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் 
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு 
காப்பாற்ற சில பேர் இருந்துவிட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு 

கோர்ட்டுக்கு தேவை சில சாட்சி 
குணத்திற்கு தேவை மன சாட்சி 

கடலில் விழுந்த ஒருவனுக்கு 
கை கொடுத்தேன் கரையேற 
கரைக்கு அவனும் வந்துவிட்டான் 
கடலில் நான்தான் விழுந்துவிட்டேன்

இறுதியாக சில வரிகள்

சொல்லியழுதால் தீர்ந்து விடும் 
சொல்லத்தானே வார்த்தையில்லை 


யாரும் என்னை  பற்றி என் முகம் முன்பு
எதுவும் அவதூறாக பேசியது கிடையாது 

ஏனெனில் நான் அவ்விதம் மற்றவர்களிடம் 
நடந்து கொண்டதில்லை

நான் மற்றவர்களின் 
விஷயத்தில் தலையிடுவதில்லை
அதனால் என் விஷயத்திலும் மற்றவர்கள் 
தலையிட விரும்புவதில்லை 
ஆனால் இந்த உலகத்தில் சில நபர்களுக்கு 
தங்கள் விஷயங்களை விட மற்றவர்களை 
வாழ்க்கையில் மூக்கை நுழைத்து 
சிக்கல் ஏற்படுத்துவதே தொழில் 
அது அவர்களின் தொழில் தர்மம் 
என்ன செய்வது?


இந்த உலகம் பலவிதமான குணாதிசயங்களை
கொண்ட மனிதர்களை கொண்டுதான் இயங்கும்
இதை யாரும் மாற்ற முடியாது.
நாம்தான் அவர்களை இனங்கண்டு 
கொண்டு ஒதுங்கவேண்டும்.

ஆனால் என்னைப்பற்றி இல்லாததும் 
பொ ல்லாததுமாக மேலிடத்திலும்,
மற்றவர்களிடமும் அவதூறு பரப்பிகொண்டிருண்டனர்.

அவைகளெல்லாம் நான் 
அந்த அலுவலகத்தை 
விட்டு சென்றபின் 
ஒவ்வொன்றாக 
என் காதுகளுக்கு எட்டியது 


அப்போதுதான் நான் மேற்கண்ட வரிகளை 
நினைத்து நினைத்து 
என் மனதை தேற்றிகொல்வேன். 

நான் நேர்மையாக நடக்கின்றேன். 
உலகம் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் 
சொல்லிவிட்டுபோகட்டுமே என்று என்னை
 நான் சமாதானபடுத்தி கொள்ளுவேன். 

பெற்றோரிடம் நான் 
வளரவில்லையாதலால் 
எனக்கு அவர்கள் இருந்தும்
நான் அவர்களுக்கு அன்னியனாகிவிட்டேன்.
அதனால் அவர்களிடம் என் மன உளைச்சலையும் 
சொல்லி ஆறுதல் தேட வழியில்லாமல் போயிற்று. 

அதேபோல்தான் உறவுகளும்.

போலித்தனமான பேசும் மற்றவர்களை 
என்னால் நண்பர்கள் என்று
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை 
ஏனென்றால் யார் நண்பர்கள்,யார் விரோதிகள் 
என்று கணிக்கமுடியாத சூழ்நிலை இருந்தது 

ஆனால் நான் யாரையும் எதிரியாக பார்த்ததில்லை . 
அப்பேர்ப்பட்ட மனிதர்களிடம் பேசும்போது கூட 
அவர்கள் எனக்கு செய்த தீமைகளை
 நான் நினைவில் வைத்துக்கொள்வதில்லை 
அது இறைவன் எனக்கு அளித்தவரப் பிரசாதம். 

அதனால் இந்த பாடல் எனக்கு வேத மந்திரமாயிற்று 
என் வாழ்நாள் முழுவதும். (இன்னும் வரும் )

1 கருத்து: