சனி, 13 அக்டோபர், 2012
தீபாவளி பரிசு மழையும் மின் கட்டணஉயர்வும்-தமிழ்நாடு
தீபாவளி பரிசு மழையும்
மின் கட்டணஉயர்வும்-தமிழ்நாடு
வரலாறு காணாத வகையில்
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு
அறிவிக்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டது
வழக்கம்போல் எதி(ரி) கட்சிகள்
தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்க போய்விட்டன
மக்கள் என்ன செய்வார்கள்? பாவம்
அவர்களால் என்ன செய்ய முடியும்?
ஓசியில் மிக்ஸி மின்விசிறி
தொல்லை காட்சிபெட்டி,
இண்டக்ஷேன் அடுப்பு,
மாவு இயந்திரம்வாங்கி,
வீட்டில் ஜம்பமாக
வைத்து கொண்டதற்கு
மக்கள் தண்டனையாக
மின் கட்டணத்தை செலுத்தி
தொலைக்க வேண்டியதுதான்
நடுத்தர மக்கள் தரமற்ற மின்சாரத்தை
பெற்றுக்கொண்டு தரமற்ற தொலைகாட்சி
பெட்டிகளில் தரக்குறைவான காட்சிகளை
கண்டு அழுதுகொண்டிருப்பதோடு
மற்ற அறிவிப்புகளையும் ரசித்து கொண்டு
மின் கட்டணத்தை அழுது தொலைப்பதில்லை
தவிர வேறு வழியில்லை
வீட்டில் மின்விசிறி,பிரிஜ் தொலைகாட்சி பெட்டி, ஏசி
துணியை நனைத்து சாயம் போடும் இயந்திரம்,
மாவு இயந்திரம், அழுக்கு துணியானாலும் அயன் பண்ணி போடு என்ற புதுமொழிக்கிணங்க மின்சார அமுக்கு பெட்டி , தண்ணி மோட்டார் , இண்டக்ஷேன் அடுப்பு, என ஏராளமான கருவிகளை வாங்கி வைத்துள்ளதால் மாதம்500யூனிட்டுக்களுக்கு கண்டிப்பாக ஆகும்.
எதையும் இனி நிறுத்த முடியாத முடியாது. எனவே வயிற்றில் ஈர துணியை போட்டு கொண்டு மின் கட்டணத்தை செலுத்த வேண்டியதுதான்
பிரணாப் மாமா 12.அரை விழுக்காடு சேவை வரி எல்லாவற்றிலும் போட்டு நம்மையெல்லாம் ஏற்கெனவே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டு ஜனாதிபதி மாளிகைக்குள் போய்புகுந்து கொண்டு விட்டார். இனி அவருக்கு எல்லாமே இலவசம்
வீட்டு வாடகைக்கிருப்போர் வீட்டு வாடகைக்கும்,
மின்கட்டணத்திற்கும் தங்கள் சம்பாதிப்பதில்
பாதிக்கு மேல் அழுதுவிட்டு
மின் விசிறியையும், ஏசிமசினையும் நிறுத்திவிட்டு,
கொசுக்கள் பாடும் கொலைவெறி பாட்டை கேட்டுக்கொண்டே இனி உறங்க பழகி கொள்ளவும், அகப்பட்ட கொசுக்களை போட்டு தள்ளவும் பழகி கொள்ள வேண்டும்.
காலையில் குழாயில் தண்ணீர் வராது. பவுடர் மற்றும் சென்ன்ட்டை அடித்துக்கொண்டு அவரவர் அவரவருக்கு குறிப்பிட்ட திசைகளை நோக்கி ஓடவேண்டும். வியர்வை தண்ணியில் நீராட வேண்டியதை தவிர வேறு வழி கிடையாது
வாடகைக்கு குடியிருப்போர் இனி நடு தெருவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை
கையாலாகாத அரசியல்வாதிகளை நம்மை மேய்க்க அனுப்பி வைத்தால் அவர்கள் அரண்மனையில் உல்லாசமாக பவனி வருவதும், ஆடம்பரமான கார்களில் சுற்றி வந்து பந்தா காட்டுவதும் மக்களை ஏமாற்றி திரிவதும் வாடிக்கையாகிவிட்டது
.
இதற்க்கு காரணம் மக்கள் தங்கள் பிழைப்பு எப்படியாவது நடந்தால் போதும் என்று ஒவ்வொருவரும் நினைப்பதுதான். இந்த துன்பத்திற்கு காரணம் .
எல்லாவற்றையும் மொத்தமாக தண்டம் அழுதுவிட்டு மகிழ்ச்சியாக கோவணத்தை கட்டி கொண்டு கிளம்பிவிடலாம். தயாராக இருக்கவும்
மின்சாரத்தை இலவசமாக வாரி இறைக்கும் இந்த அரசியல்வாதிகளால் ஆளப்படும் அரசுகள் வோட்டு வங்கிக்காக அதை என்றும் நிறுத்த போவதில்லை
தொடர்ந்து தரமான மின்சாரத்தை வழங்க எந்நேரமும் எல்லா பிரிவினருக்கும் வழங்க நடவடிக்கை அரசுகள் என்று எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது
மின்கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் செலுத்த அரசு மக்களுக்கு
உதவி செய்தால் 500 யூனிட்டுக்களுக்கு மேல் ஆகும் மின்சார அதிர்ச்சியிலிருந்து மக்கள் தப்பிக்க உதவியாய் இருக்கும்
இந்த உதவியையாவது மாண்புமிகு முதல்வர் செய்தால் மக்கள் அவரை வாழ்த்துவார்கள்.
ஆனால் அது நடக்கபோவதில்லை என்று தெளிவாக அறிவிப்பு வெளியாகிவிட்டது. இனி மின்சார துறை செய்யும் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். .அதோடு மக்கள் விரோத போக்கான மத்திய அரசு தன் பங்குக்கு மக்கள் மீது விதித்துள்ள சேவை வரியும் வசூலிக்கப்படும் என்பதே மக்களுக்கு தீபாவளி பரிசாக கிடைக்கபோவது உறுதி.
இந்த தீபாவளிக்கு பலகாரம் செய்கிறேன் என்று மின்சாரம், சமையல் எரிவாயு,மற்றும் விலைவாசி விண்ணை எட்டிவிட்ட உணவு பொருட்கள் ஆகியவை கருத்தில் கொண்டு வீட்டில் எதுவும் செய்து காசை வீணாக்காமல். கடையில் பலகாரங்களை வாங்கி தின்று,கொடுத்து இன்புற்று வாழ்வீர்களாக
தீபாவளிக்கு பட்டாசு வாங்கி காசை கரியாக்காதீர்கள்
ஒரு கொசு அடிக்கும் மின் மட்டையை வாங்கி குழந்தைகளுக்கு கொடுங்கள் அவர்கள் நாள் முழுவதும் மட்டையை வைத்துக்கொண்டு கொசுக்களை வேட்டையாடிகொண்டிருப்பார்கள். பளிச் பளிச் என்று ஒளித்துக்கொண்டு சத்தத்துடன் நாரகாசுற கொசுக்களை வானுலகம் அனுப்பி வைக்கும் காட்சி ரசிக்க நன்றாக இருக்கும்.நமக்கும் கொசு தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். டாக்ட்டர் பில்லும் மிச்சமாகும்
என் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல யோசனைகள் ஐயா... (உண்மை)
பதிலளிநீக்குநன்றி...
உண்மை நிலவரத்தை சொன்னேன்
நீக்குகேட்பதற்கும் யாரும் இல்லை
பார்ப்பதற்கும் படித்து பின்னூட்டம் இடுபவரும்
யாரும் இல்லை உங்களை தவிர்த்து
நன்றிகள் பல கோடி உங்களுக்கு