சனி, 13 அக்டோபர், 2012

கற்சிலைக்கும் உயிர் கொடுத்த கலைஞர்கள்


கற்சிலைக்கும் உயிர் கொடுத்த 
கலைஞர்கள் 

தனிமையிலே
இனிமை காண முடியுமா?

ஏன் முடியாது ?

மனிதன் என்பவன்
அகமும் புறமும்
இணைந்த
ஒரு அற்புத பிறவி

வாழ்வின் மகிழ்ச்சியான
தருணங்கள் நம் மனதில்
நினைவுகளாக பதிவாகியுள்ளன
அதை மீண்டும் நினைவுக்கு
கொண்டு வருவதன் மூலம்
அந்த இனிமையை அனுபவிக்கலாம்

விழிகளை மூடிக்கொண்டு உறங்கும்போது
நம் முகத்தில் அந்த மகிழ்வின் சாயலை
விழித்திருப்போர் கண்டு மகிழலாம்.

சிறு குழந்தைகள் உறங்கும்போது பார்த்தால்
சில சமயம் அழகாக சிரிக்கும்
சில நேரங்களின் அது பயந்து
நடுங்கும். அதை காண்பதற்கு
மிக அழகாக இருக்கும்
அதை ரசித்தவர்கள் உள்ளத்தில்
அந்த காட்சிகள் என்றும் பசுமையாக இருக்கும்.

அதைபோல்தான் உள்ளத்தில் உறையும்
இறைவனை கண்டுதரிசிப்பவர்களின்
முகத்தில் அந்த தெய்வீக புன்னகை பளிச்சிடும்.

அது மற்ற உலகியல் காட்சிகளை காணும் போது 
வெளிப்படும் புன்னகையிலிருந்து  வேறுபடும்
அதை கண்டவர்களுக்குதான் அதன் வேறுபாடு தெரியும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
தற்காலத்தில் இருப்பதுபோல்
அத்தகைய காட்சிகளை படம்பிடிக்க
எந்த சாதனங்களும் கிடையாது.
அத்தகைய காட்சிகள் கல்லிலே உயிரோடு
நம் கண்முன் ந்கொண்டு வந்து நிறுத்திய
அந்த கலைஞனை பாராட்ட வார்த்தைகளே கிடையாது.

ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும்
அந்த புன்னைகை மாறாது இன்றும்
மங்காமல் அப்படியே இருப்பது வியக்கத்தக்கது.
அதுபோன்ற இரு சிலைகளின்
முக பாவங்களை கண்டு மகிழுங்கள்
(தாராசுரம்-இராவதேஸ்வரர் கோயில்)



2 கருத்துகள்:

  1. தங்களின் ரசனையை ரசித்தேன் ஐயா...

    முக்கியமாக :

    /// சிறு குழந்தைகள் உறங்கும்போது பார்த்தால்
    சில சமயம் அழகாக சிரிக்கும்
    சில நேரங்களின் அது பயந்து
    நடுங்கும். அதை காண்பதற்கு
    மிக அழகாக இருக்கும்
    அதை ரசித்தவர்கள் உள்ளத்தில்
    அந்த காட்சிகள் என்றும் பசுமையாக இருக்கும். ///

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும்
      ரசிக்க வேண்டும். ரசிக்கதெரியாதவன் அவன் முன்பு
      இலையில் சுவையான உணவு பரிமாறியும்
      அதை உண்ணாமல் ,சுவைக்காமல் வெறுமனே
      பார்த்துக்கொண்டு நிற்கும் சிலை போன்றவன்.

      நீக்கு