வியாழன், 11 அக்டோபர், 2012

கல்லிலே காணும் கலைவண்ணமும் கால வெள்ளத்தில் கரைந்து போய் காணாமல் போன கலைஞர்களும் (பகுதி-4)


கல்லிலே காணும் கலைவண்ணமும்
கால வெள்ளத்தில் கரைந்து போய்
காணாமல் போன கலைஞர்களும் (பகுதி-4)

தமிழ் நாட்டை மன்னர்கள்
ஆட்சி செய்து வந்தவரை
போர்கள் நடந்து வந்தன
அவைகளில் சிறு சிறு போர்களும்,
பெரும் போர்களும் அடங்கும்.

போர்களினால் பல துன்பங்கள் விளைந்திடினும்
நல்ல திறமையான அரசர்கள் தமிழ் நாட்டை
ஆண்ட காலத்தில்தான்
ஆயிரக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டன.
 ஏரிகள், கால்வாய்கள், அணைகள்,
குளங்கள் அமைக்கப்பட்டன.

அந்நியர்களின் படையெடுப்பால்
நம் நாட்டில் போர்கள் பல நிகழ்ந்து
 நம் நாட்டு வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு
 நம் கலாச்சார சின்னங்கள் அழிக்கப்பட்டன.
அவைகளில் சில தப்பின.

அவற்றை சமூக விரோதிகளிடமிருந்து
முழுவதும் அழியாமல் காப்பாற்றிய பெருமை
 நம் நாட்டை ஆண்ட லார்ட் கர்சன் பிரபுவையே சாரும்.

தொல்லியல் துறையை உருவாக்கி
கலை செல்வங்களை பாதுகாக்கப்பட்ட
சின்னங்களாக அறிவித்ததுதான்.
நம் கோயில்களில் உள்ள பல சிலைகள்

அக்கால மக்களின் வாழ்க்கையை
கல்லில் படம் பிடித்து காட்டுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் கீழே காணும் சிற்பம்.
அதில் போரில் ஒரு யானை
ஒரு குதிடை வீரனை பிடிப்பதை தத்ரூபமாக
கல்லில் செதுக்கியுள்ள

அந்த கலைஞனை நாம்
கண்டிப்பாக பாராட்டவேண்டும்.



1 கருத்து: