நான் கவிஞனுமில்லை
நல்ல ரசிகனுமில்லை (பகுதி-17)
லஞ்சம் மூலம் பெரும் வருவாய்
மனிதனின் எருவாய் மூலம்
வெளியேறும் மலம் போன்றது
அது என்றைக்கும் லஞ்சம்
வாங்குபவனுக்கு பயன்பாடாது
அதன் மூலம் சேர்க்கும் சொத்து
முள்ளு மரங்கள் போன்றது
அது என்றைக்கும் வீட்டின் வெளியில்
வேலியில்தான் கிடக்குமே தவிர
வீட்டிற்கும் என்றும் நுழையமுடியாது
லஞ்சம் மூலம் சேர்த்த சொத்து
யாருக்கும் பயன்படாமல் வங்கி
பெட்டகங்களிலும்,
வாரா கடன்களாகவும், கொள்ளை போகும்
பொருளாகவும் தான் இருக்கும்
சில நேரங்களில் தீரா நோயாகவும்
தீர்க்க முடியா பிரச்சினைகளையும்
அது கொண்டு வந்து சேர்க்கும்
நிகழ்காலத்தில் இன்பம் தரும் லஞ்சம்
நம் அந்திம காலத்தில்
நிச்சயம் நம்மை பலவிதங்களில்
தீர்த்து கொள்ளும் வஞ்சம்
நான் பணியாற்றும் பிரிவு மிகவும்
அலுவலகத்திலேயே முக்கியமானது
லட்சக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் பிரிவு
அதனால் அந்த பிரிவிற்கு என்று போட்டா போட்டிஉண்டு
அதை பெறுவதற்கு மேல் நிலை அலுவலகத்திலும்,
அலுவலகத்தில் அதிகாரியிடமும் லஞ்சம் கொடுத்து
அந்த பிரிவை பெற்றவர்களும் உண்டு
ஏனெனில் இந்த பிரிவில் இருந்தால்
எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்
பெரிய அலுவலர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்
தன் கையை கடிக்காமல் ஆடம்பரமாக செலவு செய்யலாம்
புத்திசாலித்தனமான நடவடிக்கையால் நல்ல காசு பார்க்கலாம்
சுக போக வாழ்க்கை வாழலாம்
தானும் சந்தோஷமாக இருந்து சுற்றுப்பட்ட தேவதைகளையும்
நம் பிடியில் வைத்துக்கொள்ளலாம்
மேல்நிலை அலுவலகத்திலும் ஆட்களை
தன் பிடியில் வைத்துக்கொண்டு
நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
எனக்கு முன்பு இருந்த நபர் நான் மேல கூறிய அனைத்து
தந்திரங்களையும் கடைபிடித்து முடி சூடா மன்னனாக
ராஜ போக வாழ்க்கை வந்து வந்தார்
அவருக்கு மேல் இடத்து சிபாரிசில் மாநில அளவிலான
அலுவலகத்தில் ஒரு அயல் பணி கிடைத்தவுடன்
இந்த பணியை விட மனமில்லாமல்
விட்டு போக வேண்டியதாயிற்று.
அவர் இங்கிருந்து சென்ற பின்னரும்
சில காலம் என்னை வேவு பார்த்து கொண்டிருந்ததாக
எனக்கு தகவல்கள் வரும்
அவர் சென்றதும் அந்த இடத்திற்கு
போட்டா போட்டி நிலவியது.
அப்போதுதான் வந்து சேர்ந்த அதிகாரி
எந்த ஒரு சிக்கலிலும் சிக்காத என்னை தூக்கி
அந்த பிரிவில் போட்டதும்
அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது
அனுபவமில்லாத என்னை
அந்த பிரிவில் போட்டால்
இவன் எத்தனை நாள் தாக்கு
பிடிக்கிறான் என்று எதிர்பார்த்தனர்
ஆனால் நான் இரவும் பகலும் பணி புரிந்து
எந்த சிக்கலிலும் சிக்காமல்
காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன்
ஆனால் ஏற்கெனவே எனக்கு
முன்பு பணி புரிந்த நபர் ஏற்பாடுகள்
தொடரவில்லை என்பதால் என் மீது
பல பேருக்கு வெறுப்பு ஏற்ப்பட்டது
எனக்கு முன்பு இருந்தவர்
காசு பார்ப்பதில் வல்லவர்
அவருக்கும் நல்ல தேட்டை போட்டுகொண்டு,
மேல்நிலை அலுவலர்களுக்கும்
அங்கிருக்கும் மற்ற பரிவாரங்களுக்கும் மாதா மாதம்
தவறாமல் மாமூல் போய் சேர்ந்து விடும்.
அவர்கள் சென்னை வந்தால்
அவர்களின் மொத்த செலவும் ஏற்றுக்கொள்ளப்படும்
இவைகளெல்லாம் நான் பணிக்கு வந்தவுடன் நின்று போயிற்று
எனக்குதான் இந்த மாதிரி விஷயம்தான் சரிப்பட்டு வராதே
ஆகையால் என்னை அங்கிருந்து தூக்குவதற்கு
அனைவரும் தகுந்த காலத்தை
எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் (இன்னும் வரும்)

/// நிகழ்காலத்தில் இன்பம் தரும் லஞ்சம்
பதிலளிநீக்குநம் அந்திம காலத்தில்
நிச்சயம் நம்மை பலவிதங்களில்
தீர்த்து கொள்ளும் வஞ்சம் ///
உண்மை... தொடர்கிறேன்...