சனி, 20 அக்டோபர், 2012

கீதையை புரிந்துகொள்வோம் (பகுதி-3)

கீதையை 
புரிந்துகொள்வோம் (பகுதி-3)

சில பேர் மரணத்திற்கு
பயப்படுவதில்லை ?
யார் அவர்கள் ?

போர்க்களத்தில் 
போர் செய்துகொண்டிருக்கும் வீரர்கள் 

விலங்குகள் மற்றும் 
அனைத்து உயிரினங்களும் 

தன் வாழ்நாளில் மரணத்தை
இதுவரை சந்திக்காதவர்கள் 

மரண செய்தியை கேட்காதவர்கள். 
மரண பயம் பற்றிய
கட்டுக்கதைகளை அறியாதவர்கள். 

எப்போதும் எதையாவது 
இலக்கை நிர்ணயித்துக்கொண்டு 
எப்போதும் அந்த சிந்தனையிலேயே மூழ்கி
வேறு எதையும் நினைக்க நேரமில்லாமல்
சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருப்பவர்கள் 

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் 

குழந்தைகள் 

மரணத்தின் தன்மையை உணர்ந்த ஞானிகள், 
ஜீவன் முக்தர்கள், யோகிகள் 
இவர்களையெல்லாம் மரணம் பயமுறுத்தாது 

உறங்குவது போலும் சாக்காடு 
உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு
என்றார் வள்ளுவர் .

உறக்கம் என்பது மனதின் ஒரு நிலை .
விழிப்பு என்பது மனதின் ஒரு நிலை. 

உறக்கத்தில் எந்த விழிப்பு நிலையிலிருந்து
உறக்கத்திற்கு செல்கிறோமோ 
அதே நிலைக்கு திரும்பி வந்தால் அது உறக்கம். 

எந்த விழிப்புநிலையிலிருந்து 
உறக்கத்திற்கு சென்றோமோ 
விழித்தவுடன் மீண்டும் அதே விழிப்பு நிலைக்கு 
வாராமல்போனால் நம்மை காண்பவர்
கண்களுக்கு நாம் மரணம் 
அடைந்துவிட்டதாக தோற்றமளிக்கிறோம். 

நாம் திரும்பவும் அந்த உடலுக்குள் புகாவிட்டால் 
அந்த உடல் செயல்படாமல் அழுகதொடங்குகிறது.
சுற்றியுள்ளவர்கள் அதை அப்புறப்படுத்தி அழித்து விடுகின்றனர். 

ஆனால் நாம் உண்மையில் மரணமடைவதே கிடையாது.
நாம் குடியிருக்கும் இந்த உடல்
 என்னும் வீடுதான். மாறிக்கொன்டிருக்கிறது. 
அதை நாம் கவனத்தில் கொள்வதேயில்லை. 

அதை கவனத்தில் கொள்ளும்போதுதாம் 
,மாற்றங்களை உணரும்போதுதான் 
நம்மை மரண பயம் தொற்றிக் நம்மை கொல்லுகிறது. 

ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்
மரணம் என்பதுஅவரவர்  மனம் சம்பந்தப்பட்டதே ஒழிய
இந்த உலகம் சம்பந்தப்பட்டது அல்ல 

மனதில் அந்த எண்ணம் இல்லாதவரை
நாம் உயிருடன் இயங்கிகொண்டிருப்போம்.

எனவே மரணமடையாமல் 
இருக்க ஒரே வழி
நாம் எப்போதும் அந்த சிந்தனை
நம் மனதில் நுழைய 
அனுமதிக்காமல் இருந்தால்  
அது நம்மை ஒன்றும் செய்யாது.

நாம் நம்முடைய ஆசைகளை,
குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள 
ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு 
இடம் மாறி செல்வதுபோல், 
ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு 
குடியேறி செல்வது போல்
பயணித்துக்கொண்டே இருக்கலாம். 

முயன்று பாருங்கள். வெற்றி நிச்சயம். 

2 கருத்துகள்: