திங்கள், 29 அக்டோபர், 2012

நான் பதிவரானது எப்படி(பகுதி-2)


நான் பதிவரானது எப்படி(பகுதி-2)

2008 ஆம் ஆண்டு மூன்று பதிவுகளை தொடங்கி
இடுகைகளை இட்டுக்கொண்டிருந்தேன்.

என் புத்திக்கு எட்டிய வரையில்
ஆன்மீக கருத்துக்களை
வெளியிடும் வகையில் மேலும்
இரண்டு வலைபதிவுகளை
2009  ஆம் ஆண்டு தொடங்கினேன்

7th DECEMBER 2009 ல் DIVINE BLISS என்றும்
11 th DECEMBER 2009 ல் OM SAAYEE OM என்றும் இரண்டு
வலைபதிவுகளை தொடங்கினேன் .
DIVINE BLISS- இதுவரை இட்ட இடுகைகள் -40-
பார்வையாளர்கள் -746
OM SAAYE OM-இடுகைகள் -5 பார்வையாளர்கள் -13 

ஆனால் பல விஷயங்களில்
என் கருத்தை பதிய 2010
ஆம் ஆண்டு ENNAPPARAVAIGAL என்ற
வலைப்பதிவை தொடங்கி அதில்
என் கருத்துக்களை வெளியிட்டேன்

அதில் 41 இடுகைகளை இட்டேன்
பார்வையாளர்கள் -282 மட்டுமே

அப்படியும் என் மனம்
திருப்தியடையவில்லை .

ஆன்மிகம் மற்றும் நாட்டு நடப்புகள் மீது
என்னுடைய கருத்தை பதிவு செய்ய
 2011 ஆம் ஆண்டு இரண்டு
 புதிய பதிவுகளை தொடங்கினேன்

அக்டோபர் 2011 ல் RAMARASAM என்ற பதிவையும்
டிசம்பர் 2011 ல் NAADUMNADAPPUM என்ற
பதிவையும் தொடங்கி அதில்
என்னுடைய கருத்துக்களை பதிவு செய்தேன் .

RAMARASAM-இதுவரை இட்ட இடுகைகள் -192-
பார்வையாளர்கள் -6284

NAADUM NADAPPUM-இடுகைகள் -49-
பார்வையாளர்கள் -3759 

ஏப்ரல் 2012 ல் . CHINTHANAI SITHARALGAL
என்ற வலைபதிவு தொடங்கி
இதுவரை 165 இடுகைகள் இட்டுள்ளேன்

பார்வையாளர்கள் 2740 

வலைப் பதிவை தொடங்கி என் மனதில் உள்ள
விஷயங்களை பலரும் அறிய வெளியிட்டதில்
எனக்கு ஒரு ஆத்ம திருப்தி உள்ளது .
2008 தொடங்கிய என் பயணத்தில் இதுவரை 668 இடுகைகள்
இட்டிருப்பது எனக்கே வியப்பாக உள்ளது.

இன்னும் என்னிடம் இந்த உலகோடு பகிர்ந்து கொள்ள ஏராளமான  கருத்துக்கள் உள்ளன .அவைகளை இனி வருங்காலத்தில் வெளிப்படுத்த  இந்த ஊடகம் வழி வகுத்துள்ளது . என்றால் அது மிகையாகாது .
  

நான் பதிவரானது எப்படி?


நான் பதிவரானது எப்படி?

இன்டர்நெட் இணைப்பு பெற்ற
இரண்டு ஆண்டுகளுக்கு பின்தான்
வலைபதிவுகளை பார்க்க நேரிட்டது.

அந்த இணைப்பை பெறுவது எளிது
என்று அறிந்ததும் செப்டம்பர் 2008 ல் கண்காட்சி
என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு துவங்கிவிட்டேன்

அதில் என் மனதில் பூட்டி வைக்கப்பட்ட
 எண்ணங்களையும், கருத்துக்களையும்
 படங்களுடன் வெளியிட ஆரம்பித்தேன்.

 நான் படித்த ஏராளமான ஆன்மீக புத்தகங்களின்
 தாக்கம் என் மனதில்
 பல கருத்துக்களை தோற்றுவித்திருந்தது .
அவற்றை வெளியிட DIVINEBLISS என்னும்
ஒரு வலைப்பதிவை அக்டோபர் 2008 ல் துவக்கினேன் .

நவம்பர் 2008 ல் ஆத்திகமும் நாத்திகமும்
என்ற பெயரில் மற்றொரு வலைப்பதிவை துவக்கினேன்

வலைத்தளத்தில் சினிமா,அரசியல்,சாதீயம்,
பெண்ணீயம்,ஈழப்ப்ரசினை
எழுத்தாளர்களின் பனிப்போர் போன்ற
விஷயங்கள்தான் அதிகம் வாசகர்களை பெறுகின்றன
நான் அதில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை

எனவே என் வலைபதிவிற்கு
வாசகர்களும் பின்னூட்டம் இடுபவர்களும்
மிக மிக குறைவு.

நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
எனக்கு இந்த உலகத்திற்கு பயனுள்ள
கருத்துக்களை வெளியிடுவதோடு
என் கடமைகளை முடித்த திருப்திபோதும்
என்ற மனநிலையில் நான் இருந்தேன்.

இன்றைய நாள் வரை அவ்வப்போது
என்னுடைய கருத்துக்களை
பதிவு செய்து கொண்டு இருக்கிறேன்.

கண்காட்சி-இடுகைகள் 123 வருகைகள்-1040 .

DIVINEBLISS-இடுகைகள்-165 வருகைகள் -20

ஆத்திகமும் நாத்திகமும் -இடுகைகள்-13     வருகைகள்-235 

ஆனால் இத்தோடு நான் நிற்கவில்லை
மீண்டும் கூடுதலாக பதிவுகளை
துவக்க நினைத்தேன் (இன்னும் வரும்)

தமிழ் மொழியின் பெருமையை அறிந்துகொள்வோம்



தமிழ் மொழியின் 
பெருமையை அறிந்துகொள்வோம் 


அருணகிரிநாதரின் ஏகாட்சரப் பாடல்

    அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு.
    வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர்.

    அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். 

    அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

    வில்லி தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார். 

    அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். 
    அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்
வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும்.  அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லி வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். 

    வில்லியும் ஒத்துக்கொண்டார்.

    வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். 

    வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை. 

    அது ஒரு "தகரவர்க்க"ப் பாடல். முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும்.

                                       சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு.
                                     "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம்                    
                                       ஆகியவற்றில் பாடல்கள்உண்டு
                                       
                                        காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

    வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். 

    அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார்.

    வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். 

                 பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார்.
    அந்த நூல் அவருடைய பெயராலேயே 'வில்லி பாரதம்' என்று வழங்குகிறது. 

பாடலைப் பார்ப்போம்:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் 
இவ்வாறு கொடுக்கிறார்.
    
திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய 
அத்தி - அயிராவதம் என்னும் யானையால்வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். 

    இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்
திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.
முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள்.
    
    கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கின்றன.

    உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். 
 நன்றி 
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
 http://www.visvacomplex.com/Ekakshara_Verse_of_ArunagiriNathar.html

அடிமாடுகளின் ரத்தக்கண்ணீர்


அடிமாடுகளின் ரத்தக்கண்ணீர்













அடிமாடுகளின் ரத்தக்கண்ணீர்

தினந்தோறும்தமிழ்நாட்டிலிருந்தும் 
மற்ற மாநிலங்களிருந்தும் லட்சக்கணக்கான 
மாடுகள் இறைச்சிக்காக கேரளாவிற்கு 
லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன

அவைகள் அங்கு ஈவிரக்கமின்றி 
கொடூரமாக கொலை செய்யப்பட்டு
அதன் இறைச்சிகள் வளைகுடா நாடுகளுக்கும்
மற்றும் கீழை நாடுகளுக்கும் 
ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இன்று உலகில் அசைவ உணவு உண்போர்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது
.
நம் வீட்டில் நமக்கு பலவகையிலும்
பயன்தந்துவிட்டு இனி பயன் இல்லை
என்ற நிலையில் அவைகளை
மாட்டு சந்தையில் விற்றுவிடுவது
நன்றி கெட்ட செயலாகும்
.
நாம் உண்ணும் உணவின்
கழிவுகளை மட்டும் அவைகளுக்கு
உணவாக அளித்தாலே அவைகள்
கடைசி காலம் வரை காலம்தள்ளும்
.
இறந்த பிறகு அவைகளை
இறைச்சி கூடத்திற்கு அனுப்புவதில்
எந்த பிரச்சினையுமில்லை
.
ஆனால் அவைகளை ஈவிரக்கமின்றி
ஒரே லாரியில் அடைத்து சென்று
இறைச்சிக்கூடத்தில் இரும்பு சம்மட்டியால்
தலையில் அடித்து கொல்லும் கோரக்காட்சி
சில மாதங்கள் முன்பு 
அம்ரிதா தொலைகாட்சியில்
ஒளிபரப்பப்பட்டது
.
எனவே தாங்கள் ஆசையோடு
வளர்த்த மாடுகள் கேரளாவில் போய்
கொடூரமாக சாகத்தான் வேண்டுமா
என்பதை அதை விற்பவர்கள்
சிறிது சிந்தித்து பார்த்தல் நலம்
.
ஆனால் அசைவ உணவு உண்பவர்கள்
மனித நேயத்தை பற்றி பேசத்தான் முடியுமே தவிர
அதை அவர்களால் உணர வாய்ப்பில்லை
.
அருட்ப்ரகாச வள்ளலார் கொல்லா விரதத்தை
கைகொள்ள வலியுறுத்தினார்
ஆனால் அதை கடைபிடிப்பவர்கள்
இவ்வுலகத்தில் வெகு சிலரேயாவர்
.
பசுவை காமதேனு என்றும் , கோமாதா என்றும்
,பசுக்களை பராமரித்து நேசித்த கண்ணபிரானை தெய்வம்
என்றும் போற்றி வணங்கும் நம் ஹிந்து சமுதாயம்
இந்த கொடுமையை கண்டும் காணாமல் இருப்பதும்
பெரும்பாலானோர் அதன் இறைச்சியை உண்டுவிட்டு
அவனுக்கு பூஜை செய்வதும் கேலிக்குரியதும்
கண்டனதிர்க்குரியதும் ஆகும்

அவர்கள் இன்று வளமாக வாழ்ந்தாலும்
அது நிச்சயம் போலியானதாகத்தான் இருக்கும்
அதன் விளைவுகளை அவர்களோ அல்லது
அவர்களின் சந்ததிகளோ ஒரு நாள்
அனுபவித்துதான் தீரவேண்டும்
என்பது இறைவன் வகுத்த விதி

மேலும் ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் 
நம் மண் வளத்தை நாசபடுத்தி அதிலிருந்து வரும் 
விளைபொருட்களும் நச்சுபோருளாக மாறி
மக்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்திருப்பதை 
இப்போதுதான் உணரத்தலைப்பட்டு இயற்க்கை வேளாண்மைக்கு 
திரும்ப வேளான்பெருங்குடி மக்களும் பொதுமக்களும் விழிப்புணர்வு பெற தொடங்கியுள்ளநிலையில் மாடுகளின் அனைத்து கழிவுகளும் 
இயற்கை உரமாகவும், பூச்சி கொல்லியாகவும் பயன்படுகிறது 
என்ற நிலையில் மாடுகளை கசாப்பு கடைகளுக்கு உயிருடன் 
அனுப்புவதை தடை செய்ய வேண்டும். 

சட்டங்களால் எந்த உண்மையான மாற்றங்களையும் ஏற்படுத்தமுடியாது. 

மக்களின் மனதில் அன்பு பயிர் துளிர்த்தால்தான் இந்த கொடுமைக்கு தீர்வு பிறக்கும்

 

வெள்ளி, 26 அக்டோபர், 2012

தீபாவளி திருநாளா அல்லது தீபா வலி தருநாளா ?



(தீபாவளியை முன்னிட்டு இது ஒரு மறு பதிவு)

sATURDAY, OCTOBER 17, 2009

தீபாவளி திருநாளா அல்லது தீபா வலி தருநாளா ?

தீபாவளி திருநாளா அல்லது
தீபா வலி தருநாளா ?
நரகாசுரன் இறந்ததை இப்படி
அசுரத்தனமாகத்தான்
கொண்டாட வேண்டுமா ?
ஓராண்டு முழுவதும் வாகனங்கள்
வெளியிடும் நச்சு புகையை
பட்டாசுகள் வெடித்து இரண்டே
நாட்களில் நம் சுற்றுபுறத்தை
நாசப்படுதுவதுதான் தீபாவளி 
பண்டிகையின் நோக்கமா ?


வெளியே சென்றால் 
பட்டாசு வெடிச்சத்தம்
காதை செவிடாக்கிவிட்டது
தரையிலும் சத்தம் வானை 
அண்ணாந்து நோக்கினாலும்
வெடிச்சத்தம் கண்ணை 
குருடாக்கும் ஒளிவெள்ளம்

வீட்டிற்குள்ளே வந்தால் தொலைகாட்சி பெட்டியில்,
பண்பலையில் அறிவிப்பாளர்கள் ,பேட்டியாளர்கள் ,
பாடல்கள் ,ஆட்டங்கள் ,பட்டி மன்றங்கள் ,
விளம்பரங்கள் ,வன்முறை,மற்றும் விரச காட்சிகளை
கொண்ட திரைப்படங்கள், என நாராசமான கூச்சல்


கேட்கும் சக்தியற்றவர்களே நீங்கள் உண்மையில்
புண்ணியம் செய்தவர்கள் இந்த 
கொடுமைகளிலிருந்து
தப்பியதற்கு என்றுதான் நினைக்க தோன்றுகிறது



















விளக்குகளை வரிசையாக ஏற்றி புத்தாடை உடுத்தி
இறைவனை வணங்கி உறவுகளுடன் உள்ளன்போடு
இனிப்பு வழங்கி பெரியர்வர்களை வணங்கி
ஆசி பெற்று மகிழ்வதை விட்டுவிட்டு

சுற்றுபுறத்தை நச்சு வாயுக்களால் மாசுபடுத்துவதும் ,,
குப்பைகளால் நாட்டையே நிரப்புவதும்


பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மது குடித்து
உடல்நலத்தை அழித்துகொள்வதும்
ஒரு பண்டிகையின் நோக்கமாக இருக்க முடியாது .

இதய நோய் உள்ளவர்களும் , முதியோர்களும் ,
குழந்தைகளும் , சுவாச நோய் உள்ளவர்களும் நோயாளிகளும்,
மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், ஓலை குடிசையில் வாழ்பவர்களும்,,
சிறு ,பிராணிகளும் , பறவைகளும் அடைந்த துன்பத்தை
சிறிதும் கருத்தில் கொள்ளாமல் வெடிகளை வெடித்து
பல்லாயிரம் கோடி ரூபாய்களை வீணாக்கிய,ஒவ்வொரு ஆண்டும் வீணாக்கும் இந்த மக்கள் சமுதாயம்
பண்புள்ளவர்கள் , அறிவுள்ளவர்கள் ,மனித நேயம் கொண்டவர்கள் என்று பீற்றிகொள்வதற்கு 
எந்தவகையிலும் அருகதையற்றவர்கள்
மகிழ்ச்சி தேவைதான்.
ஆனால் அது .தானும் மகிழ்ந்து பிறரையும்
மகிழ்விப்பதாக இருக்கவேண்டும்..


இந்த போலியான மகிழ்ச்சி அவர்களுக்கோ அல்லது
இந்த மனித குலத்திர்க்கோ
எந்த நன்மையையும் அளிக்கபோவதில்லை
என்பதை அவர்களுக்கு யார் புரியவைப்பது ?


அசுரனின் அழிவை கொண்டாடுபவர்கள்
பிறருக்கு துன்பம் தந்துதான் அதை
கொண்டாட விரும்புவார்களோ?
சிந்திப்பீர்.

வியாழன், 25 அக்டோபர், 2012

நகைச்சுவை வெடிகுண்டு ஜஸ்பால் பட்டி மறைவு




நகைச்சுவை வெடிகுண்டு 
ஜஸ்பால் பட்டி மறைவு 

நகைச்சுவைஉலகிற்கு
பெரிய பேரிழப்பு

அவர் நகைச்சுவையை ரசிக்க
மொழி தேவையில்லை 

அனைவரையும் தன் நடிப்பால் ,பேச்சால், 
அங்க அசைவுகளால் ,
அன்றாட நிகழ்வுகளை கொண்டு 
சிரிக்க வைத்த அன்னாரின்
 பூதஉடல் மறைந்தாலும்,நம் மனதில் 
அவரின்நகைச்சுவைகாட்சிகள் 
அவரை நினைத்த மாத்திரத்தில் 
திரைப்படமாக ஓடி நம்மை
சிரிக்க வைக்கும்.என்பது நிச்சயம்  

புதன், 24 அக்டோபர், 2012

கருணை மறந்தே வாழ்கின்றார்



கருணை மறந்தே வாழ்கின்றார் 
கடவுளை தேடி 
அலைகின்றார் 

அன்பே சிவம் என்று கூறுகின்றார் 
அவன் படைத்த உயிர்களை 
காசுக்காக ,நாவின் ருசிக்காக
 ஈவிரக்கமின்றி கொல்கின்றார் 
கடவுளின் தேசம் என்று 
பீற்றிகொள்ளும்  கேரள மக்கள் 

அங்கு நடக்கும் அநியாயங்களை 
கேரளாவில் உள்ள கோயில்களுக்கு 
லட்சக்கணக்கில் செல்லும் 
பக்த கோடிகளே ,தெரிந்துகொள்ளுங்கள் 

தெய்வம் நீங்கள் இருக்கும் 
இடத்திலேயே உள்ளது 
உங்கள் உள்ளத்திலேயே  உள்ளது

கேரளாவில் தெய்வமே கிடையாது
தெய்வங்கள் இருக்கும் இடத்தில் 
இவ்வளவு அநியாயங்கள் நிச்சயம் நடக்காது.  

கீழ்கண்ட வீடியோ இணைப்புகளை காணுங்கள். 
உங்கள் உள்ளத்தில் ஈரம், இரக்கம் 
என்று ஒன்று இருந்தால் 
உங்களை மனிதர்கள் என்று
சொல்லிக்கொள்ளுங்கள். 



We made a documentary titled: "Their Last Journey" - Cattle trafficking to Kerala. This is now hosted in youtube and can be accessed through the following links:


வள்ளலாரின் சிந்தனைகள்


வள்ளலாரின் சிந்தனைகள்  

















இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
என்ற திரைப்பட பாடல் வரிகள் அந்தக்கால
சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்

நாட்டிற்காக தங்கள்
உயிரை அர்ப்பணிப்பதை
தியாகம் என்றும்
சில நோக்கங்களுக்காக தீயில் உயிரை
பலிஇடுவது யாகம் என்று மக்கள் நம்புகின்றனர்

ஆனாலும் உயிர் எப்படி இந்த
உடலை விட்டு போனாலும்
அந்த உயிருக்கும், அந்த உயிர் மீது பாசம்
வைத்திருப்பவர்களுக்கும் வலியை
தரும் என்பதில் ஐயமில்லை

ஒரு சில மனிதர்கள் ஒரு பிராணியை
உணவாக கொள்வதும்
ஒரு சிலர் அதை விரும்பாததும் என்ன காரணம்
என்றால் அவரவர் மனோபாவம்தான் காரணம்

மீனையோ அல்லது மற்ற உயிரினங்களை
உண்பவர்கள் அவைகளை
உணவாகத்தான் பார்க்கிறார்கள்
.அவைகளை உயிராக பார்ப்பதில்லை

உணவாக பார்க்கும்போது
அவைகளை கொல்லும்போது
அந்த செயல் எந்த சலனத்தையும்
அவர்கள் மனதில் ஏற்படுத்துவதில்லை

அதுவே அவர்கள் அன்போடு,ஆசையோடு ,
பாசத்தோடு வளர்த்த நாயை தெருவில்
வேகமாக போகும் ஒரு கார் மோதி
அதை கொன்றுவிட்டால்
அந்த மனிதரையும் அவர் ஒட்டி
வந்த காரையும் அடித்து
நொறுக்கிவிடுகின்றனர்.

பொதுவாக நாம் பாம்பை
கண்டால் பயப்படுகிறோம்.
அது நம்மை ஒன்றும் செய்யாவிட்டாலும்
அதை கண்டால் கொன்று விடுவது
என்ற கொள்கை அனைவருக்கும் உண்டு.

ஏனென்றால் அது நம்மை கடித்துவிடும்.
கடித்தால் நாம் இறந்துவிடுவோம் என்று
நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது .

அது விஷப்பாம்பாக இல்லாதிருந்தும்
பாம்பென்று மனிதன் எதிரில் வந்தால்
அதற்க்கு மரண தண்டனை நிச்சயம்.

ஆனால் அந்த பாம்புபுற்றிற்கு
கோயில் கட்டி வழிபடுகிறோம்.
உண்மையில் அது கரையான் புற்று
பாம்புகளுக்கு ஒருதலையிலிருந்து தொடங்கி
ஆயிரம் தலை வரை உள்ள
சிலை வைத்து வழிபடுகிறோம்

உண்மை என்னவென்றால்கல்லால் செய்யப்பட்ட
பாம்பு நம்மை கடிக்காது என்ற தைரியம் .
அதற்க்கு குங்குமம்,மஞ்சள் பூசி
படையலிட்டு வழிபடுகிறோம்.

சீனர்கள்,மற்றும் பல நாட்டினர்.
பாம்பை உணவாக சுவைக்கிறார்கள்
அவர்களுக்கு பாம்பிடம் பயம் என்பதே கிடையாது.

எனவே மனம்தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்

ஒரு பிராணியை ,அது தங்கள் உணவென்று
மனம் நினைத்தால் அது வயிற்றுக்குள்   போகும்

அதுவே அது தன்னை போல ஒரு உயிர்
அதை நாம் நேசிக்கவேண்டும் என்று நினைத்தால்
அது அவர்கள் வீட்டில் வளர்ப்பு பிராணியாக
மகிழ்ச்சியாக உலா வரும்.

எனவே சைவ உணவு உண்பவர்கள்
அசைவ உணவு உண்பவர்களை
விமரிசிப்பது தேவையற்றது

சைவ உணவு உண்பவர்கள் செய்யும்
கொலைகள் கணக்கில் அடங்கா
கொசுக்கள்.எலிகள், கரப்பான் பூச்சிகள்
,புழுக்கள் , எறும்புகள்,
இன்னும் பலவிதமான பூச்சிகள்
என்று பட்டியல் நீண்டுகொண்டேபோகும்

இந்த உலகில் ஒரு உயிரை மற்றொரு
உயிர் உண்டுதான் வாழ வேண்டும்
என்பது இறைவன் வகுத்த விதி

போரின்போது மனிதர்கள்
மற்றொரு மனிதர்களை கொன்று அழிப்பதும்
இந்த விதியின் கீழ்தான் நடைபெறுகிறது.

எல்லாம்மனிதர்களின் மனதில் உள்ள
எண்ணங்களில்தான் அனைத்தும் உள்ளது.

வள்ளலாரின் சிந்தனைகளை
இந்த மனித குலம் மனதில் கொண்டால்
அந்த மாற்றம் நிகழும்.

அந்த மாற்றம் நிகழ பிரார்த்திப்போம்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

வாராஹி


வாராஹி



















வாராஹி வாராஹி
வாராஹி நீ வருவாய்

வணங்குபவர்களின் வாழ்வினில்
வளங்கள் சேர்க்க வருவாய்

பல கோடி பிறவி சுழலில் உழன்று
சிக்கிதவிக்கும் உன் சேய்களை 
காக்க இதுவே தருணம்

எளியோரை வலியோர் வதைத்திடும்
அவல நிலையினை
இப்புவியிலிருந்து இப்போதே அகற்றிடுவாய்

அருளோடு பொருளும் பொருளோடு நிறைவும்
அனைவரும் அடைந்திட அருள் செய்திடுவாய்

பேதங்கள் அகன்றிட சேதங்கள் தவிர்த்திட
எல்லோரும் உன் சேய்கள்தான் என்ற எண்ணமதை
அனைவருக்கும் உணர்த்திடுவாய்

வலிகளை தாங்கிடும் வன்மையையும்
இன்ப துன்பங்களை  எளிதாய் ஏற்றிடும் பான்மையையும்
பழிக்கு ஆளாமல் என்றும் உன் காப்பும்
தேடி உன் திருவடியை அடைந்தோர்க்கு
அக்கணமே  அளித்த்திடும் அன்பு தெய்வமே

தரணி போற்றும் தாரணியே
வேண்டியதனைத்தும் அளிக்கும் பூரணியே
இயக்கங்களின் காரணியே
சிலந்தி வலையில் சிக்கிய உயிர் போல்
வினைகளால் பின்னப்பட்ட விதிவலையில்
சிக்கிய நானும் அபயம் தேடி
உன்  திருவடி அடைந்தேன் ;;

தேனூறும் மலர்களை அணிந்து
திவ்யமாய் காட்சி  தரும் வாராஹியே
என் கண்கள் கண்ட பயனே
ஆன்மாவிற்கு அமைதி தருபவளே
எல்லோர் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி
ஆனந்தம் மலரட்டும் அன்னையே .

துன்பங்களும் துயரங்களும்
சூழ்ந்திட்ட இவ்வுலகில்
அல்லல்படும் மாந்தர்களை   
ஆதரித்து காப்பவளே
அபிராமியே !அகிலாண்டேஸ்வரியே
அன்னையே என் மனம் உன்னையே
என்றும் நினைத்திட வரமருள்வாயே .

அடிபணிந்தேன் ,உளம் உவந்தேன்
மூடிய என் விழியினுள்ளும்
உன் திருஉருவம் கண்டு தரிசிக்க
உன் கடைக்கண்   பார்வையினால்
என்னை ஆட்கொண்டருளுவாய்
அன்னை வாராஹியே

;







கலைமகள் துதி

கலைமகள் துதி






















அறியாமையை அகற்றும்
கலைவாணியே

நறுமணம் வீசும்
மலர்களால் அர்ச்சித்து

இசையால் உன்புகழ்
பாடி துதித்து போற்றி
உன்னை அடிபணிந்தேன்

இவ்வுலகில் அனைத்து
மக்களின் மனதில்
மாசுகள் நீங்கி
அன்போடு இணைந்து
ஆனந்தமாக வாழ
அருள் செய்வாயாக

திங்கள், 22 அக்டோபர், 2012

கீதையை புரிந்துகொள்ளுங்கள்(பகுதி-5)

கீதையை
புரிந்துகொள்ளுங்கள்(பகுதி-5)

எது நடந்ததோ 
அது நன்றாகவே நடந்தது. 

கீதாசாரம் என்று அச்சிடப்பட்ட இந்த அட்டையை
பல பேர்கள் தங்கள் வீட்டிலும்,கடைகளிலும்,
பணி  புரியும் மேஜை மீதும் வைத்திருக்கிறார்கள்

ஆனால் அதில் உள்ள வரிகளை படித்து
அதை உள்வாங்கிக்கொண்டு
தன வாழ்க்கையில் அதை கடைபிடிக்க
முயற்சி செய்கிறார்களா என்பது கேள்விக்குறியே

ஏனென்றால் மனிதனில் மனதை
ஆக்கிரமித்துள்ளவைகள்
பல கோடி விஷயங்கள்

சினிமா, அரசியல்,ஆன்மீகம்,மூட நம்பிக்கைகள் ,
சொந்த பிரச்சினைகள், வீட்டு பிரச்சினைகள்,
நாட்டு பிரச்சினைகள்,  என அவன் மனதில்
அவனை பற்றி சிந்திக்க விடாமல்
அவனை 24 மணிநேரமும் அவனை ஆட்டி படைக்கின்றன.

எப்போதும் அவன் மனம் அவனுக்கு
புறம்பாக உள்ள மனிதர்களின் வாழ்க்கையை பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறது

அவன் அவனுடைய பிரச்சினைகளை பற்றி
கண்டுகொள்ளாமல் ஊர் பிரச்சினைகளை
பற்றியே கவலைப்பட்டு கொண்டு இருக்கிறான்

சொந்த பிரச்சினையையே தீர்த்துக்கொள்ள
வக்கில்லாத அவன் தன்னால் ஒன்றும்
செய்ய  இயலமுடியாத வெளி பிரச்சினைகளை
தன் மனதில் விட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறான்

இந்த சூழ்நிலையைத்தான்,அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும்,,திரைப்பட துறையினரும் ,பல மோசடி மன்னர்களும்,ஊடகங்களும் ,ஏமாற்றுக்காரர்களும் அவனை தங்கள் வலையில் சிக்க வைத்து காசு பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது
இந்த உலகம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்த உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறது
மேலும் அது சூரியனையும் ஒரு தடவை
ஒரு நாளில் ஒரு சுற்று சுற்றி விடுகிறது.

எரிமலைகள் உலகில் எங்காவது
ஒரு மூலையில் வெடித்து சிதறிக்கொண்டே இருக்கின்றன
புயல்,வெள்ளம்  தீவிபத்து,போர் என்று
ஏதாவது நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன

ஒரு புறம் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கின்றன,ஒருபுறம் மடிந்துகொண்டிருக்கின்றன.

ஒருபுறம் மரணத்தின் வாயிலிருப்பவர்கள்
மருத்துவர்களின் துணையால் பிழைத்துக்கொள்ளுகிறார்கள்
மறுபுறம் நோயினால் மக்கள் ஆயிரக்கணக்கில் இறக்கிறார்கள்

மற்றொருபக்கம்  மக்கள் சண்டையிட்டு கொண்டு
ஆயிரக்கணக்கில் மாண்டு போகிறார்கள். .

இவைகளெல்லாம் நம்மால் தடுக்க முடியுமா
என்றால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது .
இவைகளை நாம் வெறுமனே வேடிக்கை தான் பார்க்க இயலும்.
ஏதோ  ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுகளை வேண்டுமானாலும்
சிலர் தடுக்க நினைக்கலாம் அல்லது மாற்ற முயலலாம்.
ஆனால் அதெல்லாம் வீண் செயலே.

இந்த உலகத்தை படைத்து காத்து,மீண்டும்
தனக்குள்ளே இழுத்துக்கொள்ளும் ஒரு மகா சக்தி செயல்படுத்தும் நிகழ்வுகளில் ஒரு பொருட்டாகவே கருதமுடியாத நிலையில்
உள்ள நாம் இந்த நிகழ்வுகளை மாற்ற முயல்வது அறிவீனம்.

அதனால்தான் இந்த உலகத்தில் எது நிகழ்கிறதோ
அது நன்றாகவே நடந்தது என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் எரிமலை  வெடித்துசிதறுவதால்தான் அனேக தீவுகள் உண்டாயின,அதில் மரங்களும் செடி கொடிகளும், உயிரினங்களும் உண்டாயின 

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம் 

ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்பு ஒரு மாற்றம், 
முன்னேற்றம்  நிச்சயம் உண்டு என்பதை உணர்ந்தவர்கள்
மனம் அமைதியாய் இருக்கும் அலைகடலின் அலைகள்போல் அலைந்துகொண்டிருக்காது. . (இன்னும் வரும்) 

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நவராத்திரி கொலு-2012


 நவராத்திரி கொலு-2012






அலைமகளும் கலைமகளும்
 மலைமகளும்
அழகாய் கொலு வீற்றிருக்க

அயனும் மாலும்,
 ஹரனும் அவர்களோடு
சேர்ந்து காட்சி தர ,
அவன் படைப்புகள்
அனைத்தையும்
ஒருங்கே சேர்ந்து
கண்டு மகிழ அனைவரும்
கூடி மகிழ்ந்து
இசையால் துதித்து
மகிழும் அற்புத காட்சிதான்
நவராத்திரி பெருவிழா.

அனைத்து மக்களின்
வாழ்வில் வசந்தம் பொங்கும் திருவிழா

கலைகளின் சங்கமம் வீடுதோறும்
நாடுதோறும்

சிவனின் பாதியான
பார்வதியும்,பிரம்மனின் நாவில் உறையும்
கலைமகளும்,மாலின் இதயத்தில்
வாசம் செய்யும் மகாலட்சுமியும்
அனைவருக்கும் எல்லா நலன்களும்,
எல்லா வளங்களும், நோயின்றி மகிழ்ச்சியான
வாழ்வு அருள வேண்டுகிறேன்.
.

ஏதேனும் மருந்து உண்டோ?


ஏதேனும் மருந்து உண்டோ? 

கலப்படம் செய்பவர்களால் 
மரித்தவர்களின் படங்கள்
வீட்டில் தொங்கும் 

கலப்படம் செய்த மாபாவிகள் 
என்று தூக்கில் தொங்குவாரோ?

உணவுபொருட்களை தின்று 
அழிக்கும் எலிகள் 

அவைகளை அழிக்க எலிமருந்து உண்டு 

ஆனால் நோயோடு போராடும் மக்களின் 
உயிரோடு விளையாடும் போலி
மருந்து தயாரிக்கும்நிறுவன 
தயாரிப்பாளர்களை அழிக்க 
மருந்தேதும் உண்டோ? 

அவர்களை உயிரோடு பிடித்து 
மண்ணில் உயிரோடு புதைக்கும்
நாள் வருவது எந்நாளோ?

கீதையை புரிந்துகொள்ளுங்கள்(பகுதி-4)


கீதையை 
புரிந்துகொள்ளுங்கள்(பகுதி-4)

இந்த உலகில்
நாம் வாழும் காலம்
எவ்வளவு என்பதை
நம்மை படைத்தவனே அறிவான்

ஏனென்றால் கருவிலேயே அழிந்துபோகும்
வாய்ப்புக்கள் இந்த காலத்தில் அதிகரித்துவிட்டன

பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டுபிடிக்கப்பட்டு
இந்த உலகத்தில் பிறவி எடுக்கவிடாமல் செய்ய
அந்த கருவை கொடுத்த கணவனும்
அதை பெற்றுக்கொண்ட பெண்ணும்
பெண் சிசுவென்று தெரிந்தால் பிறக்கபோகும்
அந்த பெண்குழந்தையை வெறுக்க தொடங்கி
அதை கருவிலேயே அழித்துவிடுகின்றனர்

அதனால் அந்த பெண்ணின்
உடல் நலமும் பாதிக்கப்படுகின்றது .

அதையும் மீறி அந்த பெண் குழந்தை இந்த உலகத்திற்கு
வந்துவிட்டால் அந்த தாயும் மற்றவர்களும்
ஈவிரக்கமின்றி அந்த பச்சிளம் சிசுவை மரண உலகத்திற்கு அனுப்பிவிடுகின்றனர்.

உலக முழுவதும் இந்த நிலைமை
பரவலாக காணப்படுகின்றது.

அப்படி பிறந்தாலும் அந்த பெண் குழந்தைகளுக்கு
ஆண்கள் இழைக்கும் அநீதிகள் ஏட்டிலடங்கா

தற்காலத்தில் பெண்கள் ஆண்களைவிட
பெண்களுக்கு அதிக அளவில்
அநீதிகள் இழைக்கின்றனர்.

இதனால் உலகில் பல நாடுகளில்
பெண்கள் தொகை ஆண்களின்
மக்கள் தொகையை விட குறைந்துவிட்டது.

அதனால் பெண்களுக்கு அளவுக்கதிகமாக
 பல சலுகைகளை சில நாடுகள் அளித்துள்ளன

.பல நாடுகளில் பெண்கள் பலவிதமான
அடக்குமுறைகளுக்கு ஆளாக்கி ஆளாக்கி ஒடுக்கி
வீட்டிற்குள்ளேயே  முடக்கி வைக்கப்படுகின்றனர்.

அதை எதிர்க்கும் ஒரு சிலர் கொடூரமான
முறையில் கொல்லப்படுகின்றனர்.

அதனால் பெண்கள் ஆண்களை
விட பலவிதமான திறமைகளை பெற்றிருந்தும்
அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி
என்பது கனவாகவே இருக்கிறது.

இறைவன் படைப்பில்
ஆணும் பெண்ணும் சமமே
அப்படியிருக்க ஏன் இந்த பாகுபாடு ?

உலகம் தோன்றிய நாள் முதல்
இந்த பாகுபாடு நிலவி வருகிறது.
தற்போது பலமடங்கு அதிகரித்துவிட்டது.

எந்த வீட்டிலோ அல்லது நாட்டிலோ
 பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்களோ அல்லது கொடுமைபடுத்தப்படுகிறார்களோ அந்த சமூகம்
நாகரீகமான ,வளர்ச்சியடைந்த
நாடாக கருதப்படமாட்டாது (இன்னும் வரும்)

சனி, 20 அக்டோபர், 2012

கீதையை புரிந்துகொள்வோம் (பகுதி-3)

கீதையை 
புரிந்துகொள்வோம் (பகுதி-3)

சில பேர் மரணத்திற்கு
பயப்படுவதில்லை ?
யார் அவர்கள் ?

போர்க்களத்தில் 
போர் செய்துகொண்டிருக்கும் வீரர்கள் 

விலங்குகள் மற்றும் 
அனைத்து உயிரினங்களும் 

தன் வாழ்நாளில் மரணத்தை
இதுவரை சந்திக்காதவர்கள் 

மரண செய்தியை கேட்காதவர்கள். 
மரண பயம் பற்றிய
கட்டுக்கதைகளை அறியாதவர்கள். 

எப்போதும் எதையாவது 
இலக்கை நிர்ணயித்துக்கொண்டு 
எப்போதும் அந்த சிந்தனையிலேயே மூழ்கி
வேறு எதையும் நினைக்க நேரமில்லாமல்
சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருப்பவர்கள் 

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் 

குழந்தைகள் 

மரணத்தின் தன்மையை உணர்ந்த ஞானிகள், 
ஜீவன் முக்தர்கள், யோகிகள் 
இவர்களையெல்லாம் மரணம் பயமுறுத்தாது 

உறங்குவது போலும் சாக்காடு 
உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு
என்றார் வள்ளுவர் .

உறக்கம் என்பது மனதின் ஒரு நிலை .
விழிப்பு என்பது மனதின் ஒரு நிலை. 

உறக்கத்தில் எந்த விழிப்பு நிலையிலிருந்து
உறக்கத்திற்கு செல்கிறோமோ 
அதே நிலைக்கு திரும்பி வந்தால் அது உறக்கம். 

எந்த விழிப்புநிலையிலிருந்து 
உறக்கத்திற்கு சென்றோமோ 
விழித்தவுடன் மீண்டும் அதே விழிப்பு நிலைக்கு 
வாராமல்போனால் நம்மை காண்பவர்
கண்களுக்கு நாம் மரணம் 
அடைந்துவிட்டதாக தோற்றமளிக்கிறோம். 

நாம் திரும்பவும் அந்த உடலுக்குள் புகாவிட்டால் 
அந்த உடல் செயல்படாமல் அழுகதொடங்குகிறது.
சுற்றியுள்ளவர்கள் அதை அப்புறப்படுத்தி அழித்து விடுகின்றனர். 

ஆனால் நாம் உண்மையில் மரணமடைவதே கிடையாது.
நாம் குடியிருக்கும் இந்த உடல்
 என்னும் வீடுதான். மாறிக்கொன்டிருக்கிறது. 
அதை நாம் கவனத்தில் கொள்வதேயில்லை. 

அதை கவனத்தில் கொள்ளும்போதுதாம் 
,மாற்றங்களை உணரும்போதுதான் 
நம்மை மரண பயம் தொற்றிக் நம்மை கொல்லுகிறது. 

ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்
மரணம் என்பதுஅவரவர்  மனம் சம்பந்தப்பட்டதே ஒழிய
இந்த உலகம் சம்பந்தப்பட்டது அல்ல 

மனதில் அந்த எண்ணம் இல்லாதவரை
நாம் உயிருடன் இயங்கிகொண்டிருப்போம்.

எனவே மரணமடையாமல் 
இருக்க ஒரே வழி
நாம் எப்போதும் அந்த சிந்தனை
நம் மனதில் நுழைய 
அனுமதிக்காமல் இருந்தால்  
அது நம்மை ஒன்றும் செய்யாது.

நாம் நம்முடைய ஆசைகளை,
குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள 
ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு 
இடம் மாறி செல்வதுபோல், 
ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு 
குடியேறி செல்வது போல்
பயணித்துக்கொண்டே இருக்கலாம். 

முயன்று பாருங்கள். வெற்றி நிச்சயம். 

வெள்ளி, 19 அக்டோபர், 2012

கீதையை புரிந்து கொள்வோம்(பகுதி-2)


கீதையை
புரிந்து கொள்வோம்(பகுதி-2)

மரணம் என்ற சொல்
அப்படி என்ன பாவம் செய்தது?

பாவத்தின் சம்பளம்
மரணம் என்கிறார்கள்?

புண்ணியம் செய்பவர்களுக்கு
மரணம் இல்லையா?

பாவம் செய்தாலும் புண்ணியம் செய்தாலும்
மனிதர்களுக்கு மட்டுமல்ல
எல்லா உயிர்களுக்கும்
மரணம் நிச்சயம் உண்டு.

ஆனால் எந்தனை முறை பிறந்து
எத்தனை முறை மடிந்தாலும்
இந்த உடலுக்குத்தான் மரணம் , என்பதை
பகவானும் பலமுறை சொல்லிவிட்டான்

அவன் கூறியதை விளக்க வந்த கணக்கற்ற
ஞானிகளும் சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.
ஆனால் மனித குலம்
எதையும் கவனிப்பது கிடையாது

திரும்ப திரும்ப கீறல் விழுந்த
கிராமபோன் ரெகார்ட் போல்
சொன்னதையே மக்கள் சொல்லிகொண்டிருக்கிறார்கள்

 ஒருவர் இறந்தால் அவரின் உடலுக்கு
 மரியாதைகள் செய்ய சில ஆயிரங்களிருந்து
 பல லட்சங்கள் வரை வீணடிக்கிறார்கள்
துக்கப்படுவது போல் நடிக்கிறார்கள்.
இவையெல்லாம் தேவையற்ற செயல்

பெயரிட்டு அழைத்தவனை 
பிணம் என்று பெயரிட்டு என்று 
அழைக்கிறார்கள்என்கிறார் திருமூலர் 

இறந்தவன் எவ்வளவு
பெரிய பதவி வகித்த வனானாலும்
செல்வந்தனானாலும் அவன் மதிப்பு அவ்வளவுதான்.

ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்திருந்தும்
 யாரும் அதை சட்டை செய்வதில்லை

கடவுள் எல்லா இடத்திலும்
நீக்கமற நிறைந்திருக்கிறார்

அதைப்போல் மரணமும் எல்லா இடங்களிலும்
எல்லா நேரமும் நாம் இந்த உலகில்
தாயின் வயிற்றில் கருவாக
ஒரு உடலில் புகுந்தவுடன் அதுவும்
நம்மோடு குடியேறுகிறது .

அது ஒவ்வொரு கணமும்
 நம்முடைய உடலில் அணுக்களை
கொன்று கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் புதிய அணுக்கள்
தோன்றிக்கொண்டே இருக்கின்றன

நம் குழந்தையாக வெளி வருகிறோம் .
சில வருடம் கழித்து நம் குழந்தை உருவம்
மரணமடைத்து அதிலிருந்து பாலகன் உருவம்,
அதுபோல் வாலிப உருவம் என்று புதிது புதிதாக தோன்றிக்கொண்டிருக்கின்றன.

எப்போது நம்முடைய உடல் வளர
தொடங்குவதைநிறுத்த தொடங்குகிறதோ
அப்போதுதான் மரண பயம் நம்மை
பற்ற தொடங்குகிறது.

ஆனால் சில மக்கள் மரணத்திற்கு
பயப்படுவதில்லை
அது எப்படி ? (இன்னும் வரும்)  

வியாழன், 18 அக்டோபர், 2012

கீதையை புரிந்து கொள்வோம் (பகுதி-1)


கீதையை 
புரிந்து கொள்வோம் (பகுதி-1)
















மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா 
மரணத்தின் தன்மை சொல்வேன் 
மானிடர் ஆன்மா மரணமெய்தாது 
மறுபடி பிறந்திறக்கும் .-பகவத் கீதையில் கண்ணன் 

இன்று மரணம் என்றாலே
எப்பேர்பட்ட தைரியசாலியும்
,புத்திசாலியும் கலங்கிவிடுகிறான்
அவனும் கண் கலங்குகிறான்
அவனை சுற்றி நிற்கும்
உறவுகளும் நண்பர்களும்
அழுது வழிகின்றனர்.

அவன் எதிரிகளோ
அவன் மரணத்தை ஆவலோடு
எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
அவர்கள் இடத்தை தாங்கள் பிடித்துக்கொள்ள
தாங்களே அதற்க்கு ஒருநாள்
இரையாக போகிறோம்
என்பதை அறியாது .

மேலும் மரணம் என்ற சொல்லை
உச்சரிக்கக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது .
அந்த சொல்லை அமங்கலம் என்று
முத்திரை குத்தி அதை உச்சரிக்கவே
 மனித சமுதாயம் பயப்படுகிறது

ஆனால் அந்த மரணம்
எப்போது வேண்டுமானாலும்,
எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
எந்த இடத்தில வேண்டுமானாலும்,
யாராலும் வேண்டுமானாலும்
எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வரலாம்
 என்பது யாருக்கும் முன்பே தெரிவதில்லை .

அது எதிர்பாராமல் வந்து தன் வேலையை
முடித்துக்கொண்டு மக்களை
துடிக்க வைத்து ஓடிவிடுகிறது


மக்களும் பல்லியின்உடலிலிருந்து அறுந்து
கீழே விழுந்த வால் போல் சில காலம் (நடித்துவிட்டு)
துடித்து விட்டு அடங்குவதுபோல்
அந்த சம்பவத்தை மறந்துவிட்டு
அவரவர் வேலையை பார்க்க போய்விடுவதுதான்
இந்த உலகில் நடக்கிறது


அதனால்தான் பகவான் கண்ணன்
இந்த பூமியில் எப்போது பிறப்பு என்று
ஒன்று இருக்கிறதோ
இறப்பு என்று நிச்சயம் உண்டு
அதை யாரும் மாற்றமுடியாது
மாற்ற முடியாத ஒன்றை நினைத்து
விசனப்படுவது, அச்சப்படுவது
தேவையற்றது என்கிறான். (இன்னும் வரும்)