செவ்வாய், 2 அக்டோபர், 2012

கர்ம வீரர் காமராஜரை நினைவு கூறுவோம்

கர்ம வீரர் காமராஜரை
நினைவு கூறுவோம்  














கிராமந்தோறும் 
கல்விசாலைகளை   திறந்தவர் 
அறிவு பசியோடு 
வயிற்று பசியையும் தீர்த்தவர்

விரைந்து முடிவெடுத்தவர் 
வெட்டி செலவுகள் செய்யாதவர் 
தன்னை மட்டும் முன்னேற்றிகொண்டு
செல்லும் இக்கால 
அரசியல்வாதிகளைபோல் அல்லாது 
தமிழ் நாட்டை முன்னேற்ற 
 பாதையில் கொண்டு சென்றவர்

நேர்மையை பறைசாற்றும் 
நெடிய உருவம் கொண்டவர் 

எளிமையை பறைசாற்றும் 
கதர் வேட்டியும் சட்டையும் அணிந்தவர் 

நாட்டின் விடுதலைக்கு 
உழைத்த தியாகி 

அடித்தள மக்களின் 
உயர்வுக்கு உழைத்த யோகி 

அகில இந்திய அரசியலில் 
அடியெடுத்து வைத்தார்
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் 
வகையில் முடிவெடுத்தார் 

வாழ்க என்றும் அவர் புகழ் 

2 கருத்துகள்:

  1. கல்விக்கண் திறந்த உயர்ந்த பெருந்தலைவரின் சிறப்பு பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நல்லவற்றை யார் செய்தாலும் பாராட்டி
    அவர்களை ஊக்குவிக்கவேண்டும்

    செய்தவர்களை மறவாது நினைவு கூறவேண்டும்.

    அதை இன்று சடங்காக அரசியல் தலைவர்கள்
    செய்துகொண்டிருக்கிறார்கள்

    அதுவும் சுயனலதிர்க்காக
    எப்படியும் அவர்கள் போடும் வேஷம்

    தேர்தல் நேரத்தில் வோட்டுக்களை
    தேட்டை போட நிச்சயம் அவரகளுக்கு உதவும்

    மக்களுக்கு அந்த சிந்தனைகள்
    அன்றும் கிடையாது.இன்றும் கிடையாது
    என்றும் கிடையாது

    எப்படி என்றால் ஒரு திரைப்படம்
    பார்த்தபின் அடுத்து என்னென்ன
    திரைப்படங்கள் வரப்போகின்றன
    என்று எதிர்பார்க்கும் சினிமா பிரியர்கள போல்
    அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    அவர்களுக்கு தங்களை
    பற்றிய சிந்தனையும் கிடையாது
    நாட்டை பற்றிய சிந்தனையும் கிடையாது

    போராடுவர்களோடு சேர்ந்து கொண்டு
    போராட்டம் செய்வார்கள்

    கல்லெறிபவர்களோடு சேர்ந்து கொண்டு
    காண்பதை எல்லாம் அடித்து நொறுக்குவார்கள்

    அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களுக்கே
    வரிகளாக ,விலைவாசி உயர்வுகளாக மீண்டும்
    அவர்கள் தலையில் சுமத்தப்படும் என்பதை
    உணராத/உணர மறுக்கின்ற உத்தம பிறவிகள்
    இதுதான் நம் நாட்டின் இன்றைய நிலைமை

    எல்லோரும் கல்வி கற்கின்றனர்
    பெயரின் பின்னால் பட்டங்களை இணைக்க மட்டும்
    வெளிநாட்டில் வேலையை பெறுவதற்கு
    வகுக்கும் திட்டம்

    அவர்கள் தங்கள் நாட்டிலும்
    மதியார் சட்டங்களை
    வெளிநாட்டிலும் அவ்வாறே.
    ஆனால் அங்கு சென்று சிறைப்படுவார் புலம்புவார்
    ஆனால் இங்கோ சட்டங்கள்
    அவர்கள் காலடியில்தான் கிடக்கும்.

    இதுதான் நம் நாட்டு
    மக்களின் உண்மை நிலைமை

    பதிலளிநீக்கு