வியாழன், 31 அக்டோபர், 2013

பழமொழியும்-புதுமொழியும்

பழமொழியும்-புதுமொழியும் 

இரும்பு பிடிச்சவன் கையும்
சிரங்கு பிடிச்சவன் கையும்
சும்மா இருக்காது.-பழமொழி 





டிவி  ரிமோட்  பிடிச்சவனின் கை விரல்களும்



கைபேசி பிடிச்சவன் கைவிரல்களும்
சும்மா இருக்காது -புதுமொழி 



கந்தை துணியானாலும்
கசக்கி கட்டு -பழமொழி



அழுக்கு துணியானாலும்
அயன் பண்ணிப் போடு -புதுமொழி 

சூதும் வாதும்
வேதனை செய்யும்-பழமொழி

சூதும் வாதும் அரசியலில்
உயர்வு தரும்-புது மொழி 

பலநாள் திருடன்
ஒருநாள் அகப்படுவான் -பழமொழி 

அகப்பட்டாலும் அடுத்த நாள்  ஜாமீனில்
வெளிவந்துவிடுவான் -புதுமொழி 

கரும்பு தின்னக் கூலியா?(பழமொழி)

கரும்பு தின்னால் கூலி தரவேண்டும்
நீரிழிவு நோய்க்காரர்கள் (புதுமொழி)

வைத்தியனுக்கு கொடுப்பதை
வாணியனுக்கு  கொடு  -பழமொழி.

வாணியனுக்கு  கொடுப்பதை
வைத்தியனுக்கு கொடு (புதுமொழி)

pic-courtesy-google images 

தீபாவளி சிந்தனைகள்

தீபாவளி சிந்தனைகள்




மற்றவர்கள் பட்டாசு வெடிப்பதற்கு
தங்கள்  கையில் உள்ள
காசைக் கொடுக்கவேண்டும்.



பட்டாசு தயாரிப்பவர்கள்
பட்டாசு தயாரிக்க பிழைப்புக்காக தங்கள்
உயிரையே கொடுக்க வேண்டியிருக்கிறதே !



ஒளியைச் சிந்தும் வாணங்கள்
காண்போர் மனதில் ஊட்டும் உவகை
அதிலிருந்து எழும் புகையோ
வானில் முட்டி ஓட்டை போடும்
நம் உயிரைக் காக்கும் காற்றுப்படலத்தில்



சர  வெடிகளின் ஒலியோ
காதை  பிளக்கும்
ஏற்கெனவே கைபேசியினால்
அரைச் செவிடாய்ப்
போன மானிடம்  முழுசெவிடாய்
போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை



வயிறுமுட்ட பலகாரங்கள்,
இனிப்புக்கள் தின்பார் மக்கள்



அதை சீரணிக்க லேகியமும்
கணக்கின்றி மாத்திரை வில்லைகளையும்
ஜெல்களையும் உள்ளே தள்ளி
ஏப்பம் விடுவார்கள்  "உணவே மருந்து
மருந்தே உணவு" என்ற
தொலைகாட்சி தொடரைப் பார்த்துக்கொண்டே



புத்தாடை உடுத்தி இன்பம் காண்பார்
புதுமணத் தம்பதிகள்

பொன்னகைகள் பூட்டிய நகைகளோடு
முகத்தில் புன்னகை பூக்க
பூவையர்கள் வலம்  வருவார்.



வெடியினால் வேடிக்கையும் உண்டு


வாடிக்கையான விபத்துக்களும் உண்டு



காண்போர்க்கு இன்பமும் உண்டு
விபத்தினால் வாழ்வும் இன்பமும்
இழந்து அல்லல்படுவோரும் உண்டு
இந்த அவனியிலே

இன்பம் துன்பமும் இணைந்ததுதான்
இவ்வுலக வாழ்க்கை

இருளை ஓட்டும்
ஒளித்திருநாளே  நீ வாழி.!



ஒளியாய் உறையும் இறைவனை
உணர்த்தும் தீப ஒளித்திரு  நாளே
நீ என்றென்றும் வாழி!

pic.courtesy-google images

தீபாவளி சிரிப்பு

தீபாவளி சிரிப்பு 

காமடியில் ஒரு காமடி 


தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 





ஒளி இருளை அகற்றுகிறது
ஒலி  இன்பம் தருகிறது.

அகல் விளக்கில் ஏற்றும் தீபம்
ஒளி தருகிறது .இருளை ஒட்டுகிறது

வெடிகள் ஒளியையும் ஒளியையும்
சேர்ந்து தந்து நம்மையெல்லாம்
மகிழ்விக்கின்றன

ஒளியாயும் ஒலியாயும் இருக்கும்
இறைவனை வணங்கி அனைவரும் அன்போடு
அனைத்து  அறியாமையும் நீங்கி இன்புற்று வாழ்வோம். 

செவ்வாய், 29 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (8)(வீரமங்கை ராணி துர்காவதி)

நர்மதை பெற்ற நகர் (8)

நர்மதை பெற்ற நகர் (8)(வீரமங்கை ராணி துர்காவதி)


 வீர மங்கை ராணி துர்காவதி 
போரில் மட்டுமல்ல நிர்வாகத்திலும் மட்டுமல்ல 
,புலவர்களை ஆதரிப்பதிலும் அவளுக்கு
 யாரும் நிகரில்லை என விளங்கினாள் 

அவளது அரசவையை கோக்மகாபாத்ரர்
,நர்வர்   முதலிய கவிஞர்கள்  அலங்கரித்தனர். 


ஒரு கவிதையால் மனம்  கவரப்பட்ட 
இந்த ராணி அந்த கவிதையை இயற்றிய கோக்மகாபாத்ரர் என்ற கவிஞருக்கு ஒரு கோடி  ரூபாய் பரிசு அளித்தாளாம் .!



சுமார் 15 ஆண்டுகள் கோண்ட்வானா என்ற 
இந்த பிராந்தியத்தை ஆண்டுவந்த துர்காவதி மீது 
பொறாமை கொண்டார் டில்லி பாதுஷா அக்பர் சக்ரவர்த்தி. 

நூல் நூற்கத்தான்  பெண்கள் லாயக்கு 
தகுதி உடையவர்கள், அரசாள தகுதியற்றவர்கள் 
என்ற கருத்து அவருக்கு. அரசியை ஏளனம் 
செய்யும் வகையில்  ஒரு தங்கத்தால் செய்த 
கைராட்டை ஒன்றை அனுப்பிவைத்தாராம். 


களம் பல கண்ட இந்த வீரப் பெண்மணி 
இதைக் கண்டு அஞ்சவும் இல்லை 
,மனம் தளரவும் இல்லை 

துப்பாக்கி ஏந்தும் தன் இரு கரங்கள் 
துர்பாக்கியவசத்தால் இராட்டையில் நூல்
நூற்க முற்ப்பட நேரிடின் அச்சமயம் நூலுக்கு
 வேண்டிய பஞ்சை அடித்துக் கொடுக்கும் 
முதல் கூலியாளாக அந்த அக்பர்தான் 
இருக்கமுடியும்  என்ற கருத்தில் 
தங்கத்தினால் பஞ்சு அடிக்கும் வில்
 ஒன்றைத் தயாரித்து  அக்பர் சக்ரவர்த்திக்கு 
அனுப்பிவைத்தாளாம் 



என்னே அவள் நெஞ்சுறுதி!
என்னே அவள் வீரம்!

இப்படிப்பட்ட வீர பெண்மணிகள் 
வாழ்ந்த நாட்டில் பெண்கள் கோழைகளாக, 
ஆண்களின் போகப்பொருளாக, 
நெஞ்சில் உரமின்றி தன்னைக் கூட 
பாதுகாத்துக்கொள்ள தகுதியற்ற நிலைக்கு 
தள்ளப்பட்டு விட்டதை நினைத்தால்
 மிகவும் வருத்தமாக உள்ளது

.புராணங்களில் பல கொடிய அசுரர்களை 
கொன்று குவித்த நம் தெய்வங்கள் பல
 பெண் தெய்வங்களே.

மேலை நாட்டு நுகர்வோர் கலாச்சாரத்தை 
பின்பற்றிஅதற்க்கு அடிமையாகி  நம் நாட்டு வீர மரபுகளை 
அறிந்துகொள்ளாமல் போனதால் 
வந்ததுதான் இந்த கேடு. 

இன்று எதற்கெடுத்தாலும் ஊடகங்களை நம்பி 
பெண்கள்  அசிங்கப்பட்டுகொண்டு 
இருப்பதைப் பார்த்தால்
வேதனையாக உள்ளது. 

ஊடகங்கள் அவர்களின் அந்தரங்க பிரச்சினைகளை விளம்பரம் செய்து காசு பார்ப்பதில்தான் குறியாக உள்ளன. அவர்களை சகோதரிகளாக, அன்னையாக ,ஏன் ஒரு மனித உயிராகக் கூட மதிக்கசமூகத்தில் உள்ள மக்களின் மனதில் நல்ல  சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதத்தில் செயல்படாமல் உள்ளது மிகவும் வருந்தத்தக்க விஷயம். 

அடுத்து என்ன நடந்தது ?

(இன்னும் வரும்)

திங்கள், 28 அக்டோபர், 2013

இப்படியும் நடக்கலாம்

இப்படியும் நடக்கலாம் 



என்ன டாபெர்மன்  எப்படீருக்கெ ?
இது  என்ன புது கெட்டப் ?
ஏன்  இவ்வாறு மாறினாய்?














என்னை இனிமேல் நீ டாபெர்மான்ன்னு கூப்பிடக்கூடாது .பபெல்லொவ் டாக் தான் கூப்பிடணும் 












சுத்த தமிழ்ல சொல்லன்னுன்ன்னா 
எருமாட்டு நாயே  என்று மனிதர்கள் அழைப்பதுபோல் கூப்பிடவேண்டும். 

நவராத்திரி விழாவில் ரெண்டு பேரும்தாம்  புலி வேஷம் கட்டினோம். எம்முதலாளி காசை தேத்திக்கொண்டு  என்னை துரத்திவிட்டார்.

 சாலைக்கு வந்தால் நம்ம இனம் ஜனத்தொகை பயங்கரமாக பெருகிவிட்டதால் சோத்துக்கே லாட்டரி அடிக்கும் நிலைமைக்கு போய்விட்டது.

ஒரு எச்சில் இலை விழுந்தால் 20 பேர் வந்து விழுகிறான்.
தெருவு தெருவு சங்கம் வச்சிருக்காங்க ;எங்கே போனாலும் துரத்திடிக்கிறாங்க .இனிமே இப்படிப்பட்ட நாய்ப் பொழப்பு வேண்டாம்ம்ன்னு முடிவு பண்ணினேன் 

எனவே ஒரு  டாக்டரிடம் சொல்லி வைத்திருந்தேன்
எனக்கு எருமைத் தலை வேண்டுமென்று. 

சாலை  விபத்தில் அடிபட்டு இறந்த 
எருமைக் கன்றின் தலையை வைத்து 
ஆபரேஷன் செய்துவிட்டார்.

இப்போது  நிம்மதியாக இருக்கிறேன். 
வயிறாக புல்லை  மேய்கிறேன்.
எந்த நாயும் என்னை 
தொந்தரவு செய்வதில்லை.
நம்மை கண்டாலே அலறி ஓடுதுங்க. 

இதற்கா நான் பிறந்தேன்?


இதற்கா நான்  பிறந்தேன்?

இலையின் மூலம்

முற்றிய விதை முளைவிட்டு
மண் பிளந்தது-
இலையாம் துளிரின்
இனிய பிறப்பு !



"இதற்கா நான்  பிறந்தேன்?
என்றது இலை.

"இல்லை" என்றதோர் குரல்

துளிர் பெருகி
செடியெனப்பரிணமித்து
தென்றலில் தலையசைக்கும்-



"இதற்கா நான்  பிறந்தேன்?
என்றது இலை.

"இல்லைஇல்லை...
இன்னும் இருக்கிறது .."
என்றது குரல்!

செடியும் வளர்ந்து செழிப்பாகி
தண்ணிழல் மரமாய்
தலை உயர்த்தும்..



"இதற்கா நான்  பிறந்தேன்?
என்றது இலை.

"இல்லை என்றது குரல்
"இன்னும் இருக்கிறது,பொறு "

சலித்து பழுத்த இல்லை
சருகாகி உதிர்கையிலே " ச்சீ ,
"இதற்கா நான்  பிறந்தேன்?
இப்போதாவது சொல் குரலே.."
என்றது ஏக்கமாய்



"ஆமாம் ,ஆமாம்
இதற்க்குதான் பிறந்தாய்
சருகாய் உதிரத்தான்
சகத்திலே நீ உதித்தாய்..

"இல்லை"என்பதன்
குருக்கந்தானே இல்லை?



ஒ,இலையே! நீ இல்லை.
ஆம் நீ -இது இல்லை.."
என்று தொடர்ந்த குரல்
இப்படி முடித்தது .




"சருகாகி உதிர்வதர்க்குச் சற்றும் வருந்தாதே நீ-
இலையும் இல்லை சருகும் இல்லை
இனி  வரும் வளர்ச்சிக்கான உரம்

இந்த அருமையான கவிதைக்கு சொந்தக்காரர் 
கவிஞர் அமுத பாரதி. 1995ஆம் ஆண்டு ஓம் சக்தி இதழில் வெளிவந்தது