ஞாயிறு, 21 அக்டோபர், 2012

கீதையை புரிந்துகொள்ளுங்கள்(பகுதி-4)


கீதையை 
புரிந்துகொள்ளுங்கள்(பகுதி-4)

இந்த உலகில்
நாம் வாழும் காலம்
எவ்வளவு என்பதை
நம்மை படைத்தவனே அறிவான்

ஏனென்றால் கருவிலேயே அழிந்துபோகும்
வாய்ப்புக்கள் இந்த காலத்தில் அதிகரித்துவிட்டன

பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டுபிடிக்கப்பட்டு
இந்த உலகத்தில் பிறவி எடுக்கவிடாமல் செய்ய
அந்த கருவை கொடுத்த கணவனும்
அதை பெற்றுக்கொண்ட பெண்ணும்
பெண் சிசுவென்று தெரிந்தால் பிறக்கபோகும்
அந்த பெண்குழந்தையை வெறுக்க தொடங்கி
அதை கருவிலேயே அழித்துவிடுகின்றனர்

அதனால் அந்த பெண்ணின்
உடல் நலமும் பாதிக்கப்படுகின்றது .

அதையும் மீறி அந்த பெண் குழந்தை இந்த உலகத்திற்கு
வந்துவிட்டால் அந்த தாயும் மற்றவர்களும்
ஈவிரக்கமின்றி அந்த பச்சிளம் சிசுவை மரண உலகத்திற்கு அனுப்பிவிடுகின்றனர்.

உலக முழுவதும் இந்த நிலைமை
பரவலாக காணப்படுகின்றது.

அப்படி பிறந்தாலும் அந்த பெண் குழந்தைகளுக்கு
ஆண்கள் இழைக்கும் அநீதிகள் ஏட்டிலடங்கா

தற்காலத்தில் பெண்கள் ஆண்களைவிட
பெண்களுக்கு அதிக அளவில்
அநீதிகள் இழைக்கின்றனர்.

இதனால் உலகில் பல நாடுகளில்
பெண்கள் தொகை ஆண்களின்
மக்கள் தொகையை விட குறைந்துவிட்டது.

அதனால் பெண்களுக்கு அளவுக்கதிகமாக
 பல சலுகைகளை சில நாடுகள் அளித்துள்ளன

.பல நாடுகளில் பெண்கள் பலவிதமான
அடக்குமுறைகளுக்கு ஆளாக்கி ஆளாக்கி ஒடுக்கி
வீட்டிற்குள்ளேயே  முடக்கி வைக்கப்படுகின்றனர்.

அதை எதிர்க்கும் ஒரு சிலர் கொடூரமான
முறையில் கொல்லப்படுகின்றனர்.

அதனால் பெண்கள் ஆண்களை
விட பலவிதமான திறமைகளை பெற்றிருந்தும்
அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி
என்பது கனவாகவே இருக்கிறது.

இறைவன் படைப்பில்
ஆணும் பெண்ணும் சமமே
அப்படியிருக்க ஏன் இந்த பாகுபாடு ?

உலகம் தோன்றிய நாள் முதல்
இந்த பாகுபாடு நிலவி வருகிறது.
தற்போது பலமடங்கு அதிகரித்துவிட்டது.

எந்த வீட்டிலோ அல்லது நாட்டிலோ
 பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்களோ அல்லது கொடுமைபடுத்தப்படுகிறார்களோ அந்த சமூகம்
நாகரீகமான ,வளர்ச்சியடைந்த
நாடாக கருதப்படமாட்டாது (இன்னும் வரும்)

2 கருத்துகள்:

  1. கல்வியால் முன்பை விட கொஞ்சம் மாறி வருகிறது... மாற வேண்டும்... அப்படி நடந்தால் தான் முடிவில் தாங்கள் சொன்னது போல நடக்கும்... நடக்க வேண்டும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போதுள்ள கல்வி முறையால்
      எந்த மாற்றமும் நிகழபோவதில்லை

      கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற
      என்னுடைய இடுகையில் தெரிவித்துள்ளபடி
      மாற்றங்கள் கொண்டு வந்தால்தான்
      உண்மையான மாற்றங்கள் நிகழும்.

      அதற்கு மதவாதிகளும்
      அரசியல்வாதிகளும்
      வழி விட மாட்டார்கள்

      நீக்கு