திங்கள், 22 அக்டோபர், 2012

கீதையை புரிந்துகொள்ளுங்கள்(பகுதி-5)

கீதையை
புரிந்துகொள்ளுங்கள்(பகுதி-5)

எது நடந்ததோ 
அது நன்றாகவே நடந்தது. 

கீதாசாரம் என்று அச்சிடப்பட்ட இந்த அட்டையை
பல பேர்கள் தங்கள் வீட்டிலும்,கடைகளிலும்,
பணி  புரியும் மேஜை மீதும் வைத்திருக்கிறார்கள்

ஆனால் அதில் உள்ள வரிகளை படித்து
அதை உள்வாங்கிக்கொண்டு
தன வாழ்க்கையில் அதை கடைபிடிக்க
முயற்சி செய்கிறார்களா என்பது கேள்விக்குறியே

ஏனென்றால் மனிதனில் மனதை
ஆக்கிரமித்துள்ளவைகள்
பல கோடி விஷயங்கள்

சினிமா, அரசியல்,ஆன்மீகம்,மூட நம்பிக்கைகள் ,
சொந்த பிரச்சினைகள், வீட்டு பிரச்சினைகள்,
நாட்டு பிரச்சினைகள்,  என அவன் மனதில்
அவனை பற்றி சிந்திக்க விடாமல்
அவனை 24 மணிநேரமும் அவனை ஆட்டி படைக்கின்றன.

எப்போதும் அவன் மனம் அவனுக்கு
புறம்பாக உள்ள மனிதர்களின் வாழ்க்கையை பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறது

அவன் அவனுடைய பிரச்சினைகளை பற்றி
கண்டுகொள்ளாமல் ஊர் பிரச்சினைகளை
பற்றியே கவலைப்பட்டு கொண்டு இருக்கிறான்

சொந்த பிரச்சினையையே தீர்த்துக்கொள்ள
வக்கில்லாத அவன் தன்னால் ஒன்றும்
செய்ய  இயலமுடியாத வெளி பிரச்சினைகளை
தன் மனதில் விட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறான்

இந்த சூழ்நிலையைத்தான்,அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும்,,திரைப்பட துறையினரும் ,பல மோசடி மன்னர்களும்,ஊடகங்களும் ,ஏமாற்றுக்காரர்களும் அவனை தங்கள் வலையில் சிக்க வைத்து காசு பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது
இந்த உலகம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்த உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறது
மேலும் அது சூரியனையும் ஒரு தடவை
ஒரு நாளில் ஒரு சுற்று சுற்றி விடுகிறது.

எரிமலைகள் உலகில் எங்காவது
ஒரு மூலையில் வெடித்து சிதறிக்கொண்டே இருக்கின்றன
புயல்,வெள்ளம்  தீவிபத்து,போர் என்று
ஏதாவது நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன

ஒரு புறம் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கின்றன,ஒருபுறம் மடிந்துகொண்டிருக்கின்றன.

ஒருபுறம் மரணத்தின் வாயிலிருப்பவர்கள்
மருத்துவர்களின் துணையால் பிழைத்துக்கொள்ளுகிறார்கள்
மறுபுறம் நோயினால் மக்கள் ஆயிரக்கணக்கில் இறக்கிறார்கள்

மற்றொருபக்கம்  மக்கள் சண்டையிட்டு கொண்டு
ஆயிரக்கணக்கில் மாண்டு போகிறார்கள். .

இவைகளெல்லாம் நம்மால் தடுக்க முடியுமா
என்றால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது .
இவைகளை நாம் வெறுமனே வேடிக்கை தான் பார்க்க இயலும்.
ஏதோ  ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுகளை வேண்டுமானாலும்
சிலர் தடுக்க நினைக்கலாம் அல்லது மாற்ற முயலலாம்.
ஆனால் அதெல்லாம் வீண் செயலே.

இந்த உலகத்தை படைத்து காத்து,மீண்டும்
தனக்குள்ளே இழுத்துக்கொள்ளும் ஒரு மகா சக்தி செயல்படுத்தும் நிகழ்வுகளில் ஒரு பொருட்டாகவே கருதமுடியாத நிலையில்
உள்ள நாம் இந்த நிகழ்வுகளை மாற்ற முயல்வது அறிவீனம்.

அதனால்தான் இந்த உலகத்தில் எது நிகழ்கிறதோ
அது நன்றாகவே நடந்தது என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் எரிமலை  வெடித்துசிதறுவதால்தான் அனேக தீவுகள் உண்டாயின,அதில் மரங்களும் செடி கொடிகளும், உயிரினங்களும் உண்டாயின 

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம் 

ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்பு ஒரு மாற்றம், 
முன்னேற்றம்  நிச்சயம் உண்டு என்பதை உணர்ந்தவர்கள்
மனம் அமைதியாய் இருக்கும் அலைகடலின் அலைகள்போல் அலைந்துகொண்டிருக்காது. . (இன்னும் வரும்) 

2 கருத்துகள்: