கீதையை
புரிந்து கொள்வோம்(பகுதி-2)
மரணம் என்ற சொல்
அப்படி என்ன பாவம் செய்தது?
பாவத்தின் சம்பளம்
மரணம் என்கிறார்கள்?
புண்ணியம் செய்பவர்களுக்கு
மரணம் இல்லையா?
பாவம் செய்தாலும் புண்ணியம் செய்தாலும்
மனிதர்களுக்கு மட்டுமல்ல
எல்லா உயிர்களுக்கும்
மரணம் நிச்சயம் உண்டு.
ஆனால் எந்தனை முறை பிறந்து
எத்தனை முறை மடிந்தாலும்
இந்த உடலுக்குத்தான் மரணம் , என்பதை
பகவானும் பலமுறை சொல்லிவிட்டான்
அவன் கூறியதை விளக்க வந்த கணக்கற்ற
ஞானிகளும் சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.
ஆனால் மனித குலம்
எதையும் கவனிப்பது கிடையாது
திரும்ப திரும்ப கீறல் விழுந்த
கிராமபோன் ரெகார்ட் போல்
சொன்னதையே மக்கள் சொல்லிகொண்டிருக்கிறார்கள்
ஒருவர் இறந்தால் அவரின் உடலுக்கு
மரியாதைகள் செய்ய சில ஆயிரங்களிருந்து
பல லட்சங்கள் வரை வீணடிக்கிறார்கள்
துக்கப்படுவது போல் நடிக்கிறார்கள்.
இவையெல்லாம் தேவையற்ற செயல்
பெயரிட்டு அழைத்தவனை
பிணம் என்று பெயரிட்டு என்று
அழைக்கிறார்கள்என்கிறார் திருமூலர்
இறந்தவன் எவ்வளவு
பெரிய பதவி வகித்த வனானாலும்
செல்வந்தனானாலும் அவன் மதிப்பு அவ்வளவுதான்.
ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்திருந்தும்
யாரும் அதை சட்டை செய்வதில்லை
கடவுள் எல்லா இடத்திலும்
நீக்கமற நிறைந்திருக்கிறார்
அதைப்போல் மரணமும் எல்லா இடங்களிலும்
எல்லா நேரமும் நாம் இந்த உலகில்
தாயின் வயிற்றில் கருவாக
ஒரு உடலில் புகுந்தவுடன் அதுவும்
நம்மோடு குடியேறுகிறது .
அது ஒவ்வொரு கணமும்
நம்முடைய உடலில் அணுக்களை
கொன்று கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் புதிய அணுக்கள்
தோன்றிக்கொண்டே இருக்கின்றன
நம் குழந்தையாக வெளி வருகிறோம் .
சில வருடம் கழித்து நம் குழந்தை உருவம்
மரணமடைத்து அதிலிருந்து பாலகன் உருவம்,
அதுபோல் வாலிப உருவம் என்று புதிது புதிதாக தோன்றிக்கொண்டிருக்கின்றன.
எப்போது நம்முடைய உடல் வளர
தொடங்குவதைநிறுத்த தொடங்குகிறதோ
அப்போதுதான் மரண பயம் நம்மை
பற்ற தொடங்குகிறது.
ஆனால் சில மக்கள் மரணத்திற்கு
பயப்படுவதில்லை
அது எப்படி ? (இன்னும் வரும்)
/// எப்போது நம்முடைய உடல் வளர தொடங்குவதை நிறுத்த தொடங்குகிறதோ அப்போதுதான் மரண பயம் நம்மை பற்ற தொடங்குகிறது. ///
பதிலளிநீக்குஉண்மை... தொடர்கிறேன் ஐயா...
நன்றி...