செவ்வாய், 2 அக்டோபர், 2012

ஒரு சொல்-ஒரு வில்-ஒரு இல்

ஒரு சொல்-ஒரு வில்-ஒரு இல் 
என்ற வரிகளை சில பேருக்கு 
தெரிந்திருக்கலாம் 

பல பேருக்கு தெரியாது 
இந்த வரிகள் யாரை குறிக்கிறது என்றால் 
ராமாயண காவிய நாயகனான 
ஸ்ரீ ராமபிரானை தான் குறிக்கிறது 

ஒவ்வொரு நல்ல பண்பிற்கும் 
ஒரு வடிவம் உண்டு 

அந்த பண்புடன் திகழும் 
ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் உண்டு 

செல்வத்திற்கு இலக்குமிதேவி 
அவள் பாலை கடையும்போது வெண்மையான்
வெண்ணைதோன்றியதுபோல் பாற்கடலை கடையும்போது 
தாமரை மலரில் அமர்ந்தவாறு வெளிப்பட்டாள் 

அதன் தத்துவம் என்ன வென்றால் 
நம் மனதில் எப்போதும் 
தீமைகளையே நினைத்துக்கொண்டு 
சுயனலபோக்குடன் வாழும் அசுர சக்திகளும் 
எப்போது உலகிற்கு நன்மைகளையே செய்துகொண்டு 
எப்போதாவது ஆசைகள் வயப்படும்போது மட்டும்
தீமைகளை செய்யும் தேவ சக்திகளும் 
ஒன்றுக்கொன்று போராடிகொண்டிருக்கின்றன .

அலைகடலில் தோன்றிய அலைமகள் 
இரண்டு சக்திகளுக்கும் உறுதுணையாக இருப்பவள்

அதனால்தான் இன்றும் உலகில் தீவிரவாதிகள்
கையிலும் கணக்கற்ற செல்வம் இருக்கிறது,
உலகத்திற்கு நன்மையை செய்யும் 
வள்ளல்களிடமும்  செல்வம் இருக்கிறது. 

தீவிரவாதிகள் கையில் உள்ள செல்வம் 
பிறருக்கு துன்பம் இழைக்க பயன்படுகிறது

வள்ளல்களிடமும், நல்லவர்களிடமும் இருக்கும் செல்வம்
பிறருக்கு நன்மை செய்யவும்,பிறர் படும் துன்பங்களை 
துடைக்கவும் பயன்படுத்தப்படுகிறது 

இதைதான் வள்ளுவரும்  நன்மையையும்  தீமையும்
அதை புரிகின்றவர்களின் நோக்கத்தால் வெளிப்படும் 
என்று கூறியுள்ளார். 

நல்ல எண்ணங்கள் உடைய மனிதர்களிடமிருந்துதான் 
நல்ல செயல்களை எதிர்பார்க்கமுடியும்.

தீய எண்ணங்கள் உடையவர்கள் தீய செயலைத்தான் 
செய்ய இயலும் . (இன்னும் வரும்) 

2 கருத்துகள்:

  1. /// நல்ல எண்ணங்கள் உடைய மனிதர்களிடமிருந்து தான் நல்ல செயல்களை எதிர்பார்க்கமுடியும். ///

    இது போல் பல கருத்துக்களுக்கு நன்றி ஐயா...

    எதிர்ப்பார்ப்பு --> அவசரம் --> ஏமாற்றம் --> பொறுமையின்மை --> சின்னதாக எரிச்சல் --> பயம் --> கோபம் --> பொறாமை --> பழி வாங்கும் எண்ணம் --> பேராசை --> கெட்ட பழக்கம் (குடி, புகை, சூது, இன்னும் பல) --> மனச் சோர்வு --> கெட்ட பழக்கம் தினமும் வழக்கமாகுதல் --> அடுத்தவர்களை கஷ்டப்படுத்துதல் --> பொறுப்பின்மை --> பிடிவாதம் --> மதிப்பு குறைதல் (வீட்டிலும் வெளியிலும்) --> எதற்கும் கவலைப்படாமை --> பணம் குறைதல் --> பொய் பேசுதல் --> கடன் வாங்குதல் --> ஏமாற்றுதல் --> இன்னும் பல கெட்ட குணங்கள் --> உடல் நலம் குறைதல் --> திடீர் மரணம் --> குடும்பம் ???

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.DD
    மனிதனை படுகுழியில் தள்ளும்
    குணங்களை அழகாக பட்டியலிட்டுவிட்டீர்கள்.
    சேர வேண்டியவர்களுக்கு போய் சேர்ந்தால் நல்லது.
    கண்டும் காணாமல் போனால்
    நாம் என்ன செய்யமுடியும் ?

    மனிதனின் முதல் எதிரியே காமம்தான்
    மற்றவை எல்லாம் எல்லாம் காமம் என்ற
    பன்றி போடும் எண்ணிலடங்கா குட்டிகள்

    காமம் வயப்பட்டவன் குட்டிகளையும்
    புட்டிகளையும் தேடுகிறான்

    மட்டிபோல் வட்டிக்கு கடன்வாங்குகிறான்

    கசாப்புகடைகாரன் ஆடுகளை வெட்டும் முன்பு
    அதற்க்கு புல்லை போடுவான் .

    அடுத்த கணம் வரும் மரணத்தை அறியாத ஆடுகள்
    மகிழ்ந்து புல்லை தின்னும்

    அதைபோல்தான் மனிதர்களும்
    மதி மயங்கி ஏமாற்றுக்காரர்கள் தரும் புல் போன்ற சில
    அன்பளிப்புகளை பல்லைஇளித்து பெற்றுகொண்டு
    கையில் உள்ள மொத்த காசையும் இழந்து நிற்கின்றனர்.

    ஆடுகள் தன் பக்கத்தில் உள்ள ஆட்டை வெட்டுவது கண்டும்
    ஒன்றும் செய்யாது அடுத்த வெட்டு தன் தலைமேதான்
    விழுமென்பதையறியாது நிற்கும்.

    மனிதர்களும் மற்றவர்கள் ஏமாறுவதை
    பலமுறை கண்ணுற்றும் மதி மயங்கி
    பேராசை வயப்பட்டு ஏமாறுவது
    தினசரி செய்தியாகிவிட்டது

    பகுத்தறிவுள்ள மனிதரும்
    பகுத்தறிவில்லாத மிருகங்களும்
    இன்று ஒன்றாகிவிட்டனர்
    பல விஷயங்களில்

    பதிலளிநீக்கு