புதன், 28 மே, 2014

இன்றைய கல்வியும் அரசியலும்.

இன்றைய கல்வியும் அரசியலும். 

இன்றைய கல்வி  முறையும்,
அரசியலும்  எதை நோக்கி செல்கிறது?

பள்ளிக்கு போவதே  காசு பண்ணத் தான்
என்ற நிலையை நோக்கித்தான் செல்கிறது இன்றைய கல்வி

பொது சேவை செய்வதாக கூறிக்கொண்டு
அரசியலுக்கு வருவதே காசை அள்ளத்தான்.

ஒழுக்கம் கற்றுத் தரப்படுவதில்லை
ஒழுங்கும் கற்றுத் தரப்படுவதில்லை.

மனதை ஒருமைப்படுத்தும்
பயிற்சிகள் இல்லை

தோல்வியை ,துன்பங்களைத்
தாங்கும் மன உறுதி பயிற்சியும்
கற்றுத் தரப்படுவதில்லை.

அதனால் பள்ளியில் பாடத்தில்
குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ தேர்வில்
தோற்றுப்போனாலோ தற்கொலை செய்து கொள்கிறான்.

பெற்றோர்களும் சரியில்லை ஆசிரியர்களும்  சரியில்லை  பள்ளி நிர்வாகங்களும் சரியில்லை.

மாணவனுக்கு எந்த துறையில் நாட்டம் என்பதை யாரும் கருத்தில் கொள்வதேயில்லை. அதனால்தான் இத்தனை அலங்கோலங்களும்

எதெற்கெடுத்தாலும் போட்டி. போட்டி பொறாமையில்தான் முடிகிறது. பொறாமை அழிவுக்கு வழி கோலுகிறது .

பெற்றோர்கள் நாங்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறோம். பையன் படித்து முதல் மதிப்பெண் பெறவில்லை என்றால் பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் மாணவனையும் கரித்துக் கொட்டுகிறார்கள்.

ஒரு குறிப்பிட துறையையே மொத்த பெற்றோர்களும் நாடுகின்றனர்.

அதனால்தான் கல்வி கொள்ளையர்கள் பெருகி விட்டார்கள்
பல லட்சங்களை செலவுசெய்து வெளி நாட்டில்
சில லட்சங்களை  சம்பாதிக்க ஆலாய்ப்  பறக்கிறது மக்கள் கூட்டம்.

மருத்துவப் படிப்பிற்கும், பொறியியல் படிப்பிற்கும் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்து படிப்பில் சேருகிறார்கள்.

அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும்
கடமையை செய்ய லஞ்சம் வாங்கி கொழுக்கிறார்கள்.

படிப்பில் தோற்றவர்களும், படித்து பட்டம் பெற்றவர்களும் இறுதியில் அடையும் புகலிடம் அரசியலே.

இவர்கள் இருவரும் பெரும்பாலான
மக்களை ஏமாற்றிதான் கொழுக்கிறார்கள்.

நாட்டின் முன்னேற்றம் அல்லது மக்களின் முன்னேற்றம் பின் தள்ளப்படுகிறது

மக்களின் நலம் முக்கியமல்ல

அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் முன்னேற்றிக்கொள்வதே அவர்கள் நோக்கம்.

இந்த நிலை மாறவேண்டும். 

சனி, 24 மே, 2014

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்கல்லிலே கலைவண்ணம் கல்லிலே கலைவண்ணம்
அழகிய இயற்கை சூழலின்
படைத்த கலைஞனை
பாராட்டுவோம்.

ஆதாரம்- முகநூல் 

வியாழன், 22 மே, 2014

இதுதான் இந்தியா?


இதுதான் இந்தியா?

ஆதி வாசிகளை
அவர்கள் இருக்கும்
இடத்தில்கூட நிம்மதியாக 
வாழ விட மாட்டார்கள்.

ஒரு பக்கம்  வனத்
துறையினரின் அராஜகம்

மறுபக்கம் இயற்கை வளங்களை
சுரண்டும் பன்னாடை நிறுவனங்கள்
அவர்களுக்கு துணை போகும்
அரசியல் வாதிகள்.

காசிற்காக நாட்டை
விற்கும் சுயநல பேய்கள்.

புரட்சி என்ற பெயரில் யாரையும்
நிம்மதியாக வாழவிட மறுக்கும்
தீவிரவாத குழுக்கள்.

இறைவா நீதான் நம் நாட்டை
இவர்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்.Hut of Primitive Tribes crushed by administration, hundreds homeless. Photo : Special Arrangement

வியாழன், 15 மே, 2014

மகாகவி பாரதி- அவர் துணைவியின் பார்வையில்.

மகாகவி பாரதி- அவர் துணைவியின் பார்வையில்.


இன்று உலகம் மகா கவி பாரதியைப் போற்றி புகழ்கிறது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கண்டது வறுமையும்,துன்பமுமே ஏச்சுகளும் பேச்சுகளுமே -அவரைப் பற்றி அவர் துணைவியார் செல்லம்மாள் கூறிய கருத்துக்களைப் பார்ப்போம். 


"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.


"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய இரண்டாவது உரை. 

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்தது என்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன். 

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடு ஒட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாய் இருப்பது கஷ்டம். 

கவிஞர்கள் போக்கே தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப் போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் ஒரு பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா? 

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்கு உணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவே இன்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? 

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும், அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? 

சுகமாக வாழ்வதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளில் இருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா? 

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல், தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை. 

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார். 

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை! 

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். 

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது. 

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று. 

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதி மிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார். 

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; 

ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. 

 நன்றி-

amritha varshini

                                                   
                                    


வியாழன், 8 மே, 2014

எங்கும் கலை எதிலும் கலை ரசனையுள்ளவர்க்கு !


எங்கும் கலை எதிலும் கலை 
ரசனையுள்ளவர்க்கு !

ஆரஞ்சு  பழத்  தோலை
உரித்தவுடன் வீசி எறிகிறோம்.

ஒரு கலைஞன் அந்த பழத்தை தூக்கி செல்வதுபோல் அதன் தோலை கொண்டே வடிவமைத்துள்ளான்
என்ன  அழகு பாருங்கள்.

ஆரஞ்சு பழத் தோல் தவளையாக
மாறிவிட்டது.எப்படி?

Âjö P Sábû's photo.

தர்பூசனி பழத்தில் இயற்கை காட்சியுடன்
இரு குழந்தைகள்.

Kc Decors's photo.

கண்டு ரசியுங்கள். கலைஞனுக்கு பாராட்டு தெரிவியுங்கள் கீழ் கண்டுள்ள இணைப்பில்.https://www.facebook.com/IamLakshmiRai/photos/a.404820592986326.1073741828.404819686319750/464146403720411/?type=1&theater

ஞாயிறு, 4 மே, 2014

அன்பு செய்..உலகம் உனதாகும்...

அன்பு செய்..உலகம் உனதாகும்...
பூமியில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காணொளி


https://www.facebook.com/photo.php?v=675837362475705&set=vb.363469940379117&type=2&theater

சனி, 3 மே, 2014

நானும் ஒரு ஓவியன்தான் (நீர் வண்ண ஓவியம்)

நானும் ஒரு ஓவியன்தான்  (நீர் வண்ண ஓவியம்) 

சில மாதங்களாக என் கவனம்
நீர் வண்ண ஓவியங்களின் மீது திரும்பியிருக்கிறது.

வண்ணங்களைக் குழைத்து ப்ரஷினால் வரைவது
ஒரு சுகமான அனுபவம்.

சில படங்கள் உடனே குதிர்ந்து விடும்.

சிலவற்றை நாம் நினைக்கும்படி
வரைய பல மணி நேரம் பிடிக்கும்

ஆனால் களைப்பே தெரியாது
மனம் அதிலேயே மூழ்கிவிடும்.

சுற்றுப்புறத்தைப் பற்றி
சிந்திக்கவே செய்யாது,

மனத்தைக் கட்டிப் போட  இது எளிதான வழியாக
தோன்றுகிறது எனக்கு.

படம் நம்மோடு பேசத் தொடங்கிவிடும் .
அதில் ஒரு முக பாவம் வெளிப்படும்
அப்போது அந்த படத்தை முடிவுக்குக்
கொண்டு வந்துவிடலாம்.

ஆனால் அதில் சரி செய்ய வேண்டியவை
நிறைய இருக்கும் அதைப்பற்றியெல்லாம்
கவலைப்படவேண்டியதில்லை.

நம் மனதிற்கு ஒரு திருப்தி ஏற்பட்டால் போதும்.
நம் மனதில் படம் நன்றாக வந்திருக்கிறது
என்ற எண்ணம் வந்தால் போதும்.

நம் உழைப்புக்கு பலன்
அந்த மன மகிழ்ச்சிதான்.

குறை சொல்பவர்களைப் பற்றி
கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
அது அவர்கள் சுபாவம்.

அப்படி ரசித்து வரைந்த முருகனின் படம் இதோ.


அவன் முகத்தில் தோன்றும் சிரிப்பு, அவன் எழிலாக கையில் பிடித்துள்ள வேல், அவன் காட்டும் அபயக்கரம், அவனை சுற்றியுள்ள, மயில் , அருவி, பாம்பு, சேவல். மலையின் மீதுள்ள  கோயில்.அதன் மீது  உள்ள மயில் சிற்பம். எல்லாம் எனக்கு பிடிக்கும். வானத்தில் தோன்றும் நிலவு , செடிகள். மலர்கள் இலைகள் எல்லாம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன.

ஆஹா அந்த மயிலும் சேவலும் குசலம் அல்லவா விசாரித்துக்கொண்டிருக்கின்றன.

என்ன அழகான மயில் ! முருகனோடுசேர்ந்துகொண்டு. அதுவும் மிக அழகாக தோன்றுகிறது எனக்கு

நம் மனதிலும் அந்த முருகனின் வடிவம் நிலையாய்  நின்றுவிட்டால்
மனக் கவலைகள் எது. .மரணம்தான் எது?
அனைத்தும் முடிவுக்கு
வந்துவிடும் அல்லவா  !

மற்றவர்கள் வரைந்த படங்களை ரசிப்பதற்கும், தானே  வரைந்து ரசிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை. அந்த படத்தை வரைபவ்ர்களால் மட்டும்தான் உணரமுடியும்.வெள்ளி, 2 மே, 2014

நானும் ஒரு ஓவியன் தான் (Ball point pen)

நானும் ஒரு ஓவியன் தான் (Ball point pen)


பல ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த இரண்டு 
விநாயகர் படங்கள் உங்கள் பார்வைக்கு. 

பல வண்ண பால் பாயிண்ட் பேனாக்களை 
பயன்படுத்தி படம் வரைய  ஆசை 
என்னவோ நேரமே இல்லை.
மனம் தாவிக்கொண்டே இருக்கிறது. 
 
உடல்நலம் நன்றாக இருந்தால் மனம் ஒத்துழைக்க மறுக்கிறது 
மனம் தெம்பாக இருந்தால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. 

இருந்தும் நான் விடுவதாக இல்லை. 
நூற்றுக்கணக்கான படங்களை வரைந்து 
வலையில் போட்டுவிட்டேன்.
இன்னும் போடுவேன். 
நானும் ஒரு ஓவியன் தான் (Ball point pen)

நானும் ஒரு ஓவியன் தான் (Ball point pen)


பால்பாயிண்ட் பேனாவினால் 
படம் வரைவது ஒரு தனி சுகம் 

ஏனென்றால் பென்சில் ஓவியம்போல் 
ஓவியத்தை சரிசெய்ய 
அழிப்பான் தேவையில்லை 

பலவிதமான  shades கொடுத்துபடங்களை 
அருமையாக வரையலாம். 

அதற்க்கு பிறகு அதை வண்ணம் 
தீட்டுவதும் எளிது. 

அப்படி வரைந்த ஒரு படம்.