வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

இதுதான் நம் தலைவிதி

இதுதான் நம் தலைவிதி

நம் நாடு அந்நியர்கள்
ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதுஅதற்காக பாடுபட்டவர்கள். பல  கோடி பேர்கள்.
அவர்களில் சில நூறு  பேர்களைத்தான் மக்கள் அறிவர்.
அதுவும் தற்போதுள்ள மக்களுக்கு அதுவும் தெரியாது.பல கோடி மக்கள் தங்கள் வாழ்வை இழந்தனர்,
சொந்த பந்தங்களை இழந்தனர். வசதிகளை இழந்தனர்.
இந்த நாட்டு மக்களின் சுதந்திரத்திர்க்காக.

கடலில் விழுந்த ஒருவன் முதலைக்கு பயந்து கரைக்கு வந்ததும் கரடியிடம் மாட்டிக் கொண்டானாம் என்றமுடிவில்  எதேச்சதிகாரிகளிடமிருந்து மக்களாட்சி என்னும் அரக்கர்களிடம்  மாட்டிகொண்ட நிலைமை  ஆகிவிட்டது.

நம்மை   கொள்ளை அடித்த வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியை  வாங்கி அவர்களின் பினாமிகளிடம் கொடுத்துவிட்டோம். நாம் என்றென்றும் நிரந்தர அடிமைகளாகிவிட்டோம் பலவிதங்களில்

ஆட்சி மாறியதே ஒழிய காட்சி மாறவில்லை .எல்லாம் அப்படியே இருக்கின்றன.

ஆனால் நடந்தது என்ன.?
நம் நாடு முன்னேறிவிட்டது என்கிறார்கள்  சிலர்

போரின்போது அனைவரும் ஒன்று என்கிறார்கள்.
அது ஓய்ந்தபின்  மீண்டும் நாடு முழுவதும் தினம் தினம் போராட்டங்கள்தான்ஆனால் நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மூன்று வேளையும்  வயிறார உண்ண   உணவு,இரவு தங்க இடம், கல்வி, மருத்துவ சமூக பாதுகாப்பு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.இன்று யாருக்கும் பாதுகாப்பு இல்லை

அது வசதி படைத்தவனுக்கும், அவர்கள் செய்த சதியால் எந்த வசதியும் இல்லாத பொது மக்களுக்கும்தான்.நம்அவர் நாடு சுதந்திரம்.  பெறுவதற்காக பல கோடி பேர்கள் செய்த தியாகங்கள் வீணாகிப் போய்விட்டது.

ஆட்சி செய்ய வருபவன். எதிர்ப்பவர்களை ஒடுக்க  அடக்குமுறையைக் கையாளுகிறான்அதனால் பல்லாயிரம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன அனுதினமும்.

மேலை நாட்டு  சாக்கடைக்   கலாசாரம்
நம் நாட்டின். உயரிய பண்பாடுகளை
அழித்துவிட்டது.

கிராமங்கள் அழிந்துவிட்டன. தன் சுய தேவைகளை தானே பூர்த்தி செய்துகொண்டு அமைதியாக வாழ்ந்த மக்கள் இன்று இல்லை

எல்லாவற்றிற்கும் பிறர் கையையும், அரசையும் எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடாகிவிட்டது நம் நாடு.

உழைப்பவர்கள் மிதிக்கப்படுகிரார்கள்.
சுரண்டி பிழைப்பவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.

இன்று தனி மனித ஒழுக்கமும் இல்லை .பொது வாழ்வில் உள்ளவர்களும்
ஒழுக்கம் தவறி சுயநலத்தோடு வாழ்கிறார்கள்.

விளம்பரம், ஆடம்பரம் என்பதுதான் அவர்களின் உயிர்மூச்சு.

பல நூறு முட்களிடையே பூக்கும் ஒரு ரோஜா காண்போருக்கு இன்பம்

தருகிறது

.


சண்டை சச்சரவு நிறைந்த குடும்பத்தில்
ஒரு குழந்தை பிறந்ததும் ஒரு குதூகலம் பிறக்கிறதுஅதுபோல்தான் ஆயிரமாயிரம் பிரச்சினைகள்  இருந்தாலும்  ஒரு சில  நல்ல விஷயங்கள் ஆங்காங்கே  நடைபெறுவதால் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

பென்சிலை சீவினால் என்ன வரும்?

பென்சிலை சீவினால் என்ன வரும்?பென்சிலை ஷார்பெனரில் 
சீவினால் என்ன  வரும்?
சுருள் சுருளாக மெல்லிய மரம் வரும். 

என்ன செய்வோம் அதை?

தூக்கி  போடுவோம் குப்பையில் 

ஆனால்  அதிலும் கலையைப் புகுத்தி 
அசத்தியிருக்கிறார்கள் சில கலைஞர்கள். 

கண்டு மகிழுங்கள். 
படங்கள் -நன்றி -கூகிள் 

வல்லவனுக்கு பென்சிலும் ?


வல்லவனுக்கு பென்சிலும் ?


பென்சிலால் நாம் என்ன செய்வோம்?
படம் வரைவோம். 

பென்சிலின் பின் புறத்தில் 
குண்டூசியைக்  குத்தி காது குடைவோம். 

நமக்கு பென்சிலை சீவவே தெரியவில்லை.
பலமுறை உடைந்துபோகும்.
அதிலேயே பாதி பென்சில்
காலி யாகிபோகும்.கத்தியில் சீவினாலும்
ஷார்பெனரில் சீவினாலும்
அதே கதிதான்.

பென்சிலை சீவுவதர்க்குக் கூட
பொறுமையில்லாமல்
நாம் பதட்டத்துடன் வாழ்க்கையை
தள்ளிக் கொண்டிருக்கிறோம்

பொறுமை இல்லாமையினால்
நாம் நம் வாழ்வை நாசமாக்கிக் கொள்கிறோம்

சிறிதளவு உணர்ச்சிவசப்படாமல் பொறுமையைக் 
கடைபிடித்தால் இந்த உலகம் சொர்க்கமாகிவிடும். 
நம் வசப்படும், . 

புலம்புவதை விட்டுவிட்டு 
புதியதாக ஏதாவது ஒன்றை தினமும் 
கற்றுக்கொள்ளுவோம். 

புதியதாக ஏதாவது செய்வோம். 
உருப்படலாம். 

என்ன நேர்த்தி.!
என்ன பொறுமை.
அந்த கலைஞர்களை பாராட்டுவோம். 

கீழே பாருங்கள்.
சில கலைஞர்களின்
அதிசயப் படைப்புகளை

சில உங்கள் பார்வைக்கு
நன்றி-படங்கள்-கூகிள்

வயது உடலுக்கா ? வயது மனதிர்க்கா?


வயது உடலுக்கா ?
வயது மனதிர்க்கா?

உடல் உறுதியாய் இருந்தால் 
உள்ளம் உறுதியாய் இருக்கும் 

உள்ளம் உறுதியாய் இருந்தால் 
உடலும் உறுதியாய் இருக்கும்.

ஆனால் உடல் உறுதியாய் இருந்தும் மனம் 
உறுதி இல்லை என்றால் அது அந்த உடலை 
செயலற்றதாக ஆக்கிவிடும். 

ஆனால் மனம் உறுதியாய்  இருந்தால் 
அது உறுதியற்ற உடலைக் கூட 
சக்தியுடையதாக்கிவிடும். 

எனவே நாம் எப்போதும் எந்நிலையிலும் 
நம்முடைய மனதை உற்சாகமாக 
வைத்திருப்போம். அதற்க்கு எதிர்மறை 
எண்ணங்கள் கொண்டவர்களை 
விட்டு விலகியிருக்க வேண்டும்.

அப்படி முடியாவிடில் அவர்களின் 
உளறல்களை கண்டு கொள்ளாமல் 
இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.  

முதிய வயதிலும் தன்னுடைய
ஆர்வத்தை வெளிக்காட்டும்.
காட்டும் இவரை பாராட்டுவோம்.

https://www.facebook.com/Kadhambam/photos/a.363481737044604.73807372.363469940379117/650730048319770/?type=1&theater

புதன், 26 பிப்ரவரி, 2014

மரத்தினில் வடிக்கப்பட்ட கண்கவர் சிற்பம் பாரீர்.


மரத்தினில் வடிக்கப்பட்ட 
கண்கவர் சிற்பம் பாரீர்.

அழகோ அழகு !


அந்த படைப்பாளிக்கு பாராட்டுக்கள்.

https://www.facebook.com/news321/photos/a.453214531394421.93932.453205841395290/642519405797265/?type=1&theater

திங்கள், 24 பிப்ரவரி, 2014

வாழை மரத்தில் என்ன செய்யலாம்?


வாழை மரத்தில் 
என்ன செய்யலாம்?நம் நாட்டில் விழாக்களுக்காக
வாழை மரங்களை வெட்டிச் சாய்க்கிறோம்

விழா முடித்ததும் சாலை  ஓரங்களில்
 குப்பையாய்க்  குவிக்கிறோம்.இயற்கை தரும் எல்லா வளங்களையும்
அழிப்பதே தமிழர்களின் தலையாய   பண்பாடு.

மரங்களின் ஒவ்வொரு பகுதியும்
மனிதர்களுக்கு உதவவே உள்ளன.ஆனால் நாம் எதையும்
பயன்படுத்துவது கிடையாது.
வீணடிப்பதில் நம்மை மிஞ்சுவதில்
உலகத்தில் யாரும் கிடையாது.

வாழை நாரிலிருந்து ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதை பெரிய அளவில் கொண்டு வந்தால் நம் நாட்டில் வீணடிக்கப்படும் வாழைமர பொருட்கள் அனைத்தும் பயன்படுத்தப்படும். வாழ்வில் வளம் சேர்க்கும். சுற்றுப்புற சூழல்.  மேம்படும்.

இந்தோனேஷியாவில் வாழை மரங்களை
வீணடிப்பது  கிடையாது

அதில் துளைபோட்டு மண்ணை நிரப்பி
அதில் பயிர்   செய்கின்றனர். வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை செடிகள் நன்றாக வளர்கின்றன. மகசூல் முடிந்ததும் வாழைமரம் மக்கி நல்ல  உரமாகிவிடும்.

நம் நாட்டு விவசாயிகள் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால். செலவு மிச்சமாகும், காசும் பார்க்கலாம்.
செய்வார்களா? .

ஆனால் வெட்டி கதைகள் பேசி, நேரத்தை வீணடித்து புலம்பி திரியும்
இவர்களுக்கு இதற்க்கெல்லாம் எது நேரம்?https://www.facebook.com/Kadhambam/photos/a.363481737044604.73807372.363469940379117/650139195045522/?type=1&theater

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

பெண்ணே நீ வாழ்க !

பெண்ணே நீ வாழ்க !

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம்
செய்யவேண்டும் என்றார் கவிமணி


பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்றார்
வள்ளுவர்சக்தியின் வடிவங்களாக திகழும்
பெண்ணினம் சமீப காலமாக
மேலை  நாட்டு காலாச்சாரத்தின் பிடியில் சிக்கி
போகப் பொருளாக சித்தரிக்கப்பட்டு
சகதியில் வீழ்ந்து இன்று சொல்லணா
துன்பங்களை அனுபவிக்கின்றனர்
என்பதை நினைக்க வேதனையாய்  இருக்கிறது

ஒவ்வொரு நாளும் பெண்கள் மீது
இழைக்கப்படும் குற்றங்கள், அநீதிகள்
நாளுக்குநாள் அதிகமாகக் கொண்டே போகின்றன.

வீட்டை விட்டு, பள்ளிக்கு சென்ற பெண் குழந்தைகள், வேலைக்கு சென்ற பெண்கள் பத்திரமாக வீடு வந்து சேர்வார்களா என்று கலங்காத
பெற்றோர்கள் இல்லை. வீட்டிலும் பாதுகாப்பில்லை. வெளியிலும் பாதுகாப்பில்லை

இந்நிலைக்கு காரணம் ஒழுக்கத்தை
போதிக்கும் மனிதர்களும் இல்லை
ஊடகங்களும்  இல்லை. கல்வியும் இல்லை

ஆசிரியர்களே பெண் குழந்தைகளிடம்
ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே
வருகின்ற போக்கு கவலைக்கிடமாக உள்ளது.


பெண்ணே உன் பாதுகாப்புக்கு சில கருத்துக்கள்.

பெண்ணே உன்னை போகப் பொருளாக
பார்க்கும் மோகப்பிசாசுகளை நீ இனம் காணக்
கற்றுக்கொள்ள வேண்டும்.

உன் உடலைப் பற்றி வர்ணிக்கும்
பல்லிளிக்கும் பாதகர்களை என்றும்
நம்பாதே. அவர்களை விட்டு விலகி விடு

உன்னிடம் உள்ள நல்ல குணங்களையும்
திறமைகளையும் எடுத்துக் காட்டி உன்னை
உற்சாகப் படுத்தி பேசுபவர்களுக்கும்,
உன்னை வெறுமனே பொய்யாக காரணமின்றி
புகழ்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை
அறிந்துகொள்ளவேண்டும்.

பொய்யாக புகழ்பவர்களின்  பேச்சில் மயங்கி நீ
அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிடாமல்
நீ எச்சரிக்கையாக இருக்கக்
கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆண்கள் என்றும் ஆண்கள்தான்

அவர்கள் உன்னை பெற்று வளர்த்த தந்தையாயினும்,
உடன் பிறந்த சோதரனாயினும் , நண்பனாயினும்
நீ எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும்.

காரணமில்லாமல் ஒருவன்  
உனக்காக எவ்வளவு  வேண்டுமானாலும்
ஒருவன் செலவு செய்கிறான் என்றால்
அது அவனின் தீய நோக்கத்தை
காட்டுகிறது என்பதைஉணர்ந்து 
எச்சரிக்கையாக  இருக்கவேண்டும்.

மாறாக உன் வாழ்வின் முன்னேற்றத்திற்காக
வழி வகைகளை ஏற்படுத்தி கொடுக்கின்றான் என்றால்
அதை பல பேர் முன்பு பாராட்ட வேண்டும்

காமக் கண்களோடு பார்ப்பவனுக்கும் ,
உண்மையான அன்பு செலுத்துபவனுக்கும் 
 நீ வேறுபாடு காணக் கற்றுக் கொள்ளவேண்டும்.

பெண் ஆணுக்கு கிடைத்த பரிசு என்றும்
ஆண்   பெண்ணுக்கு  கிடைத்த பரிசு என்று எவன் நினைக்கிறானோ அவனோடு நீ வாழ்ந்தால் உங்கள் இருவரின் வாழ்க்கை  மகிழ்ச்சியாக அமையும்

ஒவ்வொரு தாயும் தன்னுடைய மகனை
பெண்ணினத்தை மதிக்கவும், போற்றவும்,
உதவும்குணம் கொண்டவனாக வளர்க்க வேண்டும்.

அதுபோல தங்கள் பெண்களையும்
நல்ல பண்புகளை கற்றுகொடுத்து
அறிவுடையவளாகவும்
மன உறுதி மிக்கவளாகவும்,
வளர்க்க வேண்டும்.