நான் கவிஞனுமில்லை
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-13)
என் மனதில் பொறாமை, பேராசை,
என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
ஏனென்றால் என் மனதில் நான் படித்த
புத்தகங்களில் இருந்து பல நல்ல கருத்துக்கள்
என் ஆழ்மனதில் நன்றாக இடம் பிடித்திருந்தன
அந்த புத்தகங்களின் நாயகர்களான
பகவான் கண்ணன்,அன்னை சாரதா தேவி
மகாத்மா காந்தி , பாரதி, சுவாமி சிவானந்தர்
ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தா
ஜேம்ஸ் ஹாலன் மார்க்ஸ் ஹரேலியஸ் மற்றும்
இன்னும் எத்தனையோ சித்தர்கள்
போன்ற பலர் என் மனதில்
முகாமிட்டு அமர்ந்துகொண்டு
நான் சோர்ந்து போகும்போதெல்லாம்
எனக்கு தெம்பை ஊட்டிகொண்டிருந்தனர்
என்மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதல்
தோல்வியுற்றதும். என் பெயரை கெடுக்க
என்னை சுற்றியுள்ளவர்களை
வெளியே உள்ளவர்கள் பயன்படுத்த தொடங்கினார்கள்
நான் உடனுக்குடன் எதையும் எதிர்பாராமல்
வேலையை முடிப்பது பலரின் வருவாயை பாதித்தது.
ஒவ்வொரு அலுவலகத்திலும் கோயிலில் இருப்பதுபோல்
பரிவார தேவதைகள் இருக்கும்.
பரிவார தேவதைகளுக்கு நாம் வணக்கம் சொல்லாமல்
போனால் அவைகள் நமக்கு தொல்லைகள் தரும்.
அந்த தொல்லைகள நம்மை அழிக்காது என்றாலும்
அது தரும் தொல்லைகள் மிகவும் துன்பம் தரும்.
கோயிலில் இருக்கும் முதன்மை தேவதை
இவை எல்லாவற்றையும் கண்டும் காணாமலும் தான் இருக்கும்.
அதே சமயதில் நாம் முழுகும்போது மட்டும்
நம்மை காப்பாற்றி விடும் அல்லது அங்கிருந்து நம்மை
அப்புறப்படுத்தி அங்கே வராமலேயே செய்து விடும்.
நான் கோப்புக்களை தாமதம் செய்தால்தான்
அவர்களுக்கு காசு கிடைக்கும்
அதைக்காரணம் காட்டி உரிய நபர்களிடமிருந்து
காசை கறக்கலாம்.
அவருக்கு கொடுக்க வேண்டும்
இவருக்கு கொடுக்கவேண்டும் என்று காசை கறந்துவிட்டு
ஏதோ .கொஞ்சம் அள்ளி தெளித்துவிட்டு மீதியை சுருட்டலாம்
சில நேரங்களில் வசூல் செய்த மொத்த தொகையையும்
தேட்டை போடலாம்.
இதற்க்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
மேலும் நான் காசு வாங்கமாட்டேன்
என்று பிறருக்கு தெரியாது.
என்னை சுற்றியுள்ளவர்கள் மற்றவர்களிடம்
அவர் உங்களிடம் நேரடியாக காசு வாங்க மாட்டார்
என்னிடம் கொடுங்கள் .நான் அவரிடம்
ரகசியமாக கொடுத்துவிடுகிறேன்
என்று கூறி ஒரு கூட்டம் என் பெயரை
பயன்படுத்தி காசு பார்க்கதொடங்கியது
நான் வேலைகளை உடனுக்குடன் முடித்துவிட்டேன்
என்று மன நிம்மதியுடன் வீட்டிற்கு செல்வேன்.
அப்படி இருந்தும் என் பெயர் நாட்டில்
ரிப்பேராகி கொண்டிருக்கிறது என்பதை
நான் இன்னும் அறியவில்லை (இன்னும் வரும்)

முதல் பத்தியே போதுமே...
பதிலளிநீக்குதொடர்கிறேன்...