நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை (பகுதி-19)
so you become
என்கிறார் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன்
நம் நாட்டின் ஜனாதிபதி
அவருக்கு Philosopher Statesmen என்ற பெயரும் உண்டு
ஒரு அரசியல்வாதி தான் ஆட்சி செய்யும்
காலத்தை மட்டும்
கவனிக்கிறான்
ஆனால் ஒரு Statesmen அடுத்த
தலைமுறைக்காக சிந்திக்கிறான்
என்று சொல்வார்கள்
ஒருவன் எதிர்காலத்தில் நிம்மதியான
வாழ்வு வாழ வேண்டும்மென்றால்
அவன் நிகழ் காலத்தில் யாருடைய நிம்மதியையும்
கெடுக்காமல் இருக்க வேண்டும்
தன்னுடைய குழந்தைகள் ஒழுக்கமாக
இருக்க வேண்டுமென்றால்
அவன் ஒழுக்கமாக இருக்கவேண்டும்
தான் அனைத்து தவறுகளையும்
குழந்தைகள் முன்பு செய்துகொண்டு
தன் குழந்தைகளை அவ்வாறு செய்யாதே
என்பவன் ஏமாந்துதான் போவான்
குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை
பத்து வயதிற்குள் கற்றுகொடுத்து
விட்டோமானால் அவர்கள்
என்றும் தவறு செய்ய மாட்டார்கள்
அவனுக்கு ஒழுங்காக இருக்க
பயிற்சிகளையும்
அவனுக்கு அந்த வயதிற்குள்
அளித்து விடவேண்டும்
அந்த வாய்ப்பை பெற்றோர்கள்
தவறவிட்டு விட்டால்
அவர்களை நம் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வருவது அரிது
எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும்
அதை குழந்தைகளிடம் காட்ட மாட்டேன்
அந்த வயதிலேயே எனக்கு
அந்தந்த பிரச்சினைகளை
அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடும்
பழக்கத்தை வளர்த்துக்கொண்டேன்
அலுவலக பிரச்சினைகளை
வீட்டில் பேசமாட்டேன்.
வீட்டிற்கு வந்ததும் காலையிலும்
மாலையிலும்
பிரார்த்தனையில் ஈடுபடுவேன்
இனிய இசையை கேட்பேன்.
நிறைய புத்தகங்கள் படிப்பேன்.
மாத,வாராந்தர புத்தகங்களோ
,கதை புத்தகங்களோ அல்ல.
ஆன்மீகம் சார்ந்த மற்றும்,
சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு,
சுய முன்னேற்ற கட்டுரைகள்
ஞானிகளின் பொன்மொழிகள்
போன்றவைகளைத்தான்
நான் விரும்பி படிப்பேன்.
படித்ததில் சில வரிகளை
என் மனதில் ஆழமாக பதித்துக்கொள்ளுவேன்
அவைகள் நான் துன்பப்படும்போது
எனக்கு தெம்பை கொடுக்கும்.
அப்படிதான் DO THE best
PREPARE FOR THE WORST
என்ற வரிகளும்
என்னை எப்போதும் கவர்ந்த வரிகள்.
நம்முடைய வாழ்க்கை
எப்போதும் ஒரே மாதிரியாக போகாது
வாழ்வில் தாழ்வும்,துயரங்களும்,
இழப்பும், அவமானங்களும்,
நம்பிக்கை துரோகங்களும்,நோய்களும்
நம்மை நிலை குலைய செய்து விடும்
அவைகளை சமாளிக்க நாம்
நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டும் ,
அதற்க்கு இறை நம்பிக்கை மிக முக்கியம்.
பாரதியாரின் பாடல் வரிகள் எனக்கு
எப்போதும் ஒரு அசாதாரணமான
தைரியத்தை கொடுக்கும்
அது என்ன தெரியுமா?
எல்லாம் படைத்த இறை
நம்மையும் காக்கும்
என்ற சொல்லால் அழியும் துயர்
என்ற வரிகள்தான்
நாம் எந்த சூழ்நிலையையும்
சந்திக்க தயாராகிவிட்டால்
எதுவும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
இந்த வரிகள் இருந்த புத்தகத்தின் பெயர்
HOW TO STOP WORRYING .AND START A GOOD LIVING.
இந்த புத்தகத்தை நான் பழைய புத்தக கடையில் வாங்கினேன்
இந்த புத்தகத்தை பல நூறு முறை படித்தேன்.
அதில் உள்ள நுட்பங்களை நான் வாழ்வில் கடைபிடித்தேன்
அவைகள் எனக்கு பேருதவியாக இருந்தன.
அவைகளில் ஒன்று First list out you worries. என்பதுதான்.
அந்த முறை ஒரு அற்புதமான முறை
அனைவரும் அதை வாழ்வில் பயன்படுத்தினால்
பெரும் பயன் விளையும் (இன்னும் வரும்)
அந்தப் புத்தகம் இப்போது கிடைக்குமா ஐயா..?
பதிலளிநீக்குவலையில் கீழ்கண்ட வலை தளத்திற்கு சென்றால் அவரின் புத்தகங்களை காணலாம்
நீக்குdale carnegie புக்ஸ்
நீங்கள் புத்தகத்தின் சில பகுதிகளை இலவசமாக் படிக்கலாம் அந்த தளத்தில்
நீக்குதெளிவூட்டிப் போகும் அருமையான பதிவு
பதிலளிநீக்குபகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
நீக்குஎன்ற எண்ணத்தில் என் வாழ்க்கை பயணத்தின் சில
அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுகிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரமணி