புதன், 30 செப்டம்பர், 2015

இசையும் நானும்(58)

இசையும் நானும்(58)

இசையும் நானும்(58)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய
58 வது காணொளி
மவுத்தார்கன் இசை

மகாலட்சுமி மீது அருமையான 
தமிழ் பாடல். 

இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.

வர லக்ஷ்மி வருவாயம்மா
திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா  (வரலக்ஷ்மி)

வர லக்ஷ்மி வருவாயம்மா
திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா  ( அம்மா)(வரலக்ஷ்மி)

மணம்  வீசும் மலர் சூடி
மஞ்சள் குங்கும திலகம் அணிந்து

தினமும் உன்னை  பணியும் பாக்கியம்
தாயே தந்தருள்வாயே  (வரலக்ஷ்மி)

மங்கையர் விரும்பும் செல்வம் உனது
மங்களம் தரும் நாளிலே

எங்கும் துலங்க இன்பம் விளங்க
பெண்கள் வேண்டும் வேண்டும் வரமிதே

பொங்கும் தாமரை மீது வளரும்
பொன்னே உன் புகழ் பாடுவோம்

புனிதமான நன்னாளில்
போற்றி துதி செய்வோம். (வரலக்ஷ்மி)

காணொளி இணைப்பு FOR THE USERS WHO USE FACE BOOK- ATTENTION.PLEASE


FOR THE USERS WHO USE FACE BOOK- ATTENTION.PLEASE 


Now it's official! It has been published in the media. Facebook has just released the entry price: $5.99 to keep the subscription of your status to be set to "private". If you paste this message on your page, it will be offered free (paste not share) if not tomorrow, all your posts can become public. Even the messages that have been deleted or the photos not allowed. After all, it does not cost anything for a simple copy and paste
Better safe than sorry is right. Channel 13 News was just talking about this change in Facebook's privacy policy. Better safe than sorry. As of September 26th , 2015 at 01:16 a.m. Eastern standard time, I do not give Facebook or any entities associated with Facebook permission to use my pictures, information, or posts, both past and future. By this statement, I give notice to Facebook it is strictly forbidden to disclose, copy, distribute, or take any other action against me based on this profile and/or its contents. The content of this profile is private and confidential information. The violation of privacy can be punished by law (UCC 1-308- 1 1 308-103 and the Rome Statute). NOTE: Facebook is now a public entity. All members must post a note like this. If you prefer, you can copy and paste this version. If you do not publish a statement atleast once it will be tactically allowing the use of your photos, as well as the information contained in the profile status updates. DO NOT SHARE. You MUST copy and paste

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

எத்தனை கோடி இன்பங்கள்

எத்தனை கோடி இன்பங்கள்

எத்தனை  கோடி இன்பங்கள் 

எத்தனை  கோடி இன்பங்கள்
படைத்தாயடா இறைவா

இவ்வுலக மக்கள்
அனுபவித்து இன்புறவே (எத்தனை)

அத்தனை இன்பங்களையும்
ஒருசேர அனுபவிக்க
துடிக்குதடா என் அற்ப மனம்

நான் இவ்வுலகில் வாழும்
சொற்ப ஆயுளுக்குள்ளே  (எத்தனை)

ஓரிரு இன்பங்கள் அனுபவிக்கவே
ஓராயிரம் நேரம் அலைகின்றோம்

அடைவதற்குள் நம் குறுக்கே
வந்து நிற்குது
ஆயிரமாயிரம் தடைகளடா

அத்தனையும் கடந்து அனுபவிக்க
தொடங்கும் இன்பம் நினைவில்
இருப்பதோ  கண் மூடி
கண் திறக்கும் நேரமடா (எத்தனை)

அனைத்து இன்பங்களும்
காணும் வடிவாய் நீ அமைந்திருக்க

எண்ணி மகிழும் உணர்வாய்
அதனுள்ளேதானிருக்க

அதை விடுத்து பேயாய்
ஓயாதுழலும் என் மனமே

அவனை அன்புடனே
நினைத்து அவனோடு கலப்பதே
உண்மையான ஆனந்தம் என்பதை

அறிந்தோர் கூற கேட்டும் அமைதியின்றி
ஆசைகளின் பின்னால் அலைந்து
திரிந்து அல்லல்படுவதேனோ?

திங்கள், 28 செப்டம்பர், 2015

இசையும் நானும் (57)

இசையும் நானும்  (57)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 57 வது காணொளி

மவுதார்கன் இசை.

ஹிந்தி பாடல்- ஹாய் அப்னா தில் தொ ஆவாரா-

மிகவும் பிரபலமான பாடல்.
படம்- சொல்வா  சால்.
இசை- எஸ் .டி. பர்மன்

காணொளி இணைப்பு. 

சனி, 26 செப்டம்பர், 2015

அன்பே சிவம்

அன்பே சிவம்

அன்பே சிவம்

அன்பே சிவம் என்று ஆன்றோர்
கூறுகின்றார்.

தியாகம் என்னும் பண்பே
அவன்  குணமென்றார்

அதனால்தான் அவன் தாளை
வணங்குகிறோம்

அவன் அருளை பெற
முயல்கின்றோம்.

நிலையில்லாது திரியும்
மனதைக் கொண்டு சிலையாய்
நிற்கும் அவனில் அவனைக்
காண துடிக்கின்றோம்

அவனே உயிர்களாய் நம் எதிரே
வந்து நின்றாலும் விழியிருந்தும்

அடையாளம்  காண இயலாது
தவிக்கின்றோம்.

கைலாய மலைக்குள்
அவன் உறைகின்றான்

அருணை மலையாக நம்முன்
காட்சி தருகின்றான்.

வேங்கட மலையில் வெண்பட்டு
பீதாம்பரனாக நம் முன்னே நின்று
அருள்கின்றான்.

பழனியிலே நீ தேடும் பழம்
நான்தான் என்று நமக்கு
உணர்த்துகின்றான்.

எல்லாம் கண்டும் கேட்டும்
எதையும் அறிய இயலா மூடர்களாய்
காலத்தை கழிக்கின்றோம்
காலனுக்குள் மறைகின்றோம்.

இதயத்தில் அன்பிருந்தால் போதும் 
எல்லா உயிர்களையும் நேசித்தால் போதும் 

இருப்பதை பிறருடன் பகிர்ந்து உண்டால் போதும் 
வாக்காலும் உடலாலும் சக உயிர்களுக்கு 
தீங்கிழைக்காமல் இருந்தால் போதும் 
நம்மை கடைத்தேற்ற 
தானே வெளிப்படுவான் 
அவன்  நம் முன்னே. 

வியாழன், 24 செப்டம்பர், 2015

இசையும் நானும் (56)


இசையும் நானும் (56)

இசையும் நானும்தொடரில் என்னுடைய 56 வது காணொளி

மவுதார்கன் இசை.

பார்த்தால் பசி தீரும் படத்தில் வரும்

"பிள்ளைக்கு  தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் "

என்ற பொருள் பொதிந்த பாடல்.காணொளி இணைப்பு. 
ஒப்பில்லாத பெருமாள் !


ஒப்பில்லாத பெருமாள் !


Metal foil- engraving- byT.R.Pattabiraman 

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத 
பெருமான் ஒப்பிலியப்ப பெருமான் 

தான் பாற்கடலிலே சயனம் கொண்டிருந்தும் 
உவர் நீரினால் சூழப்பட்ட இவ்வுலகில் 
வாழும் மக்களின் நலனை என்றும் 
மறவாத கருணை உள்ளம் கொண்ட பெருமான் 

உப்பில்லாமல் வீணாகிவிடும் உணவு பண்டம் 
அந்த உப்பே நிலத்தில் வாழும் உயிர்களுக்கு 
அளவை மிஞ்சிடின் அழிவைத் தரும் என்று 
அன்றே உணர்த்தியவன் அமிர்த கலசத்தை 
கையில் ஏந்திய தன்வந்திரி பகவான் 

உண்ணும் உணவனைத்திலும் உலகை ஆளும் 
உத்தமன் உலோக  உப்புகளாக கலந்து நிறைந்து 
நமக்கு நல்லதோர் சக்தியை அளிக்கும்போது 
கூடுதலாக உப்பை உணவில் சேர்த்தல் 
உடலுக்கு நலம் தருமோ? 

நாம் உண்ணும் உணவில் 
கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்வது
நமக்கு உடல்நலத்திற்கு உகந்தது அல்ல 

உப்பு அதிக அளவில் சேர்ந்தால் 
அதிக தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதால் 
உடல் எடை கூடுவதுடன் எண்ணற்ற பிணிகள் 
நம்மை வாட்டுகின்றன என்பதை அன்றே 
உணர்த்தவே பரந்தாமன் உப்பில்லாமல்
உணவு உண்ண  வேண்டும் என்று 
உப்பிலியாப்பனாக அவதாரம் 
செய்தானோ என்னவோ!

பிணிகள் வருமுன் காத்துக்கொள்வதே 
அறிவுடையோர் செயல் 
வந்தபின் வாழ்நாள் முழுவதும் 
துன்பப்படுவதும் வருத்தப்படுவதும் 
பிதற்றி திரிவதும் 
மூடர்களின் வாடிக்கையன்றோ! 


உப்பிலாது உணவு உண்டு உயர்ந்த 
சிந்தனைகளை உள்ளத்தில் தாங்கி 
உலகைக் காக்கும் உத்தமனை 
சிந்தித்து  வாழ்வதே சீரியதோர் 
வாழ்க்கை என்று உணர்ந்தவர்கள் 
இன்பமாக வாழ்வார் என்பது சத்தியம்  

புதன், 23 செப்டம்பர், 2015

இசையும் நானும் (55)

இசையும் நானும் (55)


இசையும் நானும் (55)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 

55 வது காணொளி. 

மவுத்தார்கன் இசை 

சரித்திரம் படைத்த ஹரிதாஸ் திரைபடத்தில் எம். கே .தியாகராஜ  பாகவதரால் 

பாடப்பட்டு பிரபலமான பாபநாசம் சிவன் அவர்களால் இயற்றப்பட்ட பாடல். 

"கிருஷ்ணா.. முகுந்தா. முராரே."

பாடல்:

கிருஷ்ணா... முகுந்தா... முராரே...

கிருஷ்ணா... முகுந்தா... முராரே...

ஜெய  கிருஷ்ணா... முகுந்தா... முராரே...

ஜெய கிருஷ்ணா... முகுந்தா... முராரே...

கருணா சாகர கமலா நாயக 
கனகாம்பரதாரி ..கோபாலா..  (கிருஷ்ணா)

காளிய மர்த்தன கம்ச நிஷூதன 
கமலாயாத நயனா .கோபாலா. (கிருஷ்ணா)

குடில குந்தளம் குவலயதலநீலம் 
மதுர முரளீர்வ  லோலம் 
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம் 

கோபி ஜனமன மோகன வியாபக 
குவலயதநீலா ..கோபாலா  (கோபி)


கிருஷ்ணா... முகுந்தா... முராரே...

கிருஷ்ணா... முகுந்தா... முராரே...

ஜெய  கிருஷ்ணா... முகுந்தா... முராரே...

ஜெய கிருஷ்ணா... முகுந்தா... முராரே...

காணொளி இணைப்பு செவ்வாய், 22 செப்டம்பர், 2015

மண்ணிலே கலைவண்ணம் கண்டான் !

மண்ணிலே கலைவண்ணம் கண்டான் !மண்ணிலே கலைவண்ணம் கண்டான்.

மகேசனை மனம் கவர்
சிலையாய் வடித்தான்

விக்கினம் போக்கும்
விநாயகனை விளையாட்டாய்
அமைத்தான்.

அருள் தரும்
தெய்வ வடிவை வணங்குவோம்

அதை உருவாக்கிய
கலைஞனை போற்றி மகிழ்வோம்.நன்றி : முகநூல் இணைப்பு .

https://www.facebook.com/photo.php?fbid=744965048966194&set=a.362776143851755.1073741825.100003581189008&type=3&theater


திங்கள், 21 செப்டம்பர், 2015

எல்லாம் கண்ணனே !

எல்லாம் கண்ணனே !


எல்லாம் கண்ணனே !Metal engraving-Sri Guruvayurappan-by  T.R.Pattabiraman 

எல்லாம் கண்ணனே
எனக்கு எல்லாம் கண்ணனே (எல்லாம்)

தொல்லை மிகு இவ்வுலகில்
என்றும் துணை அவன் நாமமே (எல்லாம்)

தாயுமாய் தந்தையுமாய்
தோழனாய் தோழியுமாய்

குருவுமாய் சீடனுமாய்
நம்முடனே என்றும் இருப்பவன்

நம்பும் அடியவரின் குரல் கேட்டு
நல்லதோர் பாதையை காட்டுபவன் (எல்லாம்)

குழந்தையாய்
அவன் வடிவெடுத்தான்

குற்றம்புரிபவரை
அழித்திட முடிவெடுத்தான்

பாரத போரில் சங்கெடுத்தான்

பாரில் வாழும் மக்கள் மனதில்
குழப்பங்கள் போக்கிடவே

பகவத் கீதை என்னும்
ஞான நூல் தந்தான்  (எல்லாம்)

இவ்வுலக வாழ்வு இன்புறவே
இகபர சுகம் எல்லாம் அடைந்திடவே

அழகிய கண்ணனின்
வடிவை வணங்கிடுவோம்

அவன் காட்டிய பாதையில்
நடந்திடுவோம்  (இவ்வுலக) (எல்லாம்)

உள்ளத்தில் மாறா
இன்பம் நிலைத்திடவே

உலகத்து மாந்தர் மகிழ்ந்திடவே

தீமைகள் எல்லாம் தொலைந்திடவே

சொல்லுவோம் அவன் நாமம் என்றென்றும் (உள்ளத்தில்) (எல்லாம்)

சனி, 19 செப்டம்பர், 2015

இசையும் நானும் (54)

இசையும் நானும் (54)

இசையும் நானும் (54)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 54 வது காணொளி

மவுதார்கன் இசை. 

ஏழுமலை   வாசா
எம்மை ஆளும் ஸ்ரீனிவாசா=படம் கனி முத்து பாப்பா-
பாடலுக்கு இசை-M.S.விஸ்வநாதன்


புரட்டாசி மாத ஸ்பெஷல்

ஏழுமலை வாசா
எம்மை ஆளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீ வேங்கடசா

தாயில்லாத  பிள்ளை
இது வாயில்லாத பிள்ளை (தாயில்லாத )

சிறகில்லாத பறவை இது
தேடுதையா உறவை

அழைக்கும் முன்னே வருவாய்
நீ கேட்டதெல்லாம் தருவாய் (அழைக்கும்)

குழந்தை மனம் அறிவாய்
குறைதீர அருள்  புரிவாய் (ஏழுமலை வாசா )

அன்பு உலகை ஆளும்
அது நல்ல நினைவில் வாழும் (அன்பு)

கோபம் கொண்ட இதயம் ஒரு மிருகமாக மாறும்
மலையில் வாழும் தெய்வம் தந்தை
மனதில் வாழ வேண்டும்
பிரிந்து  வாழும் நெஞ்சம்  ஒன்று
சேர்ந்து வாழ வேண்டும்  (ஏழுமலை வாசா )

காணொளி இணைப்பு

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

எம்மை படைத்த இறைவா. உலகில் துன்பப்படும் இந்த அப்பாவி மக்களுக்கு கருணை காட்டு.


எம்மை படைத்த இறைவா. 
உலகில் துன்பப்படும் 
இந்த அப்பாவி மக்களுக்கு 
கருணை காட்டு.


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

ஆமாம் .ஒத்துக்கொள்கிறேன்.

அதற்கு அவன் இதயத்தில்
மனிதம் இருக்கவேண்டும்.

ஆனால் உண்மை நிலை என்ன? 

இந்த  உலகத்தில் உள்ள மனிதர்கள் அவ்வாறு
இருக்கிறார்களா என்பதுதான் கேள்வி

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் 
சகிப்பு தன்மை உடையவர்கள் ஏற்றுக் கொண்ட வழி. 

ஆனால் உலகில் இன்று நடப்பது என்ன ?

பிறந்த நாட்டில் உண்ண  உணவில்லை,

தாகம் தீர்த்துக்கொள்ள நீரில்லை

இருக்க இடமில்லை.

பிழைக்க வழியில்லை.

மாறாக உள்ளத்தில் உள்ளதை எடுத்து கூற உரிமையில்லை

பயமின்றி வாழ உகந்த சூழ்நிலையில்லை.

எதற்கும் பாதுகாப்பில்லை.

எவருக்கும் பாதுகாப்பில்லை

குழந்தைகளும் பெண்களும்  மத வெறியர்களிடமும், காம வெறியர்களிடமும் சிக்கி நாசமாகி போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உலகில் பல வல்லரசு  பல லட்சம் கோடிகளை  செலவு செய்து பல கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களில் நீர் இருக்கிறதா மனிதர்கள் வாழமுடியுமா என்று ஆராய்ச்சி செய்துகொடிருக்கின்றன

இந்த பச்சை துரோகத்தை என்னவென்று சொல்வது ?

நாம் வாழும் உலகத்தில் மொத்த மக்கட் தொகையில் 80 விழுக்காடுகளுக்கு மேல் பசி பட்டிநினியால் செத்துகொண்டிருக்க ,அவர்களின் வாழ்வை மேம்படுத்த யாருக்கும் நாட்டமில்லை.

மாறாக இந்த உலகில் அனேக நாடுகளின் ஆட்சி செய்யும் மனித நேயமற்ற வெறியர்களால்  இனவெறியும், ஜாதி வெறியும், ஆதிக்க வெறியும் கொண்ட மிருகங்களில் சிக்கி மக்கள் சகட்டு மேனிக்கு கொல்லப்பட்டும், இருக்கின்ற இடத்தை விட்டு துரத்தபட்டும் சொல்லொணா  துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். 

சக மனிதர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை  இரங்காரடி என்றான் பாரதி 

அவன் சொன்னது சரியாகத்தான் போய்விட்டது. இன்று.

ஏதாவது மதத்தை சார்ந்து வாழ்ந்தாலும்  எதற்கும் உத்திரவாதமில்லை. 

மற்ற மதத்தினர் கையில் சிக்கி சித்ர வதைப்பட்டு சாகத்தான் வேண்டும் அல்லது அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டுவேறு  எந்த நாட்டிற்காவது உயிர் பிழைக்க ஓடவேண்டும்.

வழியிலேயே மாண்டு போகும் கூட்டம் கோடி கோடி. 

பிழைத்தவர்களும் வேறு நாட்டில் தஞ்சம் புக முடியாமல் புற்றீசல்கள்போல் மாண்டுபோவதும், பிழைத்தவர்கள் பசி, பட்டினியாய் உயிரோடு பிணங்களாய் அலைவதும்.நெஞ்சை  உருக்குகின்றன. 

பணக்கார நாடுகளோ இந்த கொடுமைகளை செய்யும் மனித மிருகங்களுக்கு தங்கள் சுய நலத்திற்க்காக ஆயுதங்களும் உதவிகளையும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் அளித்து இந்த உலகத்தை ரண களறியாக்கி கொண்டு வருகின்றனர். 

தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தை அழித்திடுவோம் என்றான் பாரதி. 

இன்று பல கோடி மக்களுக்கு உணவில்லை, இருக்க இடமில்லை, நாடில்லை, உரிமை இல்லை.  பாதுகாப்பு இல்லை. 

நம் நாட்டில் எல்லாவிதமான போகங்களையும் உரிமைகளையும் சுகங்களையும் அனுபவித்துகொண்டிருக்கும், ஜன்மங்களுக்கும், அரசியல்வாதிகளும், மத வெறியர்களுக்கும், சுரண்டல் பேர்வழிகளுக்கும் தம்மை சுற்றியுள்ள நாடுகளில் நிலவும் இந்த கொடுமைகளை உணர நேர மில்லை. உணர்ந்தால் நம் நாட்டில் இத்தனை பிரிவினைகள் கொடுமைகள் நிகழ அனுமதிப்பார்களா?

நெஞ்சில் ஈரம்  உள்ள மனிதர்களே !
ஒவ்வொருவரும் ஒரு கண  நேரமாவது சிந்திக்கவேண்டும். எம்மை படைத்த இறைவா. உலகில் துன்பப்படும் இந்த அப்பாவி மக்களுக்கு கருணை காட்டு. அவர்கள் துன்பம் நீங்க. என்று முறையிடுங்கள். 

மனிதர்கள் ஒன்றும் செய்ய முடியாது. சுயநல பிடித்த அவர்களால் சக உயிரினங்களுக்கு  துன்பம் இழைக்க மட்டுமே தெரியும். 


வியாழன், 17 செப்டம்பர், 2015

எனக்கென்ன மனக் கவலை?


எனக்கென்ன மனக்  கவலை?

அரவணை மீது பள்ளி கொண்டு
அனைத்துயிர்க்குள்ளும் ஆன்ம ஒளியாய்
இருந்துகொண்டு காத்தருளும் அரி துயில்
கொண்ட  அரங்கனும்நினைத்தாலே தாபம் நீக்கி
இன்பம் தந்து இன்னலை போக்கும்
மயில் மீது அமர்ந்து உலகெல்லாம்
வலம்  வரும் முருகனும்

நந்தி மீதமர்ந்து ஆலமருந்தி
அண்டத்துயிர்களை காத்தருளி
களி  நடனம் புரியும்  ஈசனும்
மூஞ்சுறு வாகனத்தின்மேலேறி
மூலை  முடுக்கெல்லாம் சென்றமர்ந்து
அகிலத்து  உயிர்களை காக்கும் கஜமுகனும்

சிம்ஹ வாகனத்திலேறி நின்று
அல்லல் தரும் அசுரர்கள் கூட்டத்தை அழித்து
உலகில்  அமைதியை
நிலை நாட்டிய அம்பிகையும்நினைத்த போதே நெஞ்சகத்தில்
பல்வேறு கோலங்களில்
காட்சி தந்தருளும்  வேங்கடவனும்


கருணையே உருவெடுத்த  காமாஷியும்
எளிமையே தன் குணமாய் கொண்டு
நம்மையெல்லாம் காக்கும் கண்ணனும்

நம் போன்ற  நரர்களுக்காக  நரனாய் பிறந்து
நாடு முழுவதும் தன் திருப்பாதங்களால்
கால் கடுக்க நடந்து தீயோரை அழித்து
நல்லோரை காத்தருளிய என் அப்பன்
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும்
என் அகத்தில் எந்நேரமும் 
குடிகொண்டிருக்க 
எனக்கென்ன மனக் கவலை?

தெரிந்து கொள்ளுங்கள் -கைபேசி நினைவு அட்டை.( SD card)

தெரிந்து கொள்ளுங்கள் -கைபேசி நினைவு அட்டை.( SD card)

தெரிந்து கொள்ளுங்கள் -கைபேசி நினைவு அட்டை.( SD card)


Let's learn something - 39 How to choose right CLASS SD card and identify variants........இந்த வாரம் ஒன்றை கற்போம் - 39 எத்தனை வகை எஸ் டி கார்டுகள் உள்ளன? உங்கள் உபயோகத்துக்கு சரியான எஸ் டி கார்ட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?
இன்று மொபைல் / கணனி / டேப்ளட் மற்றும் டிஜிட்டல் கேமராவே இல்லாத மக்கள் இல்லவே இல்லை என்ற ஒரு காலத்தில் நாம் வசிக்கிறோம். இதில் எக்ஸ்ட்ர்னல் மெமரி தேவை இந்த அனைத்து உபகரனங்களுக்கும் தேவையான ஒன்று. அந்த வகையில் நிறைய பேர் எஸ் டி கார்ட் வாங்கும் போது எத்தனை எம்பி அல்லது எத்தனை ஜிபி விலை சல்லீசா கிடைக்குதான்னு மட்டும் பார்த்து வாங்குவதும் அதற்க்கு அப்புறம் இந்த எஸ் டி கார்ட்ல படம் வரலை வீடியோ வேலை செய்யலைன்னு நொந்து பல பேர் இன்பாக்ஸ் கதவை தட்டிருக்காங்க..............சோ எந்த வகை எஸ் டி கார்ட் நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டும் அதன் மாடல்கள் என்ன என்பதை நாம் பார்ப்பொம்.
1 எம்பி ஆகட்டும் 64 ஜிபி ஆகட்டும் கார்ட் சைஸ் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் கார்ட்டின் கீழே கிளஸ் (Class) என்று போட்டிருக்கும் அது தான் முக்கியம்.
1. கிளாஸ் 2 - இந்த வகை எஸ் டி கார்ட்கள் அனேக சிறிய ரக மொபைல்களுக்கு போதுமானது. அதாவது சிறு சிறு ஜேப்பெக் புகைப்படங்கள் மற்றும் ஆடியோ எம்பி3க்கள் மற்றும் 3ஜிபி வீடியொக்களுக்கு இது போது மானது. இது தான் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடியது. ஹை ரெஸ்லுயூஷன் புகைப்படங்கள் அல்லது ரா இமேஜ் / டிஃப் / மற்றூம் 720 ஸ்டான்டர்ட் ஹெச் டி அல்லது 1080 ஹெச் டி வீடியோ வேண்டுபவர்கள் அடுத்த அடுத்த பகுதிக்கு தாவுங்க.
2. கிளாஸ் 4 - இந்த வகை எஸ்டி கார்ட்கள் தான் டிஜிட்டல் எஸ் எல் ஆர் கேமராக்களுக்கு ஆக பொருத்தமானது மட்டுமல்ல நல்ல 5 மெகாபிக்ஸல் கேமராவில் இருந்து 13 மெகாபிக்ஸல் கேமரா ஃபோன்கள் மற்றும் டிஜிட்டல் எஸ் எல் ஆரில் வீடியோ ( குறும்படம்) எடுப்பவர்களுக்கு இது சூப்பர் ஸ்பீட். ஹை குவாலிட்டி எம்பி3 பாட்டுக்கள் ஹை குவாலிட்டி கில்மா வீடியோக்களுக்கு இது பெர்ஃபெக்ட் வெர்ஷன். இது 40 எம்பி டேட்டாவை ஒரு நொடியில் எழுதும்.
3. கிளாஸ் 6 - இது ஸ்டில் கேமராவில் ஃபுல் ஹெச்டி எனப்படும் 2கே / 4 கே எடுப்பவர்களுக்கு சரியான ஒன்று. அதி வேக ஸ்டில்கள் ஆன ஹைஸ்பீட் ஷட்டர் செட்டிங் வைத்து எடுக்கும் பெரிய ரக போர்ட்ரேயிட் புகைப்பட கலைஞ்ர்களுக்கு இது தான் சரியான தேர்வு. இது 60 எம்பி டேட்டாவை ஒரு நொடிக்கு பதிவு செய்யும் திறன் படைத்தது.
4. கிளாஸ் 10 - இது ஃபுல் 4கே எனப்படும் 4:4:4 வீடியோ மற்றூம் திரைப்பட ஃபார்மெட்கள் மற்றூம் டார்கா இமேஜ்களுக்கு சரியான பார்ட்னர். 100 எம்பி வேகத்தில் ஒவ்வொரு நொடிக்கு வேலை செய்யும்.
இது போக Ultra High Speed (UHS) 1 / 3 என்னும் இரு வகை கார்ட்கள் உள்ளன இது பானாஃபிளக்ஸ் / ரெட் போன்ற கேமராவில் பெத்த ஃபார்மெட்டில் வீடியோ பதிவு செய்ய உபயோகபடும்.
கிளாஸ் 0 என்னும் எஸ்டி கார்ட்கள் இப்போது அதிகமாய் மார்க்கெட்டில் கிடைக்கிறது இது சப்பை மேட்டராக்கும். இதை வாங்குவதை விட சும்மாவே இருக்கலாம். அதனால் தான் சில டிஜிட்டல் எஸ் எல் ஆரில் சில கார்ட் வேலை செய்யாமல் இருப்பதை பார்த்து குழம்பி விடுவார்கள். இது போக SDSC / SDHC / SDXC இவ்வகை கார்ட்கள் இதே கிளாஸ் ரகம்தான் ஆயினும் இந்த ஃபார்மெட்டை சப்போர்ட் செய்யும் டிவைஸ்களில் தன் இந்த கார்ட்கள் வேலை செய்யும் ஆகா லேட்டஸ்ட்னு வாங்கினா வேலை செய்யாது ஏன் என்றால் உட்சபட்ச வேகத்தை குறிக்கும் கிளாஸ் போல மினிமம் ரைட்டிங் ஸ்பீட் 10எம்பி பெர் செகன்ட் உள்ள வேலைகள் இருந்தால் தான் இவ்வகை கார்ட்கள் வேலையே செய்யும்............கோவிந்தப்பன் நாய்க்கன் தெருவில ஃபெராரில 200 கிலோமீட்டர் போகனும்னு நினைக்கிறதும், ஆட்டோபான் ஹைவெயில் நானோவில் போகனும்னு நினைக்கிறது ஒன்று தான்.
அது போக மினி எஸ்டி கார்ட் உண்மையிலே வேற இரூக்கும் அதன் டம்மி எஸ்டி ஷெல் அல்லது எம் எம் சி ஷெல் அதிக கிளாஸ் மாதிரி காண்பிக்கும் டுபாக்கூர் கடைகளில் மினி எஸ்டியை பூத கண்ணாடி அல்லது போட்டோ எடுத்து ஜூம் செய்து உறுதி செய்த பிறகு வாங்குவது நல்லது.
Thanks - the one and only - Mr.Ravinag
Like   Comment   

புதன், 16 செப்டம்பர், 2015

காக்கும் கணபதி

காக்கும் கணபதி


காக்கும் கணபதி ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

ம்பிகையின்  சேயே
ரனின் புத்திரனே

ரங்கனின்
ளம்  கவர்ந்தோனே

கிலத்தை காப்பவனே
றிவின் சுடரே
ன்பின் வடிவமே

னந்தம் தருபவனே
ற்றல் மிக்கோனே

ன்னல் களைவோனே
ன்பம் தருபவனே


ன்ற பெற்றோரின் பெருமையை 
உலகிற்கு உணர்த்தியவனே 

டு இணையில்லா புகழ் 
கொண்டவனே 

லகத்தை
தாங்குவோனே

ழி முதல்வனே
க்கம் தருபவனே

ருக்கம் பூ மாலை அணிந்தோனே
ளியோரையும் காப்பவனே

க தந்தனே
று மயில்
வாகனனின்  சோதரனே

ற்றம் தருவோனே
க்கம் தீர்ப்போனே

யம்  அகற்றுபவனே

ன்றேயான
பரம்பொருளே

ம்கார பொருளோனே

ஒளடதமாய் விளங்கி
பிறவிப் பிணியை
தீர்ப்பவனே

                                                          Metal engraving- T.R.Pattabiraman 


துன்பம் துடைத்து 
வாழ்வில் இன்பம் அளிக்கும் 
கணபதியை துதித்து மகிழ்வோம் 
இந்நாளில் வாரீர். வாரீர். 


என்னுடைய பாடல் காணொளி. 


செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இசையும் நானும் (52)

Tuesday, September 15, 2015

இசையும் நானும் (52)

இசையும் நானும் (52)
இசையும் நானும் என்னும் தொடரின் என்னுடைய 52 வது காணொளி 
மவுதார்கன் இசை. 
"சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா "
படம்-கந்தன் கருணை. பாடலை இயற்றியவர்.-கவியரசு கண்ணதாசன் -இசை-கே வி. மகாதேவன்-பாடியவர்-இசைக்குயில் .சுசீலா. 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா
பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா
உலகிலாடும் தொட்டில் எல்லாம் உன் புகழ் பாடும் 
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும் 
யுகங்களெல்லாம் மாறி மாறி சந்திக்கும்போது 
உன் முக மலரின் அழகில் மட்டும் முதுமை வராது.கந்தா 
முதுமை வராது..குமரா.. 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
முருகனென்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் 
அழகன் எந்தன் குமாரனென்று மன மொழி கூறும் 
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும்போது 
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ 
கந்தா உன் அருளன்றோ ..குமரா  
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 
உள்ளமெல்லாம் உன்   பெயரை 
சொல்ல சொல்ல இனிக்குதடா  முருகா 

காணொளி இணைப்பு: