நான் கவிஞனுமில்லை
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-15)
அவர் என் பேரை ரிப்பேர் செய்தது
ஒரு பக்கம் இருக்கட்டும்
அவரை பற்றி பார்ப்போம்
அவர் என்னை விட வயதில் மூத்தவர்.
பணியில் பலவருட அனுபவமுள்ளவர்
ஏராளமான, பொதுமக்களையும் அதிகாரிகளையும்
தன் வாழ்நாளில் சந்தித்தவர்
அவருக்கு யாரை எங்கு எப்படி தட்டினால்
என்ன விழும் என்பது அத்துபடி
கொஞ்சம்கூட கூச்சமோ பயமோ இல்லாதவர்
யாரை வேண்டுமானாலும் அவர் எவ்வளவு கோபமாக
இவர் மீது இருந்தாலும் சில
நொடிகளில் சரி செய்து விடுவார்
மேலதிகாரிகள் பலர் முன்னிலையில்
அவரை மட்டமாக பேசினாலும் சிரித்துகொண்டே நிற்பார்
அதை சிறிதும் பொருட்படுத்தவே மாட்டார்
அந்த நேரத்தில் நாம் வாயை திறந்தால்
நிலைமை மோசமாகிவிடும் என்பதை அனுபவத்தில் அறிந்து வைத்திருந்ததால் அவர் வாயை திறக்கவே மாட்டார்.
சரியோ தவறோ வேலைகளை முடித்து விடுவார்
அவர் அக்கப்போர் பிடித்த ஆசாமியாதலால்
அவருக்கு முக்கியமான எந்த பொறுப்பும்
கொடுக்கப்படவில்லை .அதைப்பற்றி
அவரும் கவலைப்பட்டதில்லை
வெளி வேலைகளை எல்லாம் சளைக்காமல் செய்வார்.
அதனால் அலுவலர்கள் தங்கள் சுய லாபத்திற்கு அவரை பயன்படுத்தி கொண்டனர் .
அலுவலகத்திற்கு வெறும் கையோடுதான் வருவார்.
அலுவலக நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.
அன்று அவர் கையில் எவன் மாட்டுகிறானோ காலை டிபன் செலவு அவன் தலையில் விழுந்துவிடும்
அவர் பின்ணணி என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது
தான் அந்த மந்திரிக்கு சொந்தக்காரன் என்பார்.
அதேபோல் பெரிய இடங்களிலெல்லாம்
தனக்கு ஆட்கள் இருப்பதாக காட்டி கொள்வார் .
அதை சொல்லியே தன் காரியங்கள
சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியமும் அவருக்கு இருந்தது
அவர் இந்த துறையில் உள்ள பணிக்காலத்திற்கு
அவர் பதிவு பெற்ற அதிகாரியாக் ஆயிருக்கவேண்டும்
ஆனால் அவர் துரதிஷ்டம் அவர் பணியின் ஆரம்ப காலத்தில் ஏதோ தில்லுமுல்லு செய்து மாட்டி கொண்டதால்
நிரந்தரமாக பணியிறக்கம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்ப உத்திரவிடப்பட்டது
அவர் நீதிமன்ற தடையாணை பெற்று பல ஆண்டுகளாக கடைசிநிலையில் காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான் என்னை போன்ற ஏமாளிகளின்
கையாலாகாதனத்தினால் அவர் தன்வித்தையை காட்டி காசு பார்த்துக்கொண்டிருந்தார்.
என்ன செய்வது?
எனக்கோ இந்த உலகம் தெரியாது.
மக்களுடனும், சக அலுவலர்களுடனும், அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் எப்படி பழக வேண்டும் என்பதும் தெரியாது.
எவரிடம் எதை பேசவேண்டும் எப்படி பேசவேண்டும்,
எதையெல்லாம் பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றும்
தெரியாத மடமாக இருந்தேன்
அதனால் . மலைபோல பல துன்பங்களை அனுபவித்தேன்,
அரசு பணியில்திறமை மட்டும் போணியாகாது.
நேர்மையாக நடக்க நினைத்தால் சிறுமைப்பட தான் நேரிடும்
ஏனென்றால் மக்கள் நிர்வாணமாக திரியும் ஊரில்
கோமணம் கட்டியவன் கோமாளி என்ற பழமொழி
என் விஷயத்தில் உண்மையானது(இன்னும் வரும்)

நல்ல பழமொழி...
பதிலளிநீக்குதொடர்கிறேன்...