இந்த கதை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா?
எனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகனும் ?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
எனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகனும் ?
என்ன சொல்லு
இன்னிக்கு என்ன?
காந்தி பிறந்த நாள்
எந்த காந்தி ?
சோனியா காந்தியா ?
இல்லை
ராகுல் காந்தியா?
இல்லை
இந்திராகாந்தியா ?
இல்லை
சஞ்சய் காந்தியா ?
என்னப்பா எதற்கெடுத்தாலும் இல்லை என்கிறாய்.
அப்படி அந்த காந்தி யார் கொஞ்சம் சொல்லு?
அவர்தான் நம் நாட்டிற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து
சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்
அது சரி அதற்க்கு அவர் எவ்வளவு லஞ்சம் கொடுத்தார்?
அவருக்கு லஞ்சம் என்றால் பிடிக்காது அவர் நேர்மையானவர்
நேர்மை என்றால்என்ன ?
நேர்மை என்றால் எதையும்
ஒளிவு மறைவு இல்லாமல் சொல்வது, செய்வது
அது எப்படி முடியும். ?
அது அவரால் மட்டும் தான் முடியும்.
அவர் உயிரோடு இருந்தால் பிழைப்பு நடக்காது
அதனால்தால் சுதந்திரம் பெற்றபின்
அவர் கதையை முடித்துவிட்டார்கள்
இப்போது அவர் எங்கிருக்கிறார் ?
சிலைகளாக ,ரூபாய் நோட்டுக்களில் படமாக
,பள்ளிக்கூட புத்தகங்களில்,பாடமாக.
வெளிநாட்டுக்காரன் காந்தியாக நடித்து எடுத்த திரைப்படமாக,
அவரை பற்றிய மகாகவி பாடிய பாடல்களாக, இருக்கிறார்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்?
கேளு,சொல்றேன்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம்தேதி மட்டும்
அவர் படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து
,மலர்கள் தூவி, காந்தி குல்லா யுனிபார்ம் போட்டு
பூஜை செய்து கை கூப்பி பிரார்த்தனைகள் செய்கிறார்களே
அப்போது அவரிடம் என்ன வேண்டிக்கொள்கிறார்கள்
என்பது எனக்கு தெரிஞ்சாகனும் ?
ஒவ்வொருவர் பிரார்த்தனை
ஒவ்வொரு மாதிரி இருக்கும்
அது என்ன?
மத்திய அமைச்சர்கள்,மாநில முதலமைச்சர்கள், மற்றும் அமைச்சர்கள்:
காந்தி மகாத்மாவே, நீங்கள் மீண்டும் இந்த உலகத்தில் பிறந்து விடாதீர்கள். பிறந்தால் எங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும். நீங்கள் மது அரக்கனை ஒழித்தீர்கள். நாங்கள் மது அரக்கனுக்கு தீனி போடத்தான் மதுக்கடைகளை அரசு செலவிலேயே திறந்து மக்களனைவரையும் குடிமன்னர்களாக்கி அவர்களை எங்கள் பிடியில் வைத்துக்கொண்டு எங்கள் வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கிறோம்
.
குடிமகன்கள்:
காந்தி மகானே நீங்கள் மீண்டும் பிறந்து வந்து விடாதீர்கள்.நீங்கள் வாங்கி தந்த சுதந்திரத்தை எங்களை ஆளும் கொள்ளையர்களே பறித்து கொண்டு விட்டார்கள். எங்களால் வாழவும் முடியவில்லை சாகவும் சாகவும் முடியவில்லை. ஏதோ உழைத்து கிடைத்த காசில் கொஞ்சம் குடித்து விட்டு போதையில் மயங்கி கிடக்கிறோம். அதையும் கெடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டு விடாதீர்கள் என்று பணிவுடன் வேண்டிகொள்கிறோம்.
அரசியல்வாதிகள்/லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் :
காந்தி மகானே நீங்கள் பிறந்தால் உண்மை வெளிப்படும். எல்லாம் உண்மையாக இருக்கவேண்டும் எங்கள் பிழைப்பு நடக்காது ஆகவே நீங்கள் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள்
பன்னாட்டு நிறுவன முதலைகள்:
நீங்கள் மீண்டும் பிறந்தால் சுதேசி இயக்கம் முளைக்கும்.
அது எங்களுக்கு ஆபத்தாக முடியும். அகவே மீண்டும் பிறக்கும் எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள்.அப்படி நீங்கள் மீண்டும் பிறந்தால் எங்கள் செயற்கைகோள்கள் அதை எங்களுக்கு காட்டிகொடுத்துவிடும்
அப்புறம்?
அப்புறம் என்ன எங்களிடம் உள்ள ஆளில்லா விமானத்தை கொண்டு பிறக்கப்போகும் காந்தியை அழித்துவிடுவோம்.
இந்த கதை போதுமா ,இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஐயா போதுமடா சாமி,தலை சுத்துது
நீங்க போட்டுத் தாக்குங்க சார்-உண்மைகளை...
பதிலளிநீக்குநான் யாரையும்தாக்க விரும்பவில்லை
பதிலளிநீக்குபடிப்பவர்களின் மனதில் தாக்கத்தை
ஏற்படுத்தினால் போதும்