எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ?
தூக்கு தண்டனையை ரத்து செய்
ரத்து செய் என்கிறது ஒரு கூட்டம்
அனாகரீகங்களே நாகரீகங்கள் என்ற பெயரில்
உலா வரும் இந்த உலகில் இது போன்ற முழக்கங்கள்
ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்
சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கும் வரையில்
நமது நாடு முழுவதும் பெண்கள் துன்புறுத்தப்படுவது,
பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுவது
அதனால் அவர்கள் ஊடகங்கள்மூலம்
அசிங்கப்படுத்தப்படுவது இன்றைய
மேலை நாட்டு கலாசாரத்தின் வெளிப்பாடுகள்
வெளிநாட்டில் அவர்களுக்கு
அது சமூகத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட
விஷயம். பாதிக்கப்பட்டவர்கள்
அந்த விஷயத்தை பெரிதாக
எடுத்துகொள்ளவும் மாட்டார்கள்
ஏனெனில் அது அவர்கள் பருவ வயதை
தொடங்கும்போதே அந்த தொல்லை தொடங்கிவிடுகிறது.
ஆனால் நாம் நாட்டை போன்று,
பொத்தி வைத்த மல்லிகைபூ சமாச்சாரங்கள்
நிறைந்த நம் காலாசாரத்தில்
இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு
நாளும் புயலை கிளப்பி விடுகின்றன
ஒரு சம்பவம் நம்நாடு முழுவதும்
விளம்பரப்படுத்தப்பட்டவுடன் .
அத்தனை அரசியல் தலைவர்களும்
அதற்க்கு ஒரு சாயம் பூசி
ஆதாயம் தேடுபவர்கள் ஒரு பக்கம்
மாதர் அமைப்புகள்
அறிக்கை விடுவது ஒரு பக்கம்
ஆளும் கட்சி தலைவர்கள் அந்த இடத்திற்கு சென்று.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி
ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கும் நாடகம் அரங்கேறும்
சில நாட்களில் எல்லாம் அடங்கிவிடும்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர்
தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டு
மேலுலகம் சென்றுவிடுவார்.
அவர்கள் உடலும் அடக்கம் செய்யப்பட்டுவிடும்.
திரைப்பட கதாசிரியர்கள் இந்த சம்பவத்தை
ஒரு கதை பண்ணி . ஒரு குத்தாட்ட நடிகையை போட்டு
ஒரு புது முரட்டுத்தனமான வில்லனை போட்டு
கற்பழிப்பு காட்சிகளை வித விதமாக படம்பிடித்து
வெளியிட்டு காசு பார்த்துவிடுவார்கள்
கற்பழிப்பு என்றால் என்னவென்று
தெரியாத அத்தனை இளசுகளும்
வித விதமான் கற்பழிப்பு காட்சிகள்
படங்களில் பார்த்து அதை செயல்படுத்துவதில்
நல்ல பயிற்சி பெற்றுவிடுவார்கள்.
மாட்டிக்கொண்டால் போயிற்று.
மாட்டி கொள்ளாத காமுகர்கள் எத்தனையோ?
அரசியல் வாதிகள் வழக்கம்போல்
அவர்களின் செயலர்கள் எழுதிகொடுத்த
கீழ்கண்ட வசனங்களை தக்க முகபாவங்களுடன்
கொச்சை ஆங்கிலத்தில் அள்ளி விட்டு விட்டு
ரிட்டர்ன் டிக்கட் வாங்கி வந்த விமானத்தில்
பறந்து சென்று விடுவார்கள்
JUSTICE WILL BE DONE ,,,,,,,,,,SO AND SO TELLS FAMILY OF GANG RAPE VICTIM
..............SO AND SO EXPRESSED OUTRAGE AT THE GRUESOME CRIMES AGAINST WOMEN IN THE STATE AND ELSEWHERE AND DECLARED THAT THE GUILTY WOULD BE SEVERELY PUNISHED AND JUSTICE WILL BE DONE TO FAMILY
FURTHER...SO AND SO DENOUNCED SUCH ACTS AND CALLED FOR STRICT ACTION AGAINST THE PERPETRATORS OF SUCH A HEINOUS CRIMES.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ?
என்ன ?
அது சரி நீதி வழங்கப்படும் என்கிறார்களே அது என்ன நீதி?
நீதி வழங்கப்படும் என்றால் அந்த குடும்பத்திற்கு ஏதாவதி நிதி வழங்கி அவர்களை வாயை மூடப்படும். அவ்வளவுதான்
அதுசரி தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்கிறார்களே?அது என்ன?
அது யாருக்கும் தெரியாது. அப்படி தண்டனை வழங்கினாலும் அது பல நீதிமன்றங்களை கடந்து குற்றத்தை பார்த்தவர்கள் யாரும் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்துவிடுவார்கள்
சட்டம் என்ன சொல்கிறது என்றால் குற்றம் செய்பவனுக்கு குறைந்த பட்ச தண்டனையும் குற்றம் செய்ய தூண்டுபவனுக்கு அதிக பட்ச தண்டனையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறது
ஆனால் குற்றவாளிகள்தான் தண்டிக்கப்படுகிறார்கள்
கோடானுகோடி மக்களை குற்றம் செய்ய தூண்டும், திரைப்பட தயாரிப்பாளர்களையும், கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கும் நடிகர்,நடிகைகளையும், அந்த காட்சியை தன கதைகளில் புகுத்தி இன்பம் காணும் எழுத்தாளர்களையும் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
அதுதான் நம் நாட்டின் பண்பாடு
ஒவ்வொருத்தரும் என்னென்ன செய்வார்கள்...? என்பதை பட்டியல் சரியாக சொல்கிறது...
பதிலளிநீக்கு(நீதி - நிதி) இதற்கு மேல் உண்மை தெரிஞ்சி என்ன செய்ய...?
நல்ல பகிர்வு . விடை தேவை
பதிலளிநீக்குவருகைக்கும்
பதிலளிநீக்குகருத்துக்கும் நன்றி
திரு.DD மற்றும் திரு ஞானம் சேகர்.
நாம் நம் நாட்டை
அடிமைப்படுத்தியவர்களிடமிருந்து
சுதந்திரம் பெற்றோம்
ஆனால் அவர்கள் விட்டு
சென்ற அவர்கள்
நாட்டு கலாசாரத்திற்கு
நாம் அடிமையாகி விட்டோம்
அதன் விளைவுகள்தாம்
நம் சமுதாயம்
இன்று ஒழுக்ககேட்டின்
உச்சியில் நிற்கிறது
நாம் அவர்களிடமிருந்து
கற்று கொள்ளவேண்டியதை
ஒழுங்கு முறைகளை
கற்றுக்கொள்ளவில்லை
மாறாது ஒழுக்க கேடுகளை
மட்டும் நம்
வாழ்வின் அங்கமாக
ஆக்கிகொண்டுவிட்டோம்
அதன் விளைவுதான் இன்றைய
பெண்களின் இந்த அவல நிலை
பாரதி கண்ட பெண்களின் சுதந்திரம் வேறு
இன்று பெண்கள் அடைந்த சுதந்திரம்வேறு
போக பொருளாய்
ஆகும் பெண் வாழ்வில்
சோகம் புகுவது
தவிர்க்க முடியாது
ஆனால் எதுமே அறியாத
அப்பாவி பெண்கள்
அவர்களுக்காக
பலியாவதுதான் வருந்ததக்கது