சனி, 6 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-12)

நான் கவிஞனுமில்லை 
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-12)


என் நண்பன் என்று நினைத்துகொண்டிருப்பவன் 
என்னிடம் கூறிய தகவலை கேட்டதும்.
எனக்கு அதிர்ச்சியளித்தது 

ஏனென்றால் என் மீது போடப்பட்ட 
மொட்டை கடிதம்தொடர்பாகதான் 
அனைவரிடமும் அன்று விசாரணை நடத்தப்பட்டது
என்ற விவரம் தெரியாமல் நான் வழக்கம்போல் 
என் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்ததுதான் 

விசாரணையில் மொட்டை கடிதம் 
பொய்யென்று தெரிய வந்ததால் அப்போது தப்பித்தேன்.
அந்த மொட்டை  கடிதம் எழுதியநபர்  யாராக
இருக்கக்கூடும் என்ற சிந்தனை 
என் மனதில் நிழலாடிகொண்டிருந்தது.

ஒருநாள் என்னுடைய அலுவலக கட்டுப்பாட்டின் 
கீழ் இயங்கும் அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது .
அந்த அலுவலகத்தில் பல முறைகேடுகள் 
நடப்பதாக புகார் வந்ததால் அங்கு சென்று விவரங்களை 
அறிய முற்படுகையில் 
அங்கு இருக்கும் ஒருவன்தான் 
என் மீது மொட்டை  கடிதம் எழுதியதாக தெரிய வந்தது.
அதை அங்கிருக்கும் ஒருவன் எனக்கு தெரிவித்தான்.

மொட்டை கடிதம் போட்டவன். என்னுடன் 
நன்றாக பழகியவன் அவன் இப்படி செய்திருப்பான் 
என்று எனக்கு தெரியாது. 
மேலும் என் மீது போடப்பட்ட மொட்டைகடிதத்தின் 
நகலையும் அங்கிருப்பவன் அளித்தான் 
அதில் நான் லஞ்சம் வாங்கி ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் 
வீடு வாங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
மேலும் லஞ்சமாக பல நூறு ரூபாய்கள் தினமும் 
கல்லா கட்டுவதாகவும் .எழுதப்பட்டிருந்தது 

ஏற்கெனவே தெரிவித்தபடி, என் மனதில் தோன்றிய 
ஆசைகள் அனைத்தையும் குழி  தோண்டி புதைத்து விட்டு 
என் வருமானத்திற்குள் தான் வாழ்க்கை நடத்தவேண்டும்
என்ற வெறியுடன் நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது
எனக்கு இதுபோன்று நிகழ்ந்தது மிகவும் மன வேதனை அளித்தது  
இருந்தாலும் . என்ன செய்வது?

இனிமேல் இன்னும் கஷ்டப்பட்டு பணியாற்றவேண்டும் 
முக்கியமாக பணம் சம்பந்தப்பட்ட  எந்த கோப்பையும் 
உடனுக்குடனே பார்த்து அனுப்பிடவேண்டும் 
என்று முடிவெடுத்து என்னுடைய பிரிவுக்கு வந்தவுடன், 
எல்லாம் சரியாக இருந்தால் அனுமதித்தும், 
சரியாக இல்லைஎன்றால் காரணங்களை குறிப்பிட்டு 
திருப்பியும் ஒப்புதலுக்கு அனுப்பிவிடுவேன். 

என் மீது லஞ்ச பிரிவிற்குமொட்டை  கடிதம் போய்விட்டபடியால்
நாம் எவ்வளவு நேர்மையாக பணி  புரிந்தாலும் 
நம் மீது சந்தேக கண் கொண்டு பார்க்கும் அலுவலர்களை
நாம் ஒன்றும் குறை சொல்ல முடியாது என்று எனக்கு தெரியும்
நான் மிகவும்ஜாக்கிரதையாகவே செயல்பட்டேன் .

அப்படி இருந்தும் எனக்கு மீண்டும் என்னை சுற்றி
ஒரு சதி நடப்பதை நான் அறிய வில்லை (இன்னும்வரும்)

1 கருத்து:

  1. நம்மை கெடுக்க வெளி ஆட்கள் தேவையில்லை... அவர்கள் அப்படி செய்யவும் மாட்டார்கள்...

    கூடவே இருக்கிறார்களே... - நீங்கள் தொடருங்கள்... நானும் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு